Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Monday, 21 April 2025

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி

 *எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி!!*


*சாதனை படைக்கும் #AA22xA6 படத்தின் அறிவிப்பு காணொளி!!*






'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் -  இயக்குநர் அட்லீ - சன் பிக்சர்ஸ் ஒன்றிணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இதனால் திரையரங்குகளுக்கு சென்று சினிமாவை கொண்டாடும் இந்திய அளவிலான ரசிகர்களிடத்தில் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மிக பெரிய அளவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது. 


இந்திய திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திர வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்து வரும் அல்லு அர்ஜுன் - அட்லீ - சன் பிக்சர்ஸ் கூட்டணி #AA22xA6 எனும் திரைப்படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இவர்களின் இணைவு - இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான சினிமா ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்தைப் பற்றிய அப்டேட்டை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் அதீத ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். 


'ஐகான் ஸ்டார் ' அல்லு அர்ஜுனின் வசீகரிக்கும் திரைத் தோற்றம் -  பிரம்மாண்டத்தின் நிரந்தர அடையாளம் சன் பிக்சர்ஸ் - டபுள் ஹாட்ரிக் படைப்பாளி அட்லீ என தனித்துவமான சாதனையாளர்கள் ஒன்றிணைந்திருப்பதால் #AA22xA6 சர்வதேச தரத்திலான VFX தொழில்நுட்பத்துடன் தயாராகி வருகிறது. இந்த வெற்றியைக் காண தமிழ் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் உத்வேகத்துடன் காத்திருக்கிறது.  


அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் - அட்லீயின் ரசிகர்கள்-  சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சர்வதேச தரத்திற்குரிய ரசிகர்கள்-  கமர்சியல் ஃபிலிம் ரசிகர்கள்- ஆக்ஷன் ஃபிலிம் ரசிகர்கள் - என அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்திற்காக உற்சாகம் குறையாமல் காத்திருக்கிறார்கள்.  இதனை உணர்ந்து கொண்ட படக் குழுவினரும் படத்தைப் பற்றி அப்டேட்டை தொடர்ந்து வெளியிடவுள்ளனர்.

No comments:

Post a Comment