The Door Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம door ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jaaidev direct பண்ண இந்த படத்துல bhavana , Ganesh Venkatram, Jayaprakash, Nandhu, Sriranjini, Kapil Velavan, and Priya Venkatலாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட concept ஒரு horror படமா குடுத்திருக்காங்க. 2010 ல வெளி வந்த asal படத்துக்கு அப்புறமா கிட்ட தட்ட 13 வருஷம் கழிச்சு இந்த படம் மூலமா comeback குடுத்திருக்காங்க னு தான் சொல்லியாகணும். இந்த படத்தை இவங்களோட husband naveen rajan தான் produce பண்ணிருக்காரு. அதோட இந்த படத்தோட டைரக்டர் வேற யாரும் கிடையாது bhavana ஓட தம்பி தான்.
இது bhavana ஓட 86 வது படம். இந்த படத்தோட poster அ இவங்க birthday ஆனா போன வருஷம் june 6 ஆம் தேதி release பண்ணிருந்தாங்க. varun உன்னி தான் இந்த படத்துக்கு music composer and goutham g தான் cinematography portions அ handle பண்ணிருக்காரு. முதல் ல இந்த படத்துல வேற ஒரு heroine நடிக்க வேண்டியதா இருந்தந்து ஒரு சில காரணத்துனால நானே இந்த படத்துல நடிச்சிட்டேன் னு பாவனா ஒரு interview ல சொல்லிருக்காங்க.
இந்த படத்தோட கதை என்னனு பாத்தீங்கன்னா பாவனா ஒரு construction site ல ஒர்க் பண்ணறாங்க. இவங்களுக்கும் இவங்களோட அப்பாக்கும் ஏதோ ஒரு சண்டை வருது அதுனால பேசாம இருக்காங்க. அப்போ தான் bhavana ஓட construction site ல ஒரு தடங்கல் வருது அதாவது அந்த எடத்துல ஒரு சின்ன கோவில் ஒன்னு இருக்கும் அதா இடிச்சிடுங்க னு பாவனா சொல்லறாங்க. அப்போ இவங்களுக்கு அப்பா கிட்ட இருந்து call வருது, ஆனா இவங்க attend பண்ணல மறுநாள் பாத்த இவங்களோட அப்பா மர்மமான முறை ல இறந்து கிடக்குறாங்க. இந்த phase ல இருந்து மீண்டு வரதுக்கு ஒரு break எடுக்கறாங்க. அப்புறம் மறுபடியும் construction site க்கு போய் வேலை பாக்க ஆரம்பிக்குறாங்க. அந்த கோவில் இடிச்சதுக்கு அப்புறம் ஏதோ ஒரு அமோனிஷ்யாம ஒரு சத்தம் கேட்குது. இந்த sound effects லாம் ரொம்ப super அ இருந்தது. இதுக்கு அப்புறம் இவங்களுக்கு ஏதோ ஒரு பொண்ணு அழகுற சத்தம் கேட்குது அது என்னனு பாக்கும் போது மாயமா மறஞ்சுடுது. பாவனா ஓட native மதுரை தான் construction க்காக சென்னை ல ஒரு room ல தங்கிட்டு இருப்பாங்க. இங்கயும் நெறய விஷயங்களை பாக்குறாங்க ஆனா நம்ப மறுக்கறாங்க அதுக்கு காரணம் இவங்களுக்கு சாமி பக்தியும் சரி மூட நம்பிக்கை மேலையும் பெருசா அபிப்ராயம் கிடையாது. இந்த பேய் க்கும் பாவனா க்கும் என்ன சம்பந்தம்? இந்த பேய் தான் பாவனா ஓட அப்பாவை கொன்னுச்சா ? இந்த பேய் முதல யாரு ன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ற விதமா இந்த door திரைப்படம் அமைச்சிருக்கு.
படத்தோட ஆரம்பத்துல இருந்து முடிவு வரைக்கும் ரொம்ப interesting அ கதையை எடுத்துட்டு போயிருக்காங்க. படத்தோட direction அ பாக்கும் போது எந்த distractions யும் இல்லாம ரொம்ப straight forward அ கதையை மக்கள் க்கு குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். இந்த படத்தோட highlight அ இருக்கற scenes ந அது கண்டிப்பா preclimax யும் climax scenes யும் தான். இன்னொரு விஷயம் என்னனா sound mixing தான். horror concept க்கு ஏத்த மாதிரி அருமையான sound effects அ குடுத்திருத்தங்க. vfx லாம் கூட ரொம்ப கம்மியா தான் இந்த படத்துல use பண்ணிருக்காங்க. நெறய scenes பயமுறுத்தற மாதிரியும் திகிலா வும் இருக்குனு தான் சொல்லணும்.
மொத்தத்துல ஒரு thrilling ஆனா horror படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க. உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாருங்க.
No comments:
Post a Comment