Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Sunday, 20 April 2025

குபேரா'வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியிடப்பட்டது: மூன்று தேசிய

 *'குபேரா'வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியிடப்பட்டது: மூன்று தேசிய விருது வென்றவர்களால் உருவான ஒரு சக்தி மிக்க இசை விருந்தாக இந்த பாடல் அமைந்துள்ளது!*




நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருமொழி திரைப்படமான 'குபேரா'வின் முதல் பாடல் - போய்வா நண்பா - இப்போது வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல் மிக்க அதிர்வலைகள், பலவிதமான நடன அமைப்பு மற்றும் துடிப்பான காட்சிகளால் நிரம்பிய இந்த துள்ளலான பாடல் ஏற்கனவே பரபரப்பான ஒரு பாடலாக கொண்டாடப்படுகிறது.


தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் 'ராக்ஸ்டார்' இசைமேதை தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட திறமைமிக்க மூவரும் இணைந்து 'போய்வா நண்பா'வை உண்மையிலேயே சிறப்பான பாடலாக மாற்றியுள்ளனர். விவேகாவின் ஈர்க்கும் விதமான பாடல் வரிகள் மற்றும் DSP-யின் அதிர்வுமிக்க இசைக்கு தனுஷ் தனது வித்தியாசமான குரலை வழங்குவதன் மூலம், இந்த பாடல் இசை, நடனம் மற்றும் சினிமாவின் முழுமையான கொண்டாட்டமாக உருவாகியுள்ளது.


இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பாடலின் க்ளிம்ப்ஸ், ரசிகர்களை வெறித்தனமாக கொண்டாட வைத்ததுடன், தனுஷின் வழக்கமான முத்திரை பதிக்கக்கூடிய நடன அசைவுகள் மற்றும் பாடலின் வேகமாக பரவக்கூடிய தன்மையயும் கொண்டு வந்தது. முழுப்பாடலின் வெளியீடு உற்சாகத்தை அதிகரித்துள்ளதுடன், பல்வேறு இசைத் தளங்களில் பிரபலமடைந்து இசைவிரும்பிகள் மற்றும் திரைப்பட ரசிகர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.


நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட 'குபேரா' ஒரு பிரம்மிக்க வைக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், ஏஷியன் சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகியோரால் படைக்கப்பட்ட ஒரு மதிப்புமிக்க இருமொழி தயாரிப்பு ஆகும்.


'குபேரா' ஜூன் 20,2025 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment