Featured post

Tamil Survival Drama Gevi Officially Enters the Race for the 98th Academy Awards (Oscars 2026

 Tamil Survival Drama Gevi Officially Enters the Race for the 98th Academy Awards (Oscars 2026) In a significant milestone for Indian cinema...

Thursday, 13 March 2025

பல விருதுகள் குவித்த 'மெளன வதம்' குறும்படம் 'விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்'

 *பல விருதுகள் குவித்த 'மெளன வதம்' குறும்படம் 'விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்' யூடியூப் சேனலில் வெளியீடு!*



எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த 'மெளன வதம்' குறும்படம் சென்னை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல், இந்தியன் பனோரமா இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் மற்றும் 18 ஆம் மும்பை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் போன்ற பல பிலிம் ஃபெஸ்டிவலில் விருதுகள் பெற்றுள்ளது. இந்த குறும்படம் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதியின் யூடியூப் சேனலில் வெளியாகிறது. 


இப்படத்தை அமிர்த்தராஜா இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் பாலாஜி தரணிதரனின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' மற்றும் 'ஒரு பக்க கதை' போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். சீதக்காதி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சரஸ்காந்த் கண்ணையன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 'முகிழ்' மற்றூம் 'அயலி' பட இசையமைப்பாளர் ரேவா இசை அமைத்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், 96, சீதக்காதி மற்றும் மெய்யழகன் போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு மேற்கொண்ட ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.'பாக்கெட் மணி பிலிம்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது.

No comments:

Post a Comment