Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Friday, 4 April 2025

ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின்

 *'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு*



*இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்*


சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தீயவர் குலை நடுங்க' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை வெளியிட்டுள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகியுள்ள  இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். 



இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் இசையில், ஆதித்யா ஆர் கே குரலில், மனதை வருடும், துள்ளலான காதல் பாடலாக, இப்பாடல் அனைவரின் இதயத்தை கொள்ளை கொள்கிறது. இந்த அழகான பாடல், வெளியான வேகத்தில் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 


சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.


இறுதி கட்டப் பணிகள் முடிந்த நிலையில்,  படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு   பரபரப்பாக இயங்கி வருகிறது.   இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 


'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.



https://youtu.be/u6URcSF-IcQ

No comments:

Post a Comment