Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Thursday, 24 April 2025

Until Dawn Review

Until Dawn Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம until dawn ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு survival horror movie னு சொல்லலாம். 2015 ல வெளி வந்த ஒரு video game ஓட title யா தான் இந்த படத்துக்கு வச்சிருக்காங்க. அது மட்டும் இல்ல இந்த game ஓட theme தான் இந்த படம் னு கூட சொல்லலாம். lights out , shazam போன்ற படங்களை இயக்கிய  David F. Sandberg , இந்த படத்தை இயக்கி இருக்காரு. Ella Rubin, Michael Cimino, Odessa A'zion, Ji-young Yoo, Belmont Cameli, and Peter Stormare னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.

Until Dawn Movie Video Review: https://www.youtube.com/watch?v=-aJwVhizOXI



இந்த படத்தோட கதை என்னனு பாத்தீங்கன்னா melanie ன்ற ஒரு பொண்ணு காணாம போய்டுற. இந்த melanie  clover  ஓட அக்கா. இவங்க தொலைஞ்சு ஒரு வருஷம் ஆயிருக்கும்.அவளை தேடுறதுக்காக clover  யும் அவளோட friends யும் ஒரு இடத்துக்கு வராங்க.  அங்க இருக்கற ஒரு lodge ல தங்கலாம் னு முடிவு எடுப்பாங்க. அங்க இருக்கற register அ check பண்ணி பாத்த melanie ஓட கையெழுத்து daily யும் sign பண்ணிருக்கற மாதிரி இருக்கும். ஓவுவுறு sign வேற விதமா இருக்கும் ஆனா அது melanie ஓட sign னு அவங்களுக்கு தெரியும்.  அந்த register  ல nina  ன்ற பொண்ணு sign பண்ணுவா. அன்னிக்கு night ஏ  இவங்க எல்லாரும் கொடூரமா செத்து போயிடுறாங்க. இங்க தான் பெரிய twist  நடக்குது.  திடுறுனு பாத்த மறுபடியும் இவங்க அந்த இடத்துக்கு வந்துருப்பாங்க ல அதே timeline ல இருக்காங்க. இவங்களுக்கு எப்படி செத்தோம் ன்றதும் ஞாபகம் இருக்கும். அதே சமயத்துல இவங்க உடம்பு ல அந்த காயெல்லாம் இருக்கும். இந்த time  loop ல இவங்க மாட்டிக்கிறாங்க. அதாவுது night இவங்க இறந்ததும் காலைல உயிரோட வருவாங்க.  correct அ இவங்க சாகுற time வரும் போது யாரோ ஒருத்தர் இவங்கள கொடூரமா கொன்னுடுறா. அதுவும் ஓவுவுறு night ளையும் வேற வேற ஆளு வந்து இவங்கள கொலை பண்ணுவான். ஆனா இவங்க சாகுறதுக்கும் ஒரு limit  இருக்கு. அதா மீறிட்டாங்கன்னா இவங்களால மறு நாளு உயிரோட வர முடியாது. இவங்க உயிரோட இருக்கணும் னா night ல அந்த கொலைகாரன் கிட்ட இருந்து தப்பிச்சு விடியற வரைக்கும் உயிரோட இருக்கணும்.இவங்க இதே time  loop ல மாட்டிக்கிறாங்களா இல்ல உயிரோட இந்த எடத்துல இருந்து தப்பிக்கிறாங்களா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இது ஒரு butterfly effect னே சொல்லலாம். ஏன்னா இவங்க எல்லாரும் என்ன முடிவு எடுக்கறாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி தான் அனுபவிப்பாங்க. நெறய gore scenes , violence , scare scenes னு எக்கச்சக்கமா கொட்டி வச்சிருக்காங்க. என்னதான் கதை ரொம்ப familiar அ இருந்தாலும் அதா கொண்டு வந்த விதம் ரொம்ப interesting அ இருந்தது. இந்த characters சாகுறது எல்லாமே வேற வேற method ல இருக்கும். அது பாக்குறதுக்கு அவளோ violent அ இருக்கும். அதோட cgi ல இல்லாம இந்த scenes அ பண்ணிருக்கறதுனால இன்னும் realistic அ தெரியுது னே சொல்லலாம். சில தடவை ஒரு சில characters சாகுறதுக்கு தயாரா இருப்பாங்க. ஆனா இந்த gang குள்ள அவ்ளோ stress இருக்கும். அடுத்து என்ன பண்றதுனு தெரியாது. இன்னும் சொல்ல போன அந்த gang ல ஒரு couple இருப்பாங்க. அவங்களுக்குள்ள break up அ ஆயிடும். 


ஒரு entertaining ஆனா படம் தான் இது. கதை போக போக mystery solve ஆகுறது லாம் super அ இருந்தது. ella rubin தான் clover அ நடிச்சிருப்பாங்க. இவங்க acting பக்கவா இருந்தது. peter stormare  தான் villain அ இந்த படத்துக்கு super அ set ஆயிருக்காரு. until dawn video game அ விளைய்டினுவங்க இந்த படத்தை எப்படி பாப்பாங்க னு தெரியல ஆனா இந்த game ஓட core theme அ ரொம்ப beautiful அ இந்த படத்துல கொண்டு  வந்திருக்கங்க னு தான் சொல்லணும். ஒரு நல்ல interesting ஆன horror படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை theatre ல miss பண்ணாம பாருங்க.

No comments:

Post a Comment