Featured post

2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் ஓப்பனிங் கொண்ட ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் விடுமுறை காலத்தில் குடும்பங்கள் கொண்டாடும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது!

 *2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் ஓப்பனிங் கொண்ட ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் விடுமுறை காலத்தில் குடும்பங்கள் கொண்ட...

Monday, 14 April 2025

கலைப்புலி ஜி சேகரன் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

 *கலைப்புலி ஜி சேகரன் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்*



நடிகர்-தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் கலைப்புலி ஜி சேகரன் மறைவுக்கு , இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: 


பன்முகத்தன்மை மிக்க கலைப்புலி ஜி சேகரன் நடிகர், தயாரிப்பாளர்,  விநியோகஸ்தர் என முத்திரை பதித்தவர். அவரது மறைவு திரையுலகிற்கு ஒரு பெரும் இழப்பாகும். 


அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய இல்லத்தாருக்கும், கலையுலகத்தை சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


T. ராஜேந்தர், எம்.ஏ.

‍‍- இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் 


***

No comments:

Post a Comment