Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Thursday, 17 April 2025

குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!

 *’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!*










நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. 


https://youtu.be/ifjRZmNvAY0?si=dgk74NrW6AbiEFDF


https://youtube.com/shorts/PSM5FN5XNlE?si=qUf-E8AgQVcE16wS


https://youtube.com/shorts/qW8w8Dyp1VE?si=SDenq17WqzdpDvUG


https://youtube.com/shorts/E5gmsFD_SDw?si=uUK8P1FoulVzLgvz


Good Bad Ugly Movie Event Videos


நிகழ்வில் கலந்து கொண்ட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசியதாவது, “’மார்க் ஆண்டனி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் சாருக்கு நன்றி. இந்தப் படம் ப்ளே கிரவுண்ட் போல. எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற சுதந்திரத்தை இயக்குநர் கொடுத்தார். அஜித் சார் படத்தில் பணிபுரிந்தது எனக்கு பாக்கியம். என்னுடைய அணி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி”


டான்ஸ் மாஸ்டர் கல்யாண், “’குட் பேட் அக்லி’ படத்தின் அனுபவம் செம மாஸ். ஒவ்வொரு ஃபிரேமையும் ஆதிக் செதுக்கி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் வந்தது மிகப்பெரிய வரம். இந்த டீமுக்கு நான் புதிது. ஆனால், செம ஜாலியாக ஷூட்டிங் இருந்தது. ஜிவி பிரகாஷ் படத்தின் பாடல்களில் கலக்கி விட்டார். பாடல்களுக்கு விஜய் வேலுக்குட்டி செம எடிட்டிங் செய்திருந்தார். அஜித் சார் என்றாலே வேற லெவல் எனர்ஜிதான். அனைவருக்கும் நன்றி”.


ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம், “ஆதிக் சாருடைய அப்பா ரவி சாருக்கு முதல் நன்றி. அவர்தான் என்னை ‘மார்க் ஆண்டனி’ படத்திலும் சஜெக்ட் செய்தார். எல்லாருமே இந்தப் படத்தில் ஃபேன் பாயாக மாறிதான் வேலைப் பார்த்தோம். இதுபோல படம் எடுக்க மைத்ரியால் மட்டும்தான் முடியும். என்னுடைய டீமுக்கு நன்றி. அனு மேம் காஸ்ட்யூம் சூப்பராக இருந்தது. என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்திற்கு நன்றி”.



ஃபைட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், “இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக வாய்ப்புக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றி. ஆதிக் சாருடன் ‘மார்க் ஆண்டனி’படத்தில் வேலை பார்த்தேன். படம் வெளிவருவதற்கு முன்பு ஹால்ஸ், விக்ஸ் எடுத்துக் கொண்டு வாங்க என நான் சொன்னது சர்ச்சை ஆனது. ஆனால், படம் வேலை பார்க்கும்போதே அது ஜெயித்து விடுமா என்பது எங்களுக்குத் தெரிந்து விடும். நெகட்டிவ் எல்லாவற்றையும் தகர்த்து கொடுத்து இருக்கிறது. ஃபைட்டில் வரும் பாடல் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. அர்ஜூன் தாஸ், பிரியா எல்லாருக்கும் நன்றி. படத்தை வெற்றிப் படமாக்கிய அஜித் சார் ரசிகர்களுக்கும் நன்றி” என்றார். 


காஸ்ட்யூம் டிசைனர் அனு வர்தன், “ஆதிக் உங்களுக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு வித்தியாசமான அனுபவம். தயாரிப்பாளர் மைத்ரிக்கும் நன்றி. படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி”. 


நடிகர் கே.ஜி.எஃப். அவினாஷ், “ஏகே ஒரு ரெட் டிராகன். என் இயக்குநர் ஆதிக் சாருக்கு நன்றி. முதலில் அவரிடம் இருந்து ஃபோன் கால் வந்தபோது நான் நம்பவே இல்லை. என்னை சிறப்பாக காட்டியதற்கு நன்றி. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. அர்ஜூன் தாஸ் சாரின் குரல் எனக்கு பிடிக்கும். ரசிகர்களுக்கு நன்றி”.


நடிகர் ரகு ராம், “படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய கொண்டாட்டமாக அமைந்து எனக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது.  அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி”.


நடிகர் கார்த்திகேய தேவ், “என் இயக்குநர் ஆதிக்கிற்கு நன்றி. அஜித் மிகவும் இனிமையானவர். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அஜித்- த்ரிஷாவுடன் நடித்தது எனக்கு பெரிய சாதனை. அர்ஜூன் சார், ப்ரியா மேம் அனைவருக்கும் நன்றி. படம் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது”.


அசார் மாஸ்டர், “ இதெல்லாம் எனக்கு கிடைக்குமா என்று கனவாகவே இருக்கிறது. கடவுளுக்கும் அஜித் சாருக்கும் ஆதிக் சாருக்கும் நன்றி. ஒட்டுமொத்த பட குழுவுக்கும் நன்றி. அர்ஜுன் சார் ஃபயராக படத்தில் ஆடியிருப்பார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் நிஜமாகவே ஃபயரில் தான் டான்ஸ் செய்தார். இரண்டு லெஜெண்ட் பாடல்களை ரீகிரியேட் செய்திருக்கிறோம். அதற்கு நியாயம் சேர்த்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நன்றி". 


நடிகர் அர்ஜூன் தாஸ், " எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அனைவருக்கும் நன்றி. சுரேஷ் சாருக்கு நன்றி. கடந்த 2013ல் இருந்து அஜித் சார் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். அஜித் சார் படத்தில் வேலை செய்வது எனக்கு பெரிய ரெஸ்பான்ஸ்பிலிட்டி. என்னை புஷ் செய்து வேலை வாங்கிய அசார் மாஸ்டருக்கு நன்றி. கல்யாண மாஸ்டர், ஜிவி சாருக்கும் நன்றி. ப்ரியா, கார்த்திகேய தேவ் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.


நடிகர் பிரசன்னா, “அஜித் சாருடன் வேலை செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அவரைப் பார்த்துதான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். ‘மங்காத்தா’ பட சமயத்தில் வெங்கட்பிரபு என்னை அழைத்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. அஜித் சாரின் ஒவ்வொரு படம் அறிவிக்கும்போது வாய்ப்பு அருகில் வந்து நடக்காமல் போகும். முதல் நாள் இந்தப் படத்தின் செட்டில் அவரை சந்திக்கும் போது, என்னை முந்திக் கொண்டு, பல வருடம் தள்ளிப் போனது இப்போது நடந்திருக்கிறது எனச் சொல்லி என்னைக் கட்டிப் பிடித்தார். அந்த ஒரு விஷயம் எனக்கு போதும். என் கனவை நிறைவேற்றியதற்கு ஆதிக்கிற்கு நன்றி. எனக்கு கடைசி வரையும் ஆதிக்கின் ஃபிலிம் மேக்கிங்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடைசி வரை புரியாமலேயே நடித்த படம் இது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தை ஹிட்டாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் தான் அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகன் என்ற இறுமாப்பில் சென்றேன். ஆனால், அஜித் சாருக்கு ஒவ்வொரு ஃபிரேமும் ஆதிக் பார்த்து பார்த்து வைத்து என் எண்ணத்தை தவிடு பொடியாக்கி விட்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கும் நன்றி” என்றார். 


நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர், "என்னுடைய இரண்டாவது தமிழ் படத்துக்கே இப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் ’AK64’ என ஒரு ஹிண்ட் கொடுத்திருக்கீங்க ஆதிக். இந்த இடத்தில ஓப்பனாகவே வாய்ப்பு கேட்கிறேன். என்னையும் அந்த படத்துல நடிக்க வைக்க ரெக்கமன்ட் பண்ணுங்க. அஜித் சாருடைய பிரியாணி மற்றும் ரைட் இப்போ என்னுடைய பக்கெட் லிஸ்ட்ல இருக்கு. அவர் இப்போது ரேஸ்ல இருக்காரு. அவருக்காக நாங்க இங்க கடவுளை வேண்டிக்கிறோம். OG சிம்ரன் மேமுக்கு நன்றி சொல்லிக்கிறேன். தமிழ் மக்களுக்கு ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன்" என்றார். 


நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி, “நெல்சன் சாருக்கு முதல் நன்றி. 28 வருடங்களுக்கு முன்பு அஜித் சாரின் ‘அவள் வருவாளா…’ படத்தில் க்ரூப் டான்ஸராக ஆடியிருக்கிறேன். இப்போது இந்த வாய்ப்பு கொடுத்த ஆதிக் மற்றும் அவரின் அப்பா ரவி சாருக்கு நன்றி. இது எனக்கு மிகப்பெரிய கனவு. படத்தில் இரண்டு சீன் தான் வந்தாலும் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.


இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “18 வருடங்கள் கழித்து அஜித் சாருடைய படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அஜித் சாருக்கு நன்றி. இப்படி ஒரு பிளாக்பஸ்டர் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’, ‘மார்க் ஆண்டனி’ இப்போது ‘குட் பேட் அக்லி’ என ஆதிக்குடன் மூன்று ஹிட் படங்கள் கொடுத்திருப்பதில் சந்தோஷம். தயாரிப்பாளர்கள் ரவி சார், நவீன் சாருக்கும் நன்றி. தமிழில் மிகப்பெரிய படம் மூலம் எண்ட்ரி கொடுத்திருக்கிறீர்கள். என்னுடைய டீமுக்கும் நன்றி. டெக்னிக்கல் டீமும் அருமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தியா மட்டுமில்லாமல் ஸ்ரீலங்கா, மலேசியாவிலும் படம் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களுக்கும் நன்றி” என்றார். 


தயாரிப்பாளர் நவீன், ”படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. நடிகர் அஜித் அவர்களுக்கும் இயக்குநர் ஆதிக்கிற்கும் நன்றி”.


இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “ஏழாவது படிக்கும் ஒரு பையன், ஒரு நடிகரைப் பார்த்து உத்வேகம் அடைந்து, இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டு இன்று இந்த இடத்தில் நிற்கிறான். நான் அஜித் சார் ரசிகனாக மாறாமல் இருந்திருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை. சினிமாவுக்கு வராமல் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டு இருந்திருப்பேன். அஜித் சாரின் ரசிகராக இருந்தால், என்ன நடக்கும் என்பது இந்த தருணத்தில் எனக்கு நிதர்சனம் ஆகியுள்ளது.


நான் எப்போதும் அஜித் சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போது நான் சரியான சினிமா வாழ்க்கை இல்லாத இயக்குநர். பெரிய ஹிட் இல்லாத இயக்குநர். எனது முதல் படம் மட்டுமே ஹிட் கொடுத்தது. ஆனால், அஜித் சாரைப் பொறுத்தவரையில் எப்போதும் யாரிடமும் வெற்றி தோல்வியை பார்த்தது கிடையாது. ஒரு சக மனிதராக தான் பார்ப்பார். என்னிடம் இருந்து அவர் என்ன கவனித்தார் என்பது எனக்கு இப்போதுவரை கேள்வியாக உள்ளது.


படப்பிடிப்புத் தளத்தில் கூட அஜித் சாரிடம் கேட்டேன், ' எதை வைத்து சார் நீங்கள் போனி கபூர் சாரிடம் நான் பெரிய இயக்குநராக வருவேன்' எனக் கூறினீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் எதுவும் கூறாமல், சிரித்துக் கொண்டு போய்விட்டார். இந்த தருணத்தில் நான் சுரேஷ் சந்திரா சாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அஜித் சார் என்னை நம்பிய அளவுக்கு நீங்களும் என்னை நம்பினீர்கள். இங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோக்களைப் பார்க்கும்போது மிகவும் எமோஷ்னலாகிவிட்டேன். அந்த கூட்டத்திற்குள் இருந்தவன்தான் நான்.


அங்கு இருந்த என்னை இங்கு உங்கள் முன் நிறுத்தி அழகு பார்க்க வைத்த அஜித் சாருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அஜித் சார் தன்னை எப்போது பெரிய ஸ்டாராக கருதியது கிடையாது. அவர் தன்னை ஒரு நடிகராக மட்டுமே நினைக்கிறார். இந்த படம் இந்த அளவிற்கு எனர்ஜியாக இருக்க முக்கிய காரணம், அவரது மொத்த எனர்ஜியும் குட் பேட் அக்லி தான். படத்தின் டைட்டிலை முடிவு செய்தது அஜித் சார்தான். அதில் இருந்து, இரவோடு இரவாக டப்பிங் முடித்துவிட்டு அவர் ரேஸ்க்கு கிளம்பும் வரை தன்னால் முடிந்த அனைத்தையும் இந்த படத்திற்காக கொடுத்துள்ளார். ஐ லவ் யூ அஜித் சார்


நான் எனது மனைவியிடம் ஐ லவ் யூ சொன்னதை விடவும் உங்களுக்குத்தான் அதிகம் ஐ லவ் யூ சொல்லி உள்ளேன். அதுதான் உண்மையும் கூட. எனது மனைவியை விட உங்களை தான் சார் அதிகம் நேசிக்கிறேன். எனது பெற்றோர்களுக்கு அடுத்து எனது வாழ்க்கையில் இருப்பது நீங்கள் தான் சார்" என எமோஷனலாக பேசியுள்ளார்.

No comments:

Post a Comment