*சிற்றில் ப்ராப்ரிட்டி மேனேஜ்மென்ட் நடத்திய சிற்றில் குறும்பட விழாவில் வெற்றிபெற்ற "அகனள் " குறும்படம் !*
சிற்றில் ப்ராப்ரிட்டி மேனேஜ்மென்ட் நடத்திய சிற்றில் குறும்பட விழா சென்னையில் சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடந்தது. சிற்றில் ப்ராப்ரிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனர் திரு. பிரபு சங்கர் ரிலீஸ்க்கு தவிக்கும் பல குறும்படங்களில் சிறந்ததை தேர்வு செய்து ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளார் .அதன் நோக்கமே இந்த குறும்பட விழா.
இந்த குறும்பட விழாவில் கார்த்திக் ராம் இயக்கிய அகனள் குறும்படம் முதல் பரிசை தட்டி சென்றது .திருநங்கைகளுக்கு விளையாட்டில் அங்கீகாரம் வேண்டும் என்பதே இக்கதையின் கருவாக உள்ளது .விக்ரம் விஜய் என்பவர் இந்த குறும்படத்தை தயாரித்து நடித்துள்ளார் . மேலும் இந்த குறும்பட விழாவை சிற்றில் ப்ராப்ரிட்டி மேனேஜ்மென்ட் திரு. பிரபு ஷங்கர் , திரு. தேனப்பன் , திரு. கோபிநாத் விகேஇ பிலிம் நிறுவனர், திரு. லெனின் பாபு (தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மற்றும் இயக்குனர்), திருமதி. தீபிகா (டெண்ட்கோட்டா ஓடிடி), நடிகர் சரத்ரவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். அகனள் குறும்படம் டெண்ட்கோட்டா ஒடிடி தளத்தில் விரைவில் வெளியிட உள்ளனர்.
No comments:
Post a Comment