Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Wednesday, 30 April 2025

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bhogi, Announcement Video Spellbinds, Regular Shoot Commences Today



For the first time ever, charismatic star Sharwa and blockbuster maker Sampath Nandi come together for an ambitious Pan-India spectacle – #Sharwa38. The film is produced by KK Radhamohan under the Sri Sathya Sai Arts banner and presented by Lakshmi Radhamohan. Set against the raw, volatile backdrop of the 1960s, Bhogi promises a cinematic experience brimming with grit, grandeur, and gripping storytelling. The film’s title was revealed through a powerful concept video, aptly named First Spark, igniting intrigue and anticipation.


The video unveils the film’s essence as director Sampath Nandi narrates a tale steeped in destiny, fire, and transformation. As Sharwa immerses himself in the narrative, he envisions a world forged in conflict and courage. A symbolic gesture — a sword exchanged — seals the pact. Thus, Bhogi is born. A title that resonates with tradition yet heralds rebellion; a metaphorical festival where the old is set ablaze and something fierce rises from the ashes. Sharwa, transformed in both physique and spirit, steps into a role sculpted from steel and soul.


Principal photography begins today on a grand scale with a colossal set constructed in Hyderabad, portions of which were showcased in the concept video. The production team dedicated six months to bringing this vision to life, transforming nearly 20 acres of land into a breathtaking backdrop.


The film features Anupama Parameswaran and Dimple Hayathi as the leading ladies, both playing roles rich in substance and performance potential.


With an expansive production canvas and a vintage setting rooted in the 1960s North Telangana–Maharashtra region, Bhogi will boast top-tier technical excellence. Kiran Kumar Manne joins as the art director, while the cinematographer, music director, and editor will be announced shortly.


Poised for a wide release in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi, Bhogi is not just a film — it’s a fiery celebration of spirit, strength, and storytelling.


Cast: Charming Star Sharwa, Anupama Parameswaran, Dimple Hayathi


Technical Crew:

Writer, Director: Sampath Nandi

Producer: KK Radhamohan

Banner: Sri Sathya Sai Arts

Presents: Lakshmi Radhamohan

Art Director: Kiran Kumar Manne

PRO: Sathish Kumar S2 Media 


 #Sharwa38 First Spark out now


— https://youtu.be/JGAQw158-wI

சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

 *சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38  “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது*

சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும்  பான் இந்தியா திரைப்படம் #Sharwa38  போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி  அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

பிரபல நட்சத்திர நடிகர் ஷர்வா மற்றும் ஹிட் இயக்குநர் சம்பத் நந்தி இருவரும், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் KK ராதாமோகன்  தயாரிக்க, லக்ஷ்மி ராதாமோகன் வழங்கும், மிக முக்கியமான பான் இந்தியா திரைப்படமான,  “போகி” — #Sharwa38இல் முதல் முறையாக இணைந்துள்ளனர். 1960 களின்  பரபரப்பான பின்னணியில் அதிரடி ஆக்சனுடன்,  விறுவிறுப்பும் உணர்ச்சியும் நிரம்பிய ஓர் புதிய  அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. ஃபர்ஸ்ட் ஸ்பார்க் எனப் பெயரிட்டப்பட்ட அசத்தல் அறிமுக வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  


ஃபர்ஸ்ட் ஸ்பார்க் வீடியோ, 1960களின் வட தெலுங்கானா – மகாராஷ்டிரா பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தக்கதையின் மையத்தை மிக வித்தியாசமாக விவரிக்கிறது.  இயக்குநர் சம்பத் நந்தி வித்தியாசமான முறையில் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளார். ஷர்வா இதுவரை இல்லாத மிரட்டலான தோற்றத்தில், காட்சியளிக்கிறார். 

பழையதை எரித்து புதியதை துவங்கியது தீயின் எழுச்சியை குறிக்கும் தீபாவளி நன்நாளான போகியின் உணர்வுகளை இந்த வீடியோ வழங்குகிறது. 


இன்று ஹைதராபாத்தில் கிரண் குமார் மன்னே கலை இயக்கத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட பிரமாண்ட செட்டில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த பிரமாண்டமான  செட்டை 6 மாதங்கள் உழைத்து,  தயாரிப்பு குழு  உருவாக்கியுள்ளது.


இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாத்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகும் போகி, இந்திய திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர்கள்: 

சார்மிங் ஸ்டார் ஷர்வா, அனுபமா பரமேஸ்வரன், டிம்பிள் ஹயாத்தி


தொழில்நுட்பக் குழு: 

எழுத்தாளர், இயக்கம் : சம்பத் நந்தி தயாரிப்பாளர்: கே.கே.ராதாமோகன் 

பேனர்: ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் 

வழங்குபவர்: லட்சுமி ராதாமோகன் 

கலை இயக்குனர்: கிரண் குமார் மன்னே 

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் S2 Media






Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளது!!*

 *Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை  பெற்று சாதனை படைத்துள்ளது!!*



இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது. 


உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் YouTube சேனல், Sun TV, தற்போது 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது.


இந்த சாதனையில் ஆச்சரியம் ஏதுமில்லை ஏனெனில் Sun TVயின் YouTube சேனலில் தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன! இதில் Sun TVயில் ஒளிபரப்பப்படும் பல பிரபலமான நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் அடங்கியுள்ளன, உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை, இந்த நிகழ்ச்சிகள் ஈர்த்து வருகின்றன.


இதற்கு மேலாக, Sun Pictures தயாரிக்கும் திரைப்படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் மற்றும் டீசர்களும் இந்த பிரபலமான நெட்வொர்கின் YouTube சேனலில் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன.


Sun TV YouTube சேனலில் பல வீடியோக்கள் பல  வாரங்களாக டிரெண்டாகி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது! உதாரணமாக, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலும், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலும் இதில் குறிப்பிடத்தக்கவை. இதில் முன்னோடியான ‘அரபிக் குத்து’ பாடல் 700 மில்லியன் பார்வைகளைத் தாண்டியது, ‘காவாலா’ பாடல் 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது!


உலகளாவிய அளவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களைக் கொண்டுள்ள Sun TV YouTube சேனல், தினமும் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய ஃபாலோயர்ஸை இணைத்துக் கொண்டு, ஏற்கனவே இணைந்திருக்கும் ரசிகர்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்தி வருகின்றது.


Sun TV YouTube சேனலின் இணைப்பு - https://www.youtube.com/@suntv


Tourist Family Movie Review

Tourist Family Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம sasikumar simran நடிப்புல வெளி வந்த tourist family ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை abhishan jeevinth தான் இயக்கி இருக்காரு. வாங்க இந்த படத்தோட கதையை பாப்போம். dharmadas அ நடிச்சிருக்க sasikkumar யும் vasanthy அ நடிச்சிருக்க simran யும் husband and wife அ இருப்பாங்க.

 இவங்களுக்கு ரெண்டு பசங்க இருப்பாங்க. அவங்க தான் nithushan அ நடிச்சிருக்க mithun jai shankar அப்புறம் mulli அ நடிச்சிருக்க kamalesh jegan . இவங்க srilanka ல இருந்து tamilnadu க்கு வந்து தஞ்சம் அடைச்சிருப்பாங்க. சென்னை ல settle ஆகி ஒரு நல்ல life அ அமைச்சுக்கலாம் ன்ற ஒரு ஆசை ல இருப்பாங்க. எல்லாமே நல்ல படிய போயிடு இருக்கும் போது தான் rameshwaram ல நடக்கற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் இவங்க குடும்பத்தோட connect ஆகுது. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

வாழக்கை ல நடக்கற பல விஷயங்கள் எதிர்பாக்காதது தான். ஒரு சில சம்பவங்கள் நம்ம வாழ்க்கைல நடக்கும் போது இப்படி லாம் வேற நடக்குமா னு நமக்கு தோணும். திடீருனு ஒரு பிரச்சனை பெருசா தெரியும் ஆனா சுலபமா முடிஞ்சுரும். ஆனா மனுஷங்களா ஆனா நம்ம தான் நெறய பிரச்சனைகளை பெருசா பாத்து பயந்து போறோம் . இந்த aspect அ தான் director இந்த படத்துல காமிச்சிருக்காரு. ஒரு teenage பொண்ணு தன்னோட boyfriend அவளோட friend கூட cheat பண்ணிட்டுருக்க னு தெறிய வருது. இன்னொரு teenage பையன் தன்னோட girlfriend இன்னொரு பையன கல்யாணம் பண்ணிக்கிறதா பாத்து மனசுடைஞ்சு போயிடுறேன். அப்புறம் ஒரு பாட்டி இறந்திருப்பாங்க, அவங்களோட இறுதி சடங்கு முடிஞ்சு கொஞ்சம் நாள் கழிச்சு சாமி கும்புடுறாங்க. இதெல்லாம் பாக்கும் போது கொஞ்சம் sentimental அ அதே சமயம் கவலைய தான் இருக்கும். ஆனா அடுத்த shot பாத்தீங்கன்னா comedy அ light அ படத்தை எடுத்துட்டு போயிருக்காங்க. 


படத்தோட teaser எங்க நின்னுச்சோ அதுல இருந்து தான் படம் ஆரம்பிக்குது. இந்த படத்தோட teaser அ நீங்க இன்னும் பாக்கலான கண்டிப்பா போய் பாருங்க. தமிழ்நாடு க்கு 4 பேரு இருக்கற family வராங்க. இவங்கள police பிடிக்குது, இருந்தாலும் ஒரு நல்ல  போலீஸ் officer இந்த குடும்பத்தை பத்தி புரிஞ்சுகிட்டு விட்டுடுடாறு. dharmadas யும் அவரோட குடும்பமும் ஒரு எடத்துல வந்து settle ஆகுறாக. இவங்க வீடு பக்கத்துல நடக்கற விஷயங்களை பாக்குறாங்க. அது என்னனா விஷயங்கள்னு பாத்தீங்கன்னா வயசான ஜோடி ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கறாங்க. ஒருத்தன் அவன்கிட்ட வேலை பாக்குற ஆட்கள் க்கு ஒழுங்கா சம்பளம் குடுக்கலானாலும் அவங்க எல்லாரையும் நல்ல முறைல மரியாதையோட கவனிச்சிக்கறா. ஒரு police officer குடும்பம் மும் இருக்கு. அதோட ஒரு punjabi குடும்பமும் settle ஆகிறுக்கங்க. dharmadas  ஓட பையனான mulli  daily  யும் ஒரு teacher  கூட்டிட்டு போயிடு கூட்டிட்டு வராங்க. இந்த மாதிரி different  அ எல்லாரோட segment யும் படத்துல காமிச்சிருக்கறது ரொம்ப அழகா இருந்தது. 


படத்துல நடிச்சிருக்க அதனை பேரும் அவங்களோட நடிப்பை ரொம்ப அழகா வெளி படுத்திருக்காங்க. இந்த படத்துல ரொம்ப special  ஆனா scene  அ தான் அது dharmadas யும் அவரோட பையன் nithushan ஓட bonding தான். அப்புறம் mulli  ஓட குழந்தைத்தனம் ரொம்ப cute அ இருந்தது. மனிதாபிமானம் ன்றது எவ்ளோ முக்கியம் அந்த மாதிரி நடந்துக்கிட்ட நம்மளும் நம்ம சுத்தி இருக்கறவங்களையும் சந்தோசமா வைச்சுக்கலாம் ன்றது தான் இந்த படத்தோட உட்கருத்து னே சொல்லலாம். ஒரு family srilanka ல இருந்து வந்திருக்காங்க. என்னதான் police இவங்கள பிடிச்சாலும் rules எல்லாம்  பாக்காம மனிதாபிமானதோட இவங்கள விட்டுருவாரு. இந்த குடும்பம் settle  ஆகுற இடத்துக்கு பக்கத்துல இருக்கறவங்க எல்லாருமே வேற வேற. இவங்களோட status எல்லாமே விதயசயமானது இருந்தாலும் அன்போட நடந்திருக்கிறது தான் முக்கியம் ன்றதா இந்த படத்துல காமிச்சிருக்காங்க. abhishan அ ஒரு character அ நடிச்சிருக்காரு. இவரு ரொம்ப அமைதியா இருப்பாரு. கதை போக போக தான் இவரோட character அ புரிஞ்சுக்க முடியும். சாப்பிட்டீங்களா னு ஒரு வார்த்தை கேட்பாரு. அதுவே ஒரு postitive vibe அ இருக்கும். 


இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் தான் நம்மோட மனச வருடுது னு சொல்லலாம். sasikumar and simran ஓட நடிப்பு super அ இருந்தது. இவங்களுக்கு பசங்கள நடிச்ச ரெண்டு பேரோட acting யும் பக்காவா இருந்தது. Yogi Babu, Ramesh Thilak, Ilango Kumaravel, MS Bhaskar அப்புறம்  Bagavathi Perumal வர scenes லாம் செமயா  இருந்தது. மொத்தத்துல simple ஆனா family ட்ராமா படம் தான் இது. நாட்டுல நடக்கற விஷயங்களை பத்தி சொல்லி இருந்தாலும் அதா பட்டும்  படாத மாதிரி சொல்லிருக்கற விதம் தான் இந்த படத்தோட அழகு. இது must watch movie னு தான் சொல்லுவேன். கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணாம பாருங்க.

Tuesday, 29 April 2025

Man of Masses NTR, Maverick Prashanth Neel, Mythri Movie Makers and NTR Arts' action

 *Man of Masses NTR, Maverick Prashanth Neel, Mythri Movie Makers and NTR Arts' action epic "NTRNeel," Releasing Worldwide on June 25th, 2026*



Man of Masses NTR, known for the massive craze around the globe, joined hands with maverick filmmaker Prasanth Neel, who delivered sensational blockbusters like the KGF series and Salaar. The film, tentatively titled NTRNeel, was launched long ago and has been highly anticipated by fans. The filming of this highly anticipated project is progressing at brisk pace.


The excitement surrounding this collaboration has been building up. The makers have finally revealed the much-anticipated release date for NTRNeel. Directed by Prashanth Neel, this action-packed epic is set to hit theaters on June 25th, 2026. Fans are eagerly awaiting the film's arrival, as it will be released in multiple languages including Telugu, Tamil, Hindi, Kannada, Malayalam, and others, ensuring a wide reach across audiences.


The film has been highly anticipated, with fans looking forward to seeing NTR in a powerful role, as envisioned by Prashanth Neel. NTRNeel promises to deliver a thrilling combination of intense action and a captivating storyline, making it one of the most exciting releases of the year. The team has carefully chosen the perfect release date to unleash this action-packed storm in cinemas.


Prashanth Neel, renowned for his blockbuster hits, is expected to bring his unique mass vision to this project, elevating NTR's on-screen persona to new heights. The dynamic collaboration of NTR and Neel is sure to set new benchmarks in the industry. The film will be produced by the prestigious production houses Mythri Movie Makers and NTR Arts, promising a cinematic spectacle.


The film is bankrolled by Kalyan Ram Nandamuri, Naveen Yerneni, Ravi Shankar Yalamanchili, and Hari Krishna Kosaraju under Mythri Movie Makers and NTR arts banner. Bhuvan Gowda will handle the cinematography, while the sensational Ravi Basrur will score the music. Production design will be managed by Chalapathi. This monumental project brings together talented and ace technicians to create a mass cinematic extravaganza.


Cast: Man of Masses NTR


Technical Team:

Production Design - Chalapathi

DOP - Bhuvan Gowda

Music - Ravi Basrur

Producers - Kalyan Ram Nandamuri, Naveen Yerneni, Ravi Shankar Yalamanchili, Hari Krishna Kosaraju

Written and Directed by - Prashanth Neel

*’மேன் ஆஃப் மாஸ்’ நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும்

 *’மேன் ஆஃப் மாஸ்’ நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்' திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 25, 2026 அன்று வெளியாகிறது!*



‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 


அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 25, 2026 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. 


பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் பிரஷாந்த் நீல் இந்தப் புதிய படத்தில் என்.டி.ஆருக்கு இன்னும் அதிக மாஸ் சேர்க்க உள்ளார். மதிப்புமிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய திரை அனுபவத்தை கொடுக்கும். 


மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கோசரராஜு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக சலபதி பணிபுரிகிறார்.


*தொழில்நுட்ப குழு:*

தயாரிப்பு வடிவமைப்பு: சலபதி,

ஒளிப்பதிவாளர்: புவன் கவுடா,

இசை: ரவி பஸ்ரூர்,

தயாரிப்பாளர்கள்: கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிருஷ்ணா கோசராஜு,

எழுத்து மற்றும் இயக்கம்: பிரசாந்த் நீல்

தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலா நடித்த " கிஸ்

 தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலா நடித்த " கிஸ்  " 















இளமை ததும்பும் காதல் கதை ஸ்ரீ லீலா நடிக்கும் " கிஸ் மி இடியட் " 


நாகன் பிக்ச்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க ஸ்ரீ லீலா நாயகியாக நடிக்கும் படம் " கிஸ் மீ இடியட் " 


ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள்  ஓடி வசூல் சாதனை படைத்த " கிஸ்  " படம்  தமிழில்    " கிஸ் மீ இடியட் " என்ற பெயரில்  ரீமேக் செய்யப்படுகிறது.


கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். மற்றும்  ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.


ஒளிப்பதிவு - ஜெய்சங்கர் ராமலிங்கம் 

இசை - பிரகாஷ் நிக்கி 

பாடல்கள் - மணிமாறன் 


கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய A.P.அர்ஜுன்  தமிழிலும் இயக்குகிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு    23-04-2025 அன்று பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


ஸ்ரீ லீலா தெலுங்கு,கன்னடம் , இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தாலும் தமிழுக்கு இதுவே முதல் படம். இவர் நடித்த புஷ்பா 2 சினிமா வரலாற்றிலேயே ஒரு மைல் கல்லாக வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்தது. இவர் அல்லு அர்ஜுன்,மகேஷ் பாபு ,ரவி தேஜா ,புனித் ராஜ்குமார், பாலகிருஷ்ணா ,ராம் பொத்தினேனி , நிதின் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுதா கொங்கரா  இயக்கத்தில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்துவருக்கிறார்.


செண்டிமெண்ட் கலந்த

இளமை ததும்பும் காதல் கதையாக "  கிஸ் மி இடியட் " உருவாகி வருகிறது.

Sandalwood dynamo Vijay Kumar On Board For An Electrifying Role In Vijay Sethupathi

 *Sandalwood dynamo Vijay Kumar On Board For An Electrifying Role In Vijay Sethupathi, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects’ Most Ambitious Pan India Project!*



Dashing Director Puri Jagannadh is all set to shake up Indian cinema once again with his upcoming Pan-India spectacle, featuring a stellar cast led by Vijay Sethupathi. Yesteryear actress Tabu is set to play a pivotal role in this ambitious project, produced by Puri Jagannadh and Charmme Kaur under the Puri Connects banner.


The latest addition to the film is Sandalwood dynamo Vijay Kumar, known for his magnetic screen presence and high-octane performances.It is worth mentioning that Vijay Kumar had enthralled audiences with his mind blowing performance in Veera Simha Reddy. He is back now to deliver yet another promising performance in this film.


Vijay Sethupathi will play a dashing role that breaks new ground even for his celebrated career. Tabu, making a powerful return to Tamil, Telugu cinema, plays a pivotal character that is central to the story’s emotional core. And now, with Vijay Kumar stepping in, we can expect fireworks as the Kannada superstar brings his raw intensity to the mix in an electrifying role.


With a story penned by Puri himself, the film promises a pulsating narrative packed with drama, action, and emotion. It is slated for a multilingual release across Tamil, Telugu Kannada, Malayalam, and Hindi languages.


The film’s regular shoot commences from June.


Cast: Vijay Sethupathi, Tabu, Vijay Kumar


Technical Crew:

Writer, Director: Puri Jagannadh

Producers: Puri Jagannadh, Charmme Kaur

Banner: Puri Connects

CEO: Vishu Reddy

PRO: Yuvraaj 

Marketing: Haashtag Media

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும்

 *'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்*




இயக்குநர் பூரி ஜெகன்னாத்- 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர  தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 


தற்போது இந்தத் திரைப்படத்தில் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய்குமார் இணைந்திருக்கிறார். 'வீர சிம்ஹா ரெட்டி' படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது.‌ இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர்.


விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார். இவர்களுடன் விஜய் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான இவர் .. தன்னுடைய புதிய தோற்றத்தில் மின்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதால்... பல  அற்புதமான தருணங்களை எதிர்பார்க்கலாம். 


பூரி எழுதிய கதையுடன் டிராமா -அதிரடி ஆக்சன் - உணர்வுபூர்வமான காட்சிகளைக் கொண்ட துடிப்பான படைப்பு - என இப்படம் உறுதி அளிக்கிறது.  இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 


இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.


நடிகர்கள் :

விஜய் சேதுபதி, தபு ,விஜய்குமார் 


தொழில்நுட்பக் குழு : 

எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்னாத் 

தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்னாத் - சார்மி கவுர்  

தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் 

தலைமை நிர்வாக அதிகாரி : விஷு ரெட்டி 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா

இன்று கல்லூரிக்கு செல்பவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம்

 இன்று கல்லூரிக்கு செல்பவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் - ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ இசை வெளியீட்டு விழாவில் பேரரசு பேச்சு












வாழ்க்கையில் முன்னேறும் ஒவ்வொரு பெண்களும் பாரதியின் கண்ணம்மா தான் - ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு


பேருந்து நடத்துனராக பணியாற்றிய நான் ரஜிகாந்தை போல் சினிமாவில் சாதிக்க நினைத்தேன் - ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ பட இயக்குநரின் லட்சியப் பயணம்


போதைக்கு அடிமையாகும் இளைஞர்களால் அந்த நாடே அழிந்துவிடும் - ‘ஐ.ஏ.எஸ். கண்ணம்மா’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை கோமல் சர்மா பேச்சு


தாயப்பசுவாமி பிலிம்ஸ் சார்பில் தா.ராஜசோழன் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’. இதில் கதையின் நாயகியாக பிரின்ஸி நடிக்க, முக்கியமான வேடத்தில் தா.ராஜசோழன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆட்டுக்குட்டி புரூஸ்லி, கோவை ஆறுமுகம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.


அரவிந்த் பாபு இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கேசவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராம்நாத் படத்தொகுப்பு செய்ய, பழனிவேல் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். கபிலன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, நிரோஷான் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எஸ்.எம்.முருகேசன் மேலாளராக பணியாற்ற, காந்தி புகைப்படக் கலைஞராக பணியாற்றியுள்ளார். நா. விஜய் மக்கள் தொடர்பாளராக அறிமுகமாகியுள்ளார். 


வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ திரைப்படத்தின் இசை மற்றும் முனோட்ட வெளியீட்டு விழா ஏப்ரல் 28 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் சங்க செயலாளர் பேரரசு, பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, செயலாளர் ஜான், நடிகை கோமல் சர்மா, ‘சாமானிய’ பட இயக்குநர் ராகேஷ், ரூபன் பட நாயகன் விஜய் பிரசாத், இயக்குநர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். 


நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தா.ராஜசோழன் பேசுகையில், “நான் ஒரு எழுத்தாளன், கவிஞன். சினிமாவுக்காக நான் கொஞ்சம் நஞ்சம் கட்டப்படவில்லை. சினிமாவில் அனைவரும் கஷ்ட்டப்படுவார்கள். ஆனால், நான் சினிமாவில் நுழைவதற்கே ரொம்ப கஷ்ட்டப்பட்டு விட்டேன். பேரரசு சாரிடம் உதவி இயக்குநராக சேர முயற்சித்தேன், ஆனால் அது முடியாமல் போய்விட்டது. சினிமா என்ற கோவிலின் மதில் சுவர் பக்கம் கூட என்னை அனுமதிக்கவில்லை. தருமபுரியில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தேன், அங்கே பணி முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடுவேன், பிறகு மீண்டும் தருமபுரி சென்று பணியாற்றுவேன். குடும்பத்தையும் பார்க்க வேண்டும், இப்படி பல வேலைகள் இருந்தும், சினிமாவுக்காக தொடர்ந்து முயற்சித்து தோற்றுப் போனேன். பிறகு எழுத்துலகில் பயணிக்க தொடங்கினேன். அதன்படி என்னை தமிழ் வாழ வைத்தது. என்னிடம் தமிழ்ச் சங்கங்கள் கவிதை கேட்டார்கள், அனைவரிடம் கேட்பார்கள், அதுபோல் என்னிடம் கேட்ட போது, நான் அவர்களுக்கு கவிதை எழுதி கொடுத்தே, அதை அவர்கள் வெளியிட்டார்கள். பிறகு தீர்த்தமலை என்ற சிவன் மலைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். பிறகு மருத்துவ குறிப்பு, கவிதை தொகுப்பு என்று எழுதினேன், அனைத்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 


குடும்ப சூழ்நிலைக்காக நடத்துனராக பணியில் சேர்ந்தேன், சிறிது காலத்திற்குப் பிறகு வேலையை விட்டு விட்டு சினிமாவுக்கு ஜம்ப் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அது முடியவில்லை. அதேபோல் நடத்துனர் வேலையையும் காப்பாற்றிக் கொள்ள ரொம்ப போராட வேண்டியதாயிற்று. இப்படி வாழ்க்கை போன போது, சினிமா ஆசை என்னை விடவில்லை. எதாவது செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்தேன். இந்த சினிமாவுக்காக என் குடும்பத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நிறைய ஏமாந்திருக்கிறேன், ஆனால் நான் யாரையும் இதுவரை ஏமாற்றவில்லை. உலகத்திலேயே எந்த துறையிலும் கிடைக்காத அனுபவம் எனக்கு நடத்துனர் துறையில் கிடைத்தது. வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம் ஆயுள் குறைந்துக் கொண்டே வருகிறது, அதற்குள் எதாவது சாதிக்க வேண்டும். எனவே சினிமாவில் சாதிக்க வேண்டும், என்று முடிவு செய்தேன். அதற்காக இரண்டு குறும்படங்கள் எடுத்தேன். இப்போது ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்திருப்பதோடு, நடிக்கவும் செய்திருக்கிறேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. ஆனால், நான் இப்படி ஒரு படத்தை இயக்குவதற்கு ‘ரூபன்’ படத்தின் இயக்குநர் ஐயப்பன் தான் காரணம். நான் இங்கு நிற்க அவர் தான் காரணம். நான் இந்த படத்தை இயக்கினாலும், என்னை இயக்கியது ஐயப்பன் தான், அவர் வயதில் இளையவராக இருந்தாலும், எனக்கு அவர் தான் குரு, அவரை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்.


திருக்கோவிலூரில் தமிழ்ச் சங்கத்தில் இருந்து சிறுகதை கேட்டார்கள். அவர்களுக்காக எழுதிய சிறுகதை நல்ல வரவேற்பு பெற்றது. நான் ஓட்டுனராக பணியாற்றும் போது பேருந்தில் பயணிக்கும் சில வாத்தியார்கள் அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்று படிப்பதோடு, பள்ளியில் பாடமாகவும் நடத்துவார்கள். அப்போது தான் இந்த கதையை படமாக எடுக்க முடிவு செய்தேன். பெண் கல்வி மற்றும் போதைப் பழக்கம் இது இரண்டையும் வைத்து தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன்.  உங்கள் அன்பும், ஆதரவும் இருந்தால் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை எடுக்க இருக்கிறேன், நன்றி.” என்றார்.


நடிகர் ஆட்டுக்குட்டி என்கிற புரூஸ்லி பேசுகையில், “எனக்கு இந்த படத்தில் நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கும் எங்கள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். அடுத்தடுத்து அவர் படங்கள் பண்ண வேண்டும், எங்கள் ஐ.ஏ.எஸ் கண்ணம்மா படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.


இசையமைப்பாளர் அரவிந்த் பாபு பேசுகையில், “ஒரு நல்ல திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறேன் என்ற கர்வம் எனக்கு இந்த படத்தின் மூலம் வந்திருக்கிறது. இன்று எப்படி எப்படியோ படம் எடுக்கும் சூழ்நிலையில், இப்படியும் படம் எடுக்கலாம் என்று ராஜசோழன் சார் காண்பித்திருக்கிறார். இதுபோன்ற ஒரு படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும், அந்த தைரியம் கொண்ட இயக்குநர் சாருக்கு நன்றி. இந்த படத்தில் பணியாற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் எங்களை எல்லாம் இயக்கிக் கொண்டிருக்கும் ஐயப்பன் சார் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.  இது பெயர் அளவில் தான் சிறிய படம், ஆனால் படத்தை பார்க்கும் போது பெரிய படமாக இருக்கும். எனவே பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும், நன்றி.” என்றார்.


நடிகர் கோவை ஆறுமுகம் பேசுகையில், “ஏ.கே.ஆர் பியூச்சர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ரூபன் என்ற படத்தை எடுத்தோம். அந்த படத்தின் இயக்குநர் ஐயப்பன் மூலம் தான் ராஜசோழன் சார் பழக்கம். எங்கள் படத்தின் படப்பிடிப்புக்கு அவர் வருவார். அப்போது பாரதியார் போல் இருந்ததால் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். பிறகு அவர் இப்படி ஒரு படம் இயக்கப் போவதாகவும், அதில் ஒரு இன்ஸ்பெக்டர் ரோல் பண்ண வேண்டும், என்று கேட்டார். அதன்படி நானும் நடித்துக் கொடுத்தேன், அது சிறப்பாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன். ஒரு ஏழ்மையான பெண் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார், அவருக்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது, அவற்றை கடந்து அவர் எப்படி படிப்பில் வெற்றி பெறுகிறார், என்பது தான் கதை. இந்த படப்பிடிப்பே ஒரு குடும்ப பணி போல் தான் இருந்தது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார்.


ரூபன் பட நாயகன் விஜய் பிரசாத் பேசுகையில், “ரூபன் படத்தின் படப்பிடிப்பின் போது தான் ராஜசோழன் சாரை சந்தித்தேன். அப்போது எனக்கு தெரியாது இதுபோன்ற ஒரு படம் பண்ணப் போகிறார் என்று. இன்று தான் தெரிகிறது இவ்வளவு பெரிய படம் பண்ணியிருக்கிறார். இதற்கு உறுதுணையாக இருந்த ஐயப்பன் அண்ணனுக்கு நன்றி. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த படத்தில் நடித்திருக்கும் சிறுமி நேத்ரா என் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள். ஆறுமுகம் அண்ணனுக்கு நல்ல மனது, அவர் நடிக்கும் போது இன்ஸ்பெக்டர் போன்ற வேடத்தில் தான் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார், அவர் ஆசைப்படி அவருக்கு இந்த படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அவருக்கும் வாழ்த்துகள். படத்தின் இசைமைப்பாளர் அரவிந்த பாபு சாரின் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. அவர் இளையராஜா சாரிடம் பணியாற்றியவர், அதனால் அவரது மெலோடி பாடல்கள் தாலாட்டுவது போல் இருக்கும். இந்த படக்குழுவுக்கு என் ஒட்டுமொத்த வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன். ஒரு இடத்திற்கு செல்ல எவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம், என்பதை சார் சொன்னதை கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. யாரோ போட்ட பாதையில் பயணிக்காமல், தனக்கு என்று தனி போட்டுக்கொண்ட ராஜசோழன் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும், என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்றார்.


நடிகை காயத்ரி பேசுகையில், “இந்த காலத்து பாரதி போல் இருக்கும் இயக்குநர் தயாரிப்பாளர் ராஜசோழன் சார் நினைத்தது நடந்து விட்டது, அவர் சாதித்து விட்டார். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இதேபோல் ஊக்கமளிக்கும் படங்களை தொடர்ந்து எடுக்க வேண்டும். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.


படத்தின் நாயகி பிரின்ஸி பேசுகையில், “காலதாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். என்னுடைய தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. சிறிய குழுவை வைத்து மிகப்பெரிய படம் பண்ணியிருக்கோம். இந்த குழுவில் ஒருவர் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் இந்த படம் இந்த அளவுக்கு வந்திருக்காது, எனவே அனைவருக்கும் ரொம்ப நன்றி. கண்டிப்பாக படம் பாருங்கள், அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், நன்றி.” என்றார்.


மக்கள் தொடர்பாளர்கள் சங்க செயலாளர் ஜான் பேசுகையில், “நடத்துனர் பணி என்பது மிக முக்கியமான பொறுப்பாகும். அப்படிப்பட்ட பணியில் இருந்து இயக்குநராக வந்திருக்கும் ராஜசோழன் சாருக்கு வாழ்த்துகள். பி.ஆர்.ஓ தம்பி விஜய், அவருக்கு நான் குரு அல்ல, யாருக்கும் யாரும் குரு சிஷ்யன் அல்ல, அனைவரும் அண்ணன் தம்பி தான். அவர் அவர் தான் கற்றுக் கொள்ள வேண்டும். பி.ஆர்.ஓ-வாக கார்டு எடுப்பது முக்கியம் அல்ல, படம் பண்ண வேண்டும், அது தான் முக்கியம். இங்கு பின்னாடி நிறைய பேசுப்வார்கள், நல்லதுக்கு காதை திறந்து வை, கெட்டதுக்கு காதை மூடி வை. இவை இரண்டுக்கும் செவி கொடுக்காமல் பயணித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். எனக்கு பின்னாடி நிறையப் பேர் பேசுகிறார்கள், ஆனால் என் முன்னாடி பேசினால் அதற்கு தீர்வு காண முடியாமல் அப்படி இல்லை என்றால் அதை நாம் கண்டுக்கொள்ள கூடாது. எனவே, குறை சொல்பவர்களை பற்றி கவலைப்படாமல் பயணிக்க வேண்டும்.


ஐ.ஏ.எஸ் பணிக்கு சுமார் 2000 பெண்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இத்தனை வருடங்களில் இவ்வளவு பெண்கள் தான் இந்த பதவிக்கு வந்திருக்கிறார்களா? என்றால் அது அப்படி தான். இன்னும்  நிறைய பெண்கள் இந்த பதவிக்கு வர வேண்டும். அதேபோல் கல்வியில் தோற்றுப்போனவர்கள் தோல்வி அடைந்தத்தாக நினைக்க வேண்டாம். கல்வி இல்லை என்றால் அடுத்த துறையில் சாதிக்க முயற்சிக்க வேண்டும். பிள்ளைகளை படி படி என்று சொல்வதை விட படிப்புக்கு அடுத்தப்படியான விசயங்களுக்கு சொல்ல வேண்டும். அனைவரும் அரசாங்க வேலை, உயர் பதவிகளுக்கு முயற்சிக்காமல் தொழில் முனைவர்களாக உருவாக வேண்டும், அதற்கு ஏற்றவாறு பிள்ளைகளை வளர்க்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த குழுவின் பணியாற்றியிருக்கும் ஒளிப்பதிவாளர் கேசவன், இசையமைப்பாளர் அரவிந்த பாபு, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராஜசோழன், பி.ஆர்.ஓ நா.விஜய் என அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.


நடிகை கோமல் சர்மா பேசுகயில், “இந்த படத்தில் இயக்குநர் ராஜ்ழோசன் மூன்று முக்கியமான விசயங்களை பேசியிருக்கிறார். ஒன்று கல்வி, இரண்டு போதைப்பழக்கம், மூன்றாவது பெண்கள் முன்னேற்றம். பெண்கள் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும், ஆனால் இந்தியாவில் இன்னமும் பெண்களுக்கான கல்வி குறைவாகவே இருக்கிறது. இன்னமும் பல ஊர்களில் 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மேலே படிக்காமல் பல பெண்கள் இருக்கிறார்கள். எனவே, கல்லூரி வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும், என்று அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன். ஒரு வீட்டில் ஒரு ஆண், பெண் இருந்தால், ஆண் பிள்ளை படிப்புக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கல்லூரி வரை இலவச படிப்பு சலுகை வழங்கினால் பெண்களும் படிப்பார்கள். இன்று ஒரு நாடு அழிவதற்கு போதைப்பொருள் தான் காரணம். குறிப்பாக இளைஞர்கள் போதைப்பழகத்திற்கு அடிமையாவதால், காஷ்மீர் பயங்கரவாத சம்பவங்கள் போன்று நடக்கிறது. படிப்புக்காக குரல் கொடுத்த மலாலாவை தாக்கியதும் இதற்காக தான். பெண்களின் கல்விக்கு குரல் கொடுத்த அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  எனவே, பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு பல திறமைகள் இருக்கிறது, ஆனால் அவற்றை வெளிக்காட்டக்கூடிய வழி தெரியவில்லை. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களை போதைக்கு அடிமையாக்கி விடுகிறார்கள். எனவே, இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். அதேபோல், பெண்களின் முன்னேற்றம், அவர்களின் படிப்பு இரண்டுமே சமநிலையை சொல்கிறது. இப்படி படத்தில் பல விசயங்கள் சொல்லியிருக்கும் ராஜசோழன் சார், உருவத்தில் பாரதியார் போல் இல்லாமல் அவர் கருத்தை மிக ஆழமாக சொல்லியிருக்கிறார்.  அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.


’சாமானியன்’ திரைப்பட இயக்குநர் ராகேஷ் பேசுகையில், “ராஜசோழன் சாரை பார்க்கும் போது பெரிய தன்னம்பிக்கை கிடைத்தது. நிறைய கஷ்ட்டங்களை எதிர்கொண்ட போதிலும், வாழ்க்கையில் நினைத்ததை விரட்டி பிடித்திருக்கிறார். இதை விட வேறு என்ன சார் வேண்டும். அவரது இந்த முயற்சிக்கு அவருக்கு வாழ்த்துகள். சாரை பார்க்கும் போது சாயாஜி ஷிண்டேவை பார்ப்பது போல் இருக்கிறது.  சாயாஜி ஷிண்டே சார் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து முடித்த போது, ஒரு தொழிலதிபர் அவரை அழைத்து பிளாங் செக் கொடுத்தாராம். அதுபோல் இந்த படம் வெளியானால் உங்களுக்கு நிறைய செக் வரும் சார். அனைவரும் நம்பிக்கையோடு உழைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் அடுத்தக்கட்டத்திற்கு போக வேண்டும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டிக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.


பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி பேசுகையில், “ராஜசோழன் அவர்களை பார்க்கும் போது சாயாஜி ஷிண்டே போல் இருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பிரின்ஸி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் அரவிந்த் பாபுவின் பாடல்களில் வார்த்தைகள் தெளிவாக புரிகிறது. இதுபோன்ற புது நட்சத்திரங்களை வைத்து படம் பண்ணும் போது ஒளிப்பதிவாளர், சண்டைப்பயிற்சியாளர் மற்றும் நடன இயக்குநர்கள் அதிகம் சிரமப்படுவார்கள், அவர்களுக்கும் வாழ்த்துகள். ரூபன் பட இயக்குநர் ஐயப்பன் சாருக்கு வாழ்த்துகள். பெண் கல்வி என்பது ஒரு குடும்பத்திற்கு மிக முக்கியம். இன்று மத்திய, மாநில அரசுகள் பெண் கல்விக்காக பல சலுகைகள் வழங்குகிறார்கள், அதை சரியான பயன்படுத்தினாலே வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம். பெண்கள் பெருமை பேசுகிறோம், அவர்களை போற்றி கவிதைகள் எழுதுகிறோம், ஆனால் அதை நாம் மதிக்க வேண்டும், என்பது தான் முக்கியம். பி.ஆர்.ஓ நா.விஜய்க்கு முதல் வாய்ப்பு கொடுத்த ராஜசோழன் அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற சிறிய படங்களுக்கு பத்திரிகையாளர்கள் சிறப்பான ஆதரவளித்து வருகிறார்கள். அதுபோல் ரசிகர்களும் இதுபோன்ற சிறிய படங்களை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.


இந்த படத்தின் மூலம் பி.ஆர்.ஓ-வாக அறிமுகமாகும் நா.விஜய் பேசுகையில், “இந்த இடத்திற்கு வர நான் 15 ஆண்டுகள் போராடியிருக்கிறேன். திரைப்பட விமர்சகராக என் வாழ்க்கையை தொடங்கினேன். பிறகு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், என்று நினைத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நான் என் வீட்டில் இருந்ததை விட பிரசாத் லேபில் தான் அதிக நாட்கள் இருந்தேன். தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் பி.ஆர்.ஓ ஜான் சார் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவியாளராக பணியாற்றினேன், பிறகு பி.ஆர்.ஓ கார்டு பெற்றேன். அதன் பிறகு படம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. பிறகு சிவாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் ஐயப்பன் சாரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து இந்த படத்தின் வாய்ப்பு கிடைக்க துணையாக இருந்தார். அவருக்கு நன்றி. உங்களது வாழ்த்துகளும், ஆதரவும் எனக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும், நன்றி.” என்றார்.


இயக்குநர் பேரரசு பேசுகையில், “ஐ.ஏ.எஸ் கண்ணம்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதை விட, பி.ஆர்.ஓ விஜயின் அரங்கேற்றமாகவே இந்த விழா நடைபெற்றுள்ளது. இதில், நான் பங்கேற்பது மகிழ்ச்சி. என் உதவியாளர் இந்த படம் குறித்து சொல்லி நிகழ்வுக்கு என்னை அழைத்தார். நான் தொடர்ந்து வந்துகிட்டு இருக்கேன், மேலும் பெப்ஸியில் மே தின வேலைகள் நடைபெறுவதால், இன்று வர முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், விடாமல் நான் தான் வர வேண்டும், என்று கூறினார்கள், சரி என்னை மிக அன்பாக அழைக்கிறார்கள் என்று வந்தேன். இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது, என்னிடம் உதவியாளராக சேர முயற்சித்த ராஜசோழன், அது நடக்காமல் போனதால், தானே ஒரு படம் எடுத்து, அதில் என்னை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும், என்று நினைத்து தான் என்னை இங்கு அழைத்திருக்கிறார், என்பது தெரிந்து விட்டது. சார், நான் உங்களை சேர்க்க மறுக்கவில்லை, என்னை அனுகாமல் இருந்திருப்பீர்கள். அதே சமயம், நீங்க உதவி இயக்குநராக இருந்து படம் எடுக்க முயற்சித்திருந்தால் ரொம்ப லேட்டாகியிருக்கும். ஆனால், இப்போது உடனடியாக இயக்குநராகி விட்டீர்கள். அதற்கு காரணம், ஒரு வெறி இருக்கும் அது தான் உங்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறது.


பி.ஆர்.ஓ ஜான் சிறப்பாக பேசினார், வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு இருக்கிறார் போல, அவர்களால் தான் இப்படி பேச முடியும். அவர் சொன்னது போல், பின்னாடி நம்மை குறை சொல்பவர்களை கட்டுக்கொள்ள கூடாது. அதேபோல், நம் முன்பு அதிகமாக புகழ்பவர்களையும் நாம் கண்டுக்கொள்ள கூடாது. நம்ம தகுதிக்கு மீறி நம்மை புகழ்பவர்களிடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். அவர்களிடம் இருந்து நாம கொஞ்சம் விலகியிருப்பது நல்லது.


ஐ.ஏ.எஸ் கண்ணம்மா, கண்ணம்மா என்பதே தமிழ்நாட்டில் வீரியமான பெயர். பாரதியார் கண்ட புதுமைப்பெண், அந்த பெண்ணுக்கு உருவம் இல்லை, அது அவரது கற்பனை என்றாலும், தமிழ்நாட்டில் அந்த பெயருக்கு பல பெண்கள் உருவம் கொடுத்திருக்கிறார்கள். யார் யாரெல்லாம் டாக்டர் ஆனார்களோ அவர்கள் கண்ணம்மா தான், யார் யாரெல்லாம் போலீஸ், ஐ.ஏ.எஸ் ஆனார்களோ அவர்கள் எல்லாம் கண்ணம்மா தான். முன்னேறிய பெண்கள் அனைவரும் கண்ணம்மா தான். வேலு நாஞ்சியார், குயிலி, அஞ்சலை அம்மாள் என அப்போதே தமிழ்நாட்டில் கண்ணம்மாக்கள் உருவாகி விட்டார்கள்.  ஆக, நம் தமிழகத்தில் பெண்கள் முன்னேறிவிட்டார்கள். நான் கல்லூரி படிக்கும் போது 25 மாணவர்களின், 5 பேர் மட்டும் தான் பெண்களாக இருப்பார்கள். ஆனால், இன்று ஆண்களை விட பெண்கள் அதிகம் படிக்கிறார்கள். நடிகை கோமல் சர்மா சிறப்பாக பேசினார்கள். படிப்பு மட்டும் அல்ல இன்று போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி விட்டார்கள். ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால், அந்த இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கினாலே போதும் அந்த நாட்டி அழிந்து விடும். தற்போது அப்படிப்பட்ட சூழல் தான் உருவாகிக் கொண்டிருக்கிறது.


இன்று படிப்பவர்கள் மட்டும் கண்ணம்மா இல்லை, ஒவ்வொரு தாயும் கண்ணம்மா தான். பெற்ற பிள்ளைகளை சுய ஒழுக்கத்தோடு வளர்க்கும் அனைத்து தாயும் கண்ணம்மா தான். உலகத்திலேயே இந்தியா தான் பெண் பெருமை பேசும் நாடு, இந்தியாவில் தமிழ்நாடு தான் பெண் பெருமை பேசும் நாடு. ஆனால், இப்போது அப்படி நிலை இல்லை. தாய் பெண் பெருமையை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்பாவின் பெருமை சொல்லி வளர்க்க வேண்டும், கணவர்களை குறை சொல்லி மனைவிகள் வாழ்கிறார்கள், அதேபோல் ஆண்களும் மனைவிகள மட்டம் தட்டி பேசுகிறார்கள். இப்படி இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தால், இதை பார்க்கும் பிள்ளைகள் இருவரையும் மதிக்காமல் கெட்டுப் போய்விடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் பிள்ளைகள் முன்பு இத்தகைய நடவடிக்கையை கைவிட்டுவிட்டு குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும். பள்ளி சரியில்லை, அக்கம் பக்கம் சரியில்லை என்று சொல்வதை விட்டு விட்டு, பெற்றோர்கள் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும். எனவே பிள்ளைகளின் வளர்ப்புக்கு முழு காரணம் பெற்றோர்கள் தான். எனவே, ஒவ்வொரு அப்பனும் பாரதியார், ஒவ்வொரு தாயும் கண்ணம்மா தான்.


படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ராஜசோழன் பாரதியாரின் கருத்துக்களில் ஊறிப்போயிருக்கிறார். அதனால் தான் உருவத்தில் மட்டும் இன்றி தனது படைப்பிலும் பாரதியாரை கொண்டு வந்திருக்கிறார். முதல் படத்தில் கல்வி மற்றும் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் என சமூகத்திற்கு தேவையானதை ஒரு கதையை இயக்கியிருக்கிறார். படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பிரின்ஸியும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவரது நடிப்பில் வித்தியாசம் தெரிகிறது. கண்ணம்மா என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ப கம்பீரமாக நடித்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள். நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் ஆட்டுக்குட்டி புரூஸ்லி நன்றாக நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் அரவிந்த் பாபுவின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது, கேமரா, படத்தொகுப்பு என அனைத்தும் நன்றாக இருந்தது.


கண்ணம்மா என்ற பெயர் என்றாலே ராசியான பெயர், இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றியடையும். பாரதி கண்ட கண்ணம்மாக்கள் தைரியமான பெண்களாக இருக்க வேண்டும், நீட் தேர்வுக்காக உயிரை விட்ட அனிதா போல் இருக்க கூடாது. தேர்வு என்பது ஒரு சாதாரணம் தான், அதில் தோல்வியடைந்து விட்டதால் தற்கொலை முடிவு எடுக்க கூடாது. போராடி ஜெயிக்க வேண்டும். அவர்கள் தான் பாரதி கண்ட கண்ணம்மா, என்று கூறுக்கொண்டு ‘கண்ணம்மா’ படக்குழுவினரை வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.


சிறப்பு விருந்தினர்கள் பேரரசு மற்றும் பி.ஆர்.ஓ நெல்லை சுந்தரராஜன் ’ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ இசை தகட்டை வெளியிட மற்ற சிறப்பு விருந்தினர்களுடன் சேர்ந்து படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.

Monday, 28 April 2025

நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'ஹிட் - தி தேர்ட் கேஸ்' ( HIT - The Third Case) படத்தின்

 *'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'ஹிட் - தி தேர்ட் கேஸ்' ( HIT - The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*








'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது. 


தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 


நடிகர் நானி பேசுகையில், '' நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழில் பேசும் அளவிற்கு பயிற்சி பெற்றுக்கொண்டு பேசுவேன். 


பலமுறை என்னை வடிவமைத்தது தமிழ் சினிமா தான் என சொல்லி இருக்கிறேன். 2012 - 13 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்றேன். இருந்தாலும் தற்போது வரை தமிழக மக்களின் அன்பு - தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்பு கிடைத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். 


'ஹிட்  தி தேர்ட் கேஸ்' படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஹிட் படத்தின் இரண்டு பாகங்களும் தமிழில் வெளியாகியிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன். 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' இது ஒரு படம் அல்ல. அற்புதமான அனுபவத்தை தரும் படைப்பு. முதல் இரண்டு படத்திற்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 'ஹிட் 1 ', 'ஹிட் 2 'படத்தில் இடம் பெற்ற சில கதாபாத்திரங்கள் இதிலும் வரக்கூடும். ஆனால் படத்தின் கதை புதிது. கதை சொல்லும் பாணி புதிது. திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. 


ஏனைய இரண்டு பாகங்களை விட 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதற்காக மட்டுமல்ல.. இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் சில விசயங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். 


நான் நடிக்கும் படத்திற்கு தெலுங்கு மக்களை கடந்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் சரியான விமர்சனத்தை முன் வைப்பார்கள். கொண்டாடுவார்கள். ரசிப்பார்கள்.‌ அதிலும் தமிழ் ரசிகர்களின் அன்பு எப்போதும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும். 


'ஹிட் - தி தேர்ட் கேஸ் 'படத்தை இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியிருக்கிறார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். இவர்கள் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதிலும் மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை உங்களை நிச்சயமாக கவரும். 


இது ஒரு அரிதான திரில்லர் திரைப்படம்.  இன்வெஸ்ட்டிகேட் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் எல்லா விசயங்களும் உயர்தரம் கொண்டவை. அந்த வகையில் இந்த படம் மாஸான கமர்சியல் என்டர்டெய்னர். ஆனால் அதே சமயத்தில் வழக்கமான கமர்ஷியல் படமாக இது இருக்காது. இந்தப் படம் வெளியான பிறகு நீங்களே உங்களுடைய நண்பர்களிடத்தில் படத்தைப் பற்றி சொல்லி, மீண்டும் திரையரங்கில் வந்து பார்ப்பீர்கள். 


இந்தத் திரைப்படத்தில் எனக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பணியாற்றிய தருணங்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. 


இந்த திரைப்படத்தை தமிழில் வெளியிடும் சினிமாக்காரன் நிறுவனத்தின் வினோத் குமாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று 'ஹிட்' - 'ரெட்ரோ' என இரண்டு படங்களும் வெளியாகிறது. இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும். '' என்றார். 


நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், '' 'கே ஜி எஃப் ஒன்' , 'கே ஜி எப் 2', 'கோப்ரா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். அப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது தமிழக ரசிகர்களையும் சந்தித்து இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் வெளிப்படுத்தும் அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. 

ஹிட்- 3 நான் நடித்திருக்கும் முதலாவது தெலுங்கு படம்.‌ இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து தெலுங்கில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இயக்குநர் சைலேஷ் கொலானு அற்புதமாக படத்தை இயக்கியிருக்கிறார். அனைவருக்கும் பிடித்த 'நேச்சுரல் ஸ்டார் 'நானியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். 'கே ஜி எஃப் 2 ' படம் 2022 இல் வெளியானது. அதன் பிறகு என்னை நினைவு வைத்துக் கொண்டு இயக்குநர் சைலேஷ் கொலானு- நானி ஆகிய இருவரும் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்ந்தெடுத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்கிறேன். 


கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நானியின் ரசிகையாக இருந்தேன். அவருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா.! என காத்திருந்தேன். என் கனவு நனவாகி இருக்கிறது. ஆனால் இந்த ஜானரிலான படத்தில் இணைந்து நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. உண்மையிலேயே இது சந்தோஷத்தை அளிக்கிறது.‌


இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மே முதல் தேதியன்று திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


விநியோகஸ்தர் ' சினிமாகாரன் ' வினோத் குமார் பேசுகையில், '' 'குடும்பஸ்தன்' திரைப்படத்திற்கு பிறகு 'ஹிட்- தி தேர்ட் கேஸ்' படத்தை வெளியிடுகிறேன். இதற்காக வால்போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


நான் 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' எனும் திரைப்படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். எங்கள் படமும், 'ஹிட் 1 ' திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. தற்போது 'ஹிட் 3' படத்திற்கு நான் விநியோகஸ்தராகி இருக்கிறேன். இது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது. 

இந்தப் படத்தில் நானி சார் நடித்திருக்கிறார். அவர் நடிப்பதற்காக தேர்வு செய்யும் அனைத்து படங்களும் நன்றாகவே இருக்கும். தொடர்ந்து அவர் ஹிட் படங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். ஹிட் 3 எனும் படம் ஏற்கனவே ஹிட்டான இரண்டு பாகங்களில் தொடர்ச்சியாக வெளியாகும் மூன்றாவது பாகம். இதில் நானி இருப்பதால் நிச்சயம் பெரிய அளவில் வெற்றியைப் பெறும். 


ஸ்ரீநிதி ஷெட்டி ஏற்கனவே 'கே ஜி எஃப் ', 'கோப்ரா' போன்ற வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திறமைசாலிகள்.‌ அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என நம்புகிறேன்.'' என்றார்.

சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட்

 *சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்







ட் ஃபேமிலி' படத்தின்  ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் { முன்  வெளியீட்டு நிகழ்வு} !!* 


நடிகர் சசிகுமார் - சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின்  ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன்,  திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில்  படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். 


எதிர்வரும் மே மாதம் 1 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வினில்.... 



இயக்குநர் ராஜு முருகன் கூறியதாவது...

எல்லாருக்கும் வணக்கம்,  டூரிஸ்ட்ஃபேமிலி படம் பார்த்துவிட்டேன்,  ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு கலகலப்பான, உணர்வுப் பூர்வமான  ஃபேமிலி என்டர்டெயினர்  படமாக இருந்தது.  தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில்  அன்பைப் பேசுகிற,  நம்முடைய மென் உணர்வுகளைப் பேசுகிற மனிதத்தைப் பேசக்கூடிய படைப்புகள் வருவது அரிதாகிவிட்டது. அப்படி வருகிற சில படங்கள் கூட,  கிராப்ட் அளவில் சரியாக இல்லாமல், சுவாரசியம் இல்லாமல் போவதால்,  மக்களுக்கான படங்களாக இல்லாமல் போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில் தான், கதையும் படைப்புத் திறனும் சரியாகக் கலந்த கலவையாக  இந்த  அற்புதமான படைப்பு வந்துள்ளது. இந்தப்படம் பார்த்த போதே கண்டிப்பாக இப்படத்தைக் கண்டிப்பாகத் திரையரங்குகளில் மக்கள் கொண்டாடுவார்கள் என நினைத்தேன். இயக்குநர் அபிஷன் ஜீவிந் உடைய முதல் படம் போலவே தோணவில்லை, படத்தில் அத்தனை முதிர்ச்சி இருந்தது. ஒரு சிக்கலான பின்னணியை  எடுத்துக்கொண்டு,  எந்த அரசியலும் பேசாமல், மனிதர்களுக்கான அற்புதமான அரசியலைப் பேசியுள்ளார்.  நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை, அறிவுரையாக இல்லாமல், 

செம ஜாலியாக சொல்லியுள்ளார். அவருக்குத் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. சசிகுமார் சாரை பார்க்கும்போது மிகுந்த  ஆச்சரியமாக இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ அவருக்கென்று மக்களிடம் ஒரு மரியாதை இருந்துகொண்டே இருக்கும். சமீபமாக அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள், அடுத்த தளத்தில் இருக்கிறது, அந்தளவில்  மிக  முக்கியமான படமாக டூரிஸ்ட்ஃபேமிலி இருக்கும். அழகான கதைகள் கொண்ட மலையாள படங்கள் மாதிரி தமிழில் வருவதில்லை எனும் ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. அதை உடைக்கிற ஒரு தயாரிப்பு நிறுவனமாக மில்லியன் டாலரை நான் பார்க்கிறேன். அப்படி ஒரு அழகான படைப்புகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். இப்படம் அவர்களுக்கு ஹார்ட்ரிக் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 


இயக்குநர் சசி கூறியதாவது...

ஒரு திரைப்படம் பார்க்கிற யாரையுமே சங்கடப்படுத்தாமல் அதே சமயத்தில், சந்தோஷப்படுத்துகின்ற வகையில் ஒரு படம் செய்வது அதிலும் அதை அதை முதல் படமா செய்வதற்கு மிகப்பெரிய மனது வேண்டும். இயக்குநருக்குப் பெரிய மனது இருக்கிறது. படத்தில் ஒவ்வொரு காட்சியும் அத்தனை அழகாக அற்புதமாக உள்ளது.  ஸ்ரீலங்கா பின்னணியில் ஒரு கருவை எடுத்துக்கொண்டு, அதில் அரசியல் பேசாமல், அன்பைப் பேசியதற்காகவே இது தமிழ் சினிமாவில்  மிக முக்கியமான படமாக உருக்கும்.  மில்லியன் டாலர் நிறுவனம் மெயில் பார்த்து இந்தக்கதையைக் கேட்டிருக்கிறார்கள், இது தமிழ் சினிமாவில் நடக்காத அதிசயம், அவர்கள் நல்ல கதைகளைத் தேடி, தயாரிக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு அப்பாவாக சசிகுமார் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார், சிம்ரன் மேடம் உடனான காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது. முழுக்க முழுக்க அன்பைப் பேசும் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்



இயக்குநர் வசந்தபாலன் கூறியதாவது.. 

இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை, டீசர் பார்த்து அவ்வளவு சிரித்தேன், இங்குப் படம் பார்த்தவர்கள் பேசுவதைக் கேட்கும்போது படம் பார்க்கும் ஆவல் கூடுகிறது. சசிகுமார் சார் முகத்தில் இத்தனை நாள் பார்க்காத மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. சசிகுமார் சாரை, மதுரையிலிருந்து இலங்கைக்குக் கூட்டிப்போனதற்கே  பெரிய பாராட்டுக்கள். இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கிறேன் என ஒத்துக்கொள்ளவே ஒரு தைரியம் வேண்டும் அது அவரிடம் இருக்கிறது. ஒரு கதை சுருக்கத்தைப் படித்து ஒரு நிறுவனம் படம் செய்ய ஒத்துக்கொள்கிறது என்றால் அதை நம்ப முடியவில்லை, நல்ல கதைகளைத் தேடித் தயாரிக்கும் மில்லியன் டாலர் நிறுவனம் பெரிய வெற்றி பெற வேண்டும். பசங்க படம் தயாரித்த காலகட்டத்தில் சசிகுமார் சாரை பார்த்தது போலத் தான் அவர்களைப் பார்க்கிறேன் அதே உற்சாகம் அவர்களிடம் இருக்கிறது. வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 


இயக்குநர் த செ ஞானவேல் கூறியதாவது..  

இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டேன் கண்டிப்பாக இப்படம் வெற்றி பெறும்.  ஒரு ஒரு போர் பத்தி, அது ஏற்படுத்துகின்ற விளைவுகள் பத்தி,  ஒரு குண்டு சத்தம் இல்லாமல் ஒரு அது சம்பந்தமான ஒரு அழுகாட்சி இல்லாமல்,  மிக ஆழமாகப் போரின்  வலியை வந்து இந்தப் படம் பேசியுள்ளது.  இதோட நகைச்சுவை எல்லாரும் பேசுவார்கள்  ஆனால்  வலியைச் சொன்னால் கூட  நமக்கு அது பாதிக்காது, ஆனால்  வலியை மறைத்துக் கொண்டு  சிரித்துக் கொண்டே அதெல்லாம் ஒன்னு இல்ல அப்படின்னு சொல்றது இருக்கு இல்லையா அது மிகத் துயரமானது. அழகான ரசனையான ஒரு நகைச்சுவைக்கு பின்னால் ஒரு போர் என்ன செய்யும் அப்படிங்கிறது தான் இந்த கதை.  பெண்கள், குழந்தைகள், விலங்குகள் போன்றவற்றைப் பாதுகாப்பது போன்ற சில விதிகள் போரில் முக்கியம்.  ஆனால் இப்போது உலகம் கொடூரமாக மாறிவிட்டது, மனிதாபிமானம் இல்லை. நம்மைச் சுற்றி நடக்கும் கொடூரங்களை நாம் தினமும் பார்க்கிறோம். இலங்கையில் போர் எவ்வளவு இரக்கமற்றது என்பதை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். அது உருவாக்கிய தாக்கம் பேரழிவை ஏற்படுத்துவதால் மக்கள் இன்று வரை துன்பப்படுகிறார்கள். படத்தைப் பார்க்கும்போது நான் பிரமித்துப் போனேன், ஏனென்றால் அது போன்ற ஒரு நாட்டிலிருந்து வரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய ஒரு மகிழ்ச்சியான திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும். இப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


இயக்குநர் விநாயக் சந்திரசேகர் கூறியதாவது..  

இந்தப் படத்தில் நான் எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால்  மில்லியன் டாலர் தயாரிப்பு எப்போதும் என்னுடைய படமாகத்தான் பார்க்கிறேன், தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் எனக்கு இப்படத்தின் கதை சுருக்கத்தை அனுப்பினார், படிக்க அத்தனை சுவாரஸ்யமாக இருந்தது. இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஒரு ஆச்சரியம், அவர் ஒரு கல்லூரி ஜூனியர் மாதிரி இருக்கிறார், ஆனால் ஒரு விளையாட்டுப் போட்டியில் திடீரென்று வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வீரரைப்  போல் ஆச்சரியப்படுத்துகிறார். சசிகுமார் பற்றி நினைக்கும் போதே சுப்பிரமணியம் படம் ஞாபகம் வந்துவிடும், அப்படி ஒரு சிறப்பான படத்தைக் கொடுப்பது, அவரைத் தவிர வேறு யாராலும்  முடியாது. இப்படத்தில் அற்புதமான நடிப்பைத் தந்துள்ளார்.  குட் நைட் ஸ்கிரிப்டை முடித்த போது, யாருக்கும் அது உண்மையில் பிடிக்கவில்லை யாரும் தயாரிக்க முன்வரவில்லை. நான் மனச்சோர்விலிருந்தபோது, ​​தயாரிப்பாளர் யுவராஜ் யாரும் தயாரிக்கவில்லை என்றால், நான் செய்கிறேன் என்று சாதாரணமாகக் கூறினார். மறுநாள் அவர் போன் செய்து தனது சொத்தை அடமானம் வைத்துவிட்டுத் திட்டத்தைத் தொடங்குவோம் என்று கூறினார்.அதை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். மில்லியன் டாலர் எப்போதும் நல்ல கதைகள் செய்யும், இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 



இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியதாவது..  

எல்லோருக்கும் வணக்கம் வள்ளுவர் சொன்னதிலிருந்து ஆரம்பிக்கலாம் அன்பின் வழியது உயிர்நிலை அப்படின்றது ஒரு முக்கியமான ஒரு குரலா நான் பார்க்கிறேன், அதவே கவிஞர் வைரமுத்து எ அன்பே சிவம்ல அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா ! அப்படின்றாரு அதுக்கும் கொஞ்சம் முன்னாடி போனால்,  அவரே  அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயசு 100 ன்னு சொல்றாரு.  அவ்வளவு அன்பு நிறைஞ்ச ஒரு படம் எடுத்த அபிக்கு  100 வருட ஆயுள் கிடைக்கட்டும்.  அவ்வளவு அன்பு இருக்கிற  இந்த படம்  இப்போதைய  காலகட்டத்தில்  மிக   முக்கியமான ஒரு படமாகப் பார்க்கிறேன்.  இப்படத்தில்  அனைவருமே மிகச் சிறப்பா நடித்துள்ளார்கள், சசி சார் சிம்ரன் மட்டும் இல்ல அவங்கள சுத்தி நடிச்சிருக்க அத்தனை பேரும் மிகச் சிறப்பா நடித்துள்ளார்கள். இப்படி ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த மில்லியன் டாலர் நிறுவனத்திற்கு நன்றிகள், அன்பான மனிதர்கள் யுவராஜ் மகேஷ் விஜய் எல்லாரும் எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



இயக்குநர் புஷ்கர் காயத்திரி கூறியதாவது...

சசிகுமார் சார் படங்கள் மென்மையாகத் தொடங்கி இரத்தக்களரியாக முடியும்,  அப்படித்தான் நாம்  வழக்கமாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் எதுவுமே இல்லை, படத்தில் முழு குடும்பத்தையும் உள்ளடக்கிய ஒரு அழகான காட்சி உள்ளது, ஸ்பாய்லர்கள் இல்லை, ஆனால் அந்தக் காட்சிக்காகவே நாங்கள் படத்தை மீண்டும் பார்ப்போம். அந்த குறிப்பிட்ட காட்சி அத்தனை அழகாக  இருந்தது. அந்த சிறுவர்களிடம் எப்படி நடிப்பை வாங்கினார்கள் என இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. சசிகுமார் & சிம்ரன் என்று குறிப்பிட்டதற்குத் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பாராட்டுகள். பல படங்களில் சிம்ரன் மேடத்தின் பங்களிப்பு கவனிக்கப்படாமல் போய்விட்டது, இது நிச்சயமாக அந்தப் பட்டியலில் சேராது. இந்தப் படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.  ஃபீல்-குட் படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறுமா? என்ற குழப்பமான சூழ்நிலை இருக்கும்போது. மில்லியன் டாலர் பிக்சர்ஸ் சரியான படங்களை  ஹிட்டாக கொடுத்து தொடர்ச்சியாக நல்ல படங்கள் ஜெயிக்கும் என நிரூபித்து வருகிறது. இந்தப்படமும் அவர்களுக்குப் பெரிய வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்



நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது...

எல்லாருக்கும் வணக்கம் இந்த படத்தைப் பார்த்து அழுகையை அடக்கிக் கொண்டு இருந்தேன். சமீபமாக  சசிகுமார்  சார் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே அற்புதமாக உள்ளது. அவர் அடுத்துச் செய்யப்போகும் படம் பற்றியும் தெரியும். இப்போதெல்லாம் எமோஷனலாக இருந்தால் கிரிஞ்ன்னு சொல்லிவிடுகிறார்கள். அயோத்தி டைரக்டர் இந்த டைரக்டர் என எல்லாருக்கும் பெரிய நம்பிக்கை கொடுக்கிறார் சசி சார். இப்படத்தின் இரண்டாம் அத்தனை எமோஷனலாக இருந்தது, இசையில் ஷான் கலக்கியிருக்கிறார், திரைக்கதைக்குள் சென்று பின்னணி இசை அமைத்துள்ளார்.  ஒவ்வொரு தயாரிப்பாளரும் படம் எடுக்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும்போது, ​​மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தங்கள் ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.  



நடிகர் மணிகண்டன் கூறியதாவது..  

'டூரிஸ்ட் ஃபேமிலி'  படம் ரெடியான இந்த இரண்டு வாரத்தில் படம் பற்றி நிறைய நல்ல விசயங்களைக் கேட்க முடிகிறது. ஆனால் எனக்கு 1.5 வருடங்களுக்கு முன்பே இந்தப்படம் பற்றித் தெரியும்.  அதாவது இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் முழு ஸ்கிரிப்டையும் எனக்குச் சொன்ன போதே மிரட்டலாக இருந்தது. அவர் கதை சொல்வதே படம் பார்த்த மாதிரி இருக்கும். சசி சாரைத் வேறு யாரையும் இந்த ரோலில் நினைத்துப் பார்க்க முடியவில்லை படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும். இசையமைப்பாளர் ஷான் நல்ல நண்பர் மணிக்கணக்கில் அவருடன் போனில் பேசுவேன், அவர் மனைவி திட்டுவார். இப்படத்தில் அற்புதமான இசையைத் தந்துள்ளார்.  இப்படி ஒரு கதையை நம்பி தயாரிப்பது அத்தனை எளிதான விசயமல்ல, ஆனால் அதை மிக எளிதாக மில்லியன் டாலர் சாதித்துள்ளனர். கண்டிப்பாக இந்தப்படம் பார்க்கும் அனைவரையும் மகிழ்விக்கும் நன்றி.  


லப்பர் பந்து இயக்குநர்  தமிழரசன் பச்சமுத்து கூறியதாவது

இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு திரையரங்கில் கைதட்டல் நிச்சயம், இது ஒவ்வொரு அறிமுக இயக்குநரின் கனவு. கண்டிப்பாக இப்படம்  பெரிய வெற்றியைப் பெறும். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மும்பை இந்தியன்ஸ் போன்றது. அவர்கள் எங்கிருந்து புதிய திறமைகளைத் தேடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மிக அட்டகாசமான கதைகளைத் தயாரிக்கிறார்கள். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் எதிர்காலத்தில் என்ன பெரிய படங்களைத் தயாரித்தாலும், இதே போல புதிய இளைஞர்களைத் தொடர்ந்து திரைத்துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


லவ்வர் பட  இயக்குநர்  பிரபுராம் வியாஸ் கூறியதாவது..   

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் திரைக்கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை இயக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனம். அவர்கள் டூரிஸ்ட் ஃபேமிலி மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஒரு அறிமுக இயக்குநரை அறிமுகப்படுத்துகிறார்கள். இது அவர்களால் மட்டுமே முடியும். இந்தப்படமும் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும் நன்றி. 


தயாரிப்பாளர் அருண் விஸ்வா கூறியதாவது… 

டூரிஸ்ட் ஃபேமிலி உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு படம். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஒரு பிராண்டாக மாறிவிட்டது. நடிகர்களும் இயக்குநர்களும் விரைவாக நட்சத்திரங்களாக மாறுவது வழக்கம். ஆனால் ஒரு தயாரிப்பு நிறுவனம் அதை அடைவது மிகவும் கடினம். குட் நைட் அப்புறம் லவ்வருக்குப் பிறகு, அந்த தயாரிப்பு நிறுவனம் மீது, மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.   டீசரிலேயே டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய  வெற்றி பெற்று விட்டது. எனது நண்பர்கள் பலர் இப்படம்  பற்றிப் புகழ்ந்து பேசுகிறார்கள். கண்டிப்பாக இப்படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் வாழ்த்துக்கள். 


நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது… 

டூரிஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம் என்று என்னால் உறுதியாகச்  சொல்ல முடியும்.  சில மாதங்களுக்கு முன்பு, இலங்கையைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்தார்கள். நாங்கள் இங்கு வந்து 35 வருடங்கள் ஆகின்றன, ஆனால் எங்களுக்கு இன்னும் ஒரு மரியாதைக்குரிய அடையாளம் கிடைக்கவில்லை என்று அவர்கள் கவலையுடன் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.  அந்த வலி இந்தப்படம் பார்க்கும் போது புரிந்தது.  இந்த படத்தைத் தாண்டி அபிஷன் ஜீவிந்த் பெரிய வெற்றியைப் பெறப் பெற முடியாது. சசிகுமாருக்கு சுப்பிரமணியபுரம் என்றால், எனக்கு நாடோடிகள், அது போல அபிஷனுக்கு இந்த டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும்.  இதை விடச் சிறந்த படத்தை உருவாக்குவது சாத்தியமில்லை.  நாடோடிகள் வெளியானபோது, கேபி சார் என்னுடன் சேர்ந்து அதைப் பார்க்க ஆர்வமாக இருந்தார். நாங்கள் ஒரு தியேட்டருக்குச் சென்றோம், பார்வையாளர்கள் டைட்டிலுக்கே கைதட்டினார்கள், கேபி சார் என்னை நோக்கித் திரும்பி, அவர்கள் அனைவரும் ஏன் டைட்டிலுக்கு  ஆரவாரம் செய்கிறார்கள் என்று கேட்டார்.  எனக்கும் அது புரியவில்லை. படம் வரும் படத்தின் மீது மக்களுக்கு நல்ல அன்பு இருந்தது.  இந்தப் படத்திற்கும் அந்த  மேஜிக் நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தில் பல காட்சிகளை மறக்க முடியவில்லை, படத்தில் ஒரு நாய் கூட அற்புதமாக நடித்துள்ளது. படத்தைப் பார்த்த பிறகு, அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் ஆவலுடன் இருந்தேன், மேலும் ஒரு சிறிய பகுதியிலாவது என்னை டப்பிங் கலைஞராக்குமாறு குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன் ஆனால் படத்தை முடித்துவிட்டார்கள். கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றியைக் குவிக்கும் நன்றி.



பாடலாசிரியர் மோகன்ராஜன்  கூறியதாவது..  

இங்குள்ளவர்களுக்கு இது புதிதாக இருக்கலாம் இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது முன்பே தெரியும். இந்தப்படம் மீது அத்தனை நம்பிக்கை இருந்தது. இயக்குநர் அபிஷன் ஜீவிந் மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த டீசரை இயக்குநர் சசி சார் பார்த்த பிறகு,  அது அவருடைய திரைப்படப் பாடல்களில் ஒன்றின் கவிதை வரியை நினைவுபடுத்தியதாகச் சொன்னார். என்னிடம் போன் நம்பர் வாங்கி உடனே இயக்குநரைப் பாராட்டினார்.  நான் படத்தைப் பார்க்க வரச் சொன்ன ஒரே நபர் அவர்தான். படம் முடியும் வரை அந்த மூன்று மணி நேரம் நான் மிகவும் பயந்தேன். ஆனால் பார்த்த பிறகு அவர் மிகவும் மனதைத் தொடும் வாழ்த்துக்களைச் சொன்னார். இந்த மேடையிலும் அதையே பகிர்ந்து கொண்டார். அவருக்கு நன்றி. அண்ணன் சசி மிக நன்றாக நடித்துள்ளார். இப்படையான கதையைத் தைரியமாகத் தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனம் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பல படங்கள் தயாரிக்க வேண்டும் நன்றி. 


படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் கூறியதாவது...

டூரிஸ்ட் ஃபேமிலி என்பது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் உடன் எனது மூன்றாவது படம், இன்றுவரை அவர்களின் அனைத்து படங்களுக்கும் நான் எடிட்டராக இருக்கிறேன். எனக்கு முழு  ஆதரவு தந்து, தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்கு  அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவரும் ரசிப்பீர்கள் நன்றி. 


ஆவேசம் நடிகர் மிதுன் கூறியதாவது:

டூரிஸ்ட் ஃபேமிலியில் மூத்த பையன் நான் தான். ஆவேசம் எனக்கு முதல் படமாக அமைந்தது. அதே போல் மிகச் சிறப்பான படமாக  டூரிஸ்ட் ஃபேமிலி அமைந்துள்ளது. இந்த மாதிரி  ஸ்கிரிப்ட்டில் நான் நடிக்க என்று எனக்குச் சந்தேகம் இருந்தது. சிறுவயதிலிருந்தே எனக்குத் தமிழ் புரியும். ஆனால் இலங்கை தமிழ் பேசும் பையனாக நடிக்க எனக்குப் பதட்டமாக இருந்தது. படத்தில் நடிக்க உதவியதற்காக முழு குழுவினருக்கும் நன்றி. சசி சார், சிம்ரன் மேடம், இயக்குநர் அபி அண்ணா அனைவருக்கும்  நன்றி  



குழந்தை நட்சத்திரம் கமலேஷ் கூறியதாவது...

நான் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் அது தான் எனக்கு அறிமுகமாக அமைந்தது. அதன் பிறகு நான் ஜோதிகா மேடத்துடன் ராட்சசி படத்தில் அறிமுகமானேன். அதன் பிறகு கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் டூரிஸ்ட் ஃபேமிலி படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. சசி சார், சிம்ரன் மேடமுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. படப்பிடிப்பு தளத்தில் என்னைச் சொந்த பையன் போலப் பார்த்துக் கொண்டார்கள், இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கூறியதாவது…

நான் இந்தத் துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மனநிலையில் இருக்கிறேன்.  இந்த 10 வருடத்தில் அதிர்ஷ்டவசமாக, நான் பல நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, அது முற்றிலும் என் அதிர்ஷ்டம். ஜெய் பீம் படத்திற்குப் பிறகு, நான்  உருவாக்கும் இசையைப் பெரிய பொறுப்பாகவே பார்க்கிறேன். நான் எந்த படத்திற்கும் சாதாரணமாக இசையமைக்க விரும்பவில்லை.  அந்தப்படம் சிறப்பாக இருக்க வேண்டும். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்  எனது திரைப்பயணத்தில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் பெருமைப்படக்கூடிய நல்ல  திரைப்படங்களை எனக்குத் தந்துள்ளனர்.  ஜெய் பீம் படத்திற்கு முன்பே மணிகண்டன் மூலமாக  அவர்களுடனான எனது பயணம் தொடங்கியது. குட் நைட் படத்தின் இசை வெற்றிக்கு அவரது நடிப்பு ஒரு முக்கிய காரணம். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனித்திறமை கொண்ட  இயக்குநர். அவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படத் இயக்குநராக இருப்பார், ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்கள், சசிகுமார் சார் எல்லோருடன் இயல்பாக ஒரு சகோதரப் பிணைப்பைக் கொண்டு வந்து விடுகிறார். இப்படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும்.  தமிழ் சினிமாவின் அடையாளமாக  டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இப்போது தமிழில் என்ன மாதிரியான படங்கள் வருகின்றன என்று கேட்டால், அதற்கான  பதிலாக  டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும்.




இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கூறியதாவது…

நான் சின்னப் பையனா இருந்தபோது, என் அம்மா நிறையப் பேரை ஊக்கப்படுத்திப் பாராட்டுவார். நான் இயக்குநர் ஆனதுமே எல்லோரும் என் அம்மாவை பாரட்டிபார்கள், ஏனென்று யோசித்தேன். இப்போது அவங்களலாதான் நான் நல்ல ஆளா இருக்கேன்னு எனக்குப் புரியுது. * என் அப்பா ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டார். சாலையோரத்தில் தூங்கி வேலை செஞ்சிருக்கார். நான் ஒரு இயக்குநரான பிறகு, என் எல்லா கஷ்டங்களையும் நானும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நான் உறுதியா இருந்தேன். ஆனால் நான் வளர்ந்து வந்தபோது, என் அப்பா எனக்கு இதுபோன்ற கஷ்டங்களைச் சந்திக்க விடவே இல்லை. சசிகுமார் சார் இந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா நடித்திருக்கிறார். என்னையும் சேர்த்து மூணு குழந்தைகள். அவர் எனக்கு அப்பா மாதிரி தான். சிம்ரன் மேடம் படத்துல வந்த பிறகுதான், இந்தப் படம் அடுத்த கட்டத்துக்குப் போச்சு, எல்லாரும் அதைப் பத்திப் பேச ஆரம்பித்தார்கள்.  அவருக்கு நன்றி. யோகி பாபு சார் ஆரம்பத்தில் எங்களுக்கு 5 நாள் கால்ஷீட் கொடுத்தார். முதல் நாள் ஷூட்டிங் முடிஞ்சதும், அவர் வந்து, பணத்தைப் பத்தி கவலைப்படாதீங்கன்னு சொல்லி, இந்தப் படத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும்  டேட்ஸ் தருவதாகச் சொன்னார். எம்.எஸ். பாஸ்கர் சார் நேரம் தவறாதவர். அவர் மிகத் திறமையான  நடிகர். ஒவ்வொரு காட்சிக்கும், அவர் 3 விதமான நடிப்பை வழங்குவார், எனக்கு மிகவும் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கச் சொல்வார். எனது வெற்றியில் 50% ஐ ஷான் ரோல்டனுக்கு அர்ப்பணிப்பேன். இசையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அவர் ஒரு தூணாக இருந்து வருகிறார். எனது இயக்குநர் குழு சிறந்தது. எனது அடுத்த படத்திற்கும் அவர்களைக் கூடவே வைத்துக்கொள்வேன்.  படத்தை விளம்பரப்படுத்துவதில் முழுமையாகச் செயல்பட்ட வெங்கட்ரமணனுக்கு நன்றி. படத்தில் 'இராகி' என்ற அழகான பாடலையும் அவர் பாடியுள்ளார். இந்த சிறிய டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை  உலகம் முழுவதும் பரவலாக எடுத்துச் சென்று எங்களுக்கு ஒரு பெரிய வெளியீட்டை வழங்கிய விதுரரின் சகோதரருக்குப் பாராட்டுகள். மில்லியன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு என் நன்றிகள்.




தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் கூறியதாவது… 

டூரிஸ்ட் ஃபேமிலி ஸ்கிரிப்டை படித்ததும் எனக்குப் பிடித்தது. இந்தக்கதை கண்டிப்பாக வெற்றி பெறும் என  நம்பினேன், கதை சொன்ன உடனேயே இயக்குநர் அபிஷன் ஜீவிந்திடம் நீ தமிழ் சினிமாவில் பெரிய உயரத்திற்குச் செல்வாய் என பாராட்டினேன்.  படத்தைப் பார்த்த பிறகு, அவர் சொன்ன அளவிற்கு 100% கொடுக்கவில்லை, ஆனால் அவர் 200% செய்து முடித்தார் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.  ஒரு ஸ்கிரிப்டைக் கேட்டு, தயாரிக்க முடிவு செய்த பிறகு, ஷான் ரோல்டனின் இசை, பரத் விக்ரமனின் எடிட்டிங் என அவர்களை நியமித்துவிட்டு  நான் நிம்மதியாகி விடுவேன். அதில் ஆடியோ உரிமைகளும் அடங்கும். சசிகுமார் சாரைத் தேர்ந்தெடுத்த பிறகு, திங்க் மியூசிக் சந்தோஷ், விரைவாகவும் எளிதாகவும் அணுகும் வகையிலிருந்து வருகிறார். எங்கள் விநியோக  கூட்டாளியான விதூர்  சகோதரருடன் சேர்ந்து, வினோத் சிஜே சகோதரரும் படத்தை இவ்வளவு பெரிய அளவில் கொண்டு செல்வதில் ஒரு பெரிய சொத்தாக இருந்துள்ளார். ஒரு சின்ன படம்  ஒரு பெரிய வெளியீட்டைக் காண்பது அரிது. சசிகுமார் சார் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமே இல்லை. எங்கள் எல்லா சித்திரவதைகளையும் தாங்கிக்கொண்டு இந்தப் படத்தில் நடித்ததற்கு நன்றி.  இப்போதும் நீங்கள் உங்கள் மற்ற படப்பிடிப்பை ஒத்திவைத்து, எங்களுடன் இருக்கிறீர்கள் நன்றி.  நான் அடிக்கடி குழந்தைகள் காப்பகத்திற்குச் செல்வேன். நாங்கள் அந்த  குழந்தைகளுக்கு குட் நைட் திரைப்படத்தைத் திரையிட்டோம், அவர்களின் எதிர்வினைகளைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் அனைவரும் இதுபோன்ற மகிழ்ச்சியான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரிக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர். அன்று நான் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்தேன், அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் நன்றி. 




நடிகர் சசிகுமார் கூறியதாவது… 

இவ்வளவு தரமான படத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவர்களுக்கு நன்றி. நான் கம்பெனி புரொடக்‌ஷன்ஸைத் தொடங்கியபோது, புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி சார் தான் எனக்கு அதற்கு உத்வேகமாக இருந்தார், அவர்களின் 90 படங்களில், 48 படங்கள் அறிமுக இயக்குநர்கள் தான். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து புதிய இயக்குநர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன், மேலும் அவர்களின் சிறந்த சிந்தனைக்காக மட்டுமே அவர்களின் பேனர் படங்களைப் பார்க்குமாறு பார்வையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். * இன்றுவரை தங்கள் உரிமைகள் மற்றும் அடையாளங்களுக்காகப் போராடும் அகதிகள் மீது பெரும் அக்கறையும் அன்பும் உள்ளது.   அயோத்தி மற்றும் நந்தனைப் போலவே, டூரிஸ்ட் ஃபேமிலி அகதிகளின் வலியை அழுத்தமாகச் சொல்லும், மிகவும் தகுதியான பாதையை அமைக்கும் படமாக இருக்கும் என்று  என்று நம்புகிறேன்



ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.