Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Thursday, 24 April 2025

Gangers Movie Review

Gangers Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருந்த படம் sundar c ஓட direction ல வெளி வந்திருக்க gangers படத்தோட review அ தான் பாக்க போறோம். Sundar C, Vadivelu, Catherine Tresa, Vani Bhojan and Bagavathi Perumal னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. sundar c யும் வடிவேலு யும் கடைசியா நகரம் மறுபக்கம் படத்துல பாத்துருப்போம். 15 வருஷம் கழிச்சு இந்த படத்துல நடிச்சிருக்காங்க.  சோ வாங்க படத்தோட கதை க்கு போலாம். 

Gangers Movie Video Review: https://www.youtube.com/watch?v=oqnC_Gef7uo



ஒரு சின்ன town ல ஸ்கூல் ல படிக்கற ஒரு பொண்ணு தொலைஞ்சு போய்டுற. அதே ஸ்கூல் ல teacher அ வேலை பாத்துட்டு இருக்கற sujitha வா நடிச்சிருக்க catherine therasa இந்த பொண்ணு missing னு ஒரு case அ file பண்ணறாங்க. இதை கண்டுபிடிக்கறதுக்காக ஒரு police அ undercover operation ல அந்த school க்கு அனுப்பி வைக்கிறாங்க. அதே சமயத்துல புது pt staff அ saravanan அ நடிச்சிருக்க sundar c வராரு. அதோட இங்க தான் pt staff singaram அ நடிச்சிருக்க வடிவேலு இருக்காரு. singaram , sujitha  க்கு route விட்டுட்டு இருப்பாரு. அதே சமயத்துல saravanan அ எதிரியா பாக்க ஆரம்பிக்குறாரு. இதே town அ மூணு அன்னான் தம்பிங்க தான்  control ல வச்சுட்டு இருப்பாங்க.   அவங்க கிட்ட நெறய பணம் இருக்கும். அதா கொள்ளை அடிக்கறதுக்காக saravanan , sujitha , singaram திட்டம் போடுவாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


எப்பவும் போல sundar c ஓட படங்கள் நாளே commercial aspects அ இருக்கட்டும் இல்லனா comedy portions அ இருக்கட்டும் இதெல்லாம் miss ஏ ஆகாது. அதே மாதிரி தான் gangers படம் இருக்கும். நீங்கமனசை விட்டு சிரிக்கிற மாதிரி ஒரு அருமையான படமா தான் குடுத்திருக்காங்க. director ஓட  கடைசி படமான aranmanai 4 அப்புறம் மத கஜ ராஜா படங்கள் ல செம hit ஆச்சு. மத கஜ ராஜா ல santhanam highlight அ தெரிஞ்சுதுன்னா இந்த படத்துல vadivelu அசத்திட்டாரு னே சொல்லலாம் . story ரொம்ப strong அ இல்லனாலும் audience ஓட கவனத்தை எப்படி ஈர்க்கணும் னு director  க்கு நல்லாவே தெரிஞ்சுருக்கு. படத்தோட first  half  கொஞ்சம் slow  அ போனாலும் அதுக்கு அப்புறம் தான் இவங்க எல்லாரும் ஒரு gang  அ form  ஆகி பணத்தை கொள்ளை அடிக்கற portions  வருது. இதெல்லாம் ரொம்ப விறுவிறுப்பா , ரொம்ப comedy அ கொண்டு வந்திருக்காங்க. 


இப்போ லாம் நெறய படத்துல பழைய படங்களோட reference அ வைக்க ஆரம்பிச்சுட்டாங்க அது songs அ இருக்கும் இல்ல dialogues அ இருக்கும். அதே மாதிரி தான் sundar c யும் இந்த படத்துல ஒரு சில references அ வச்சிருக்காரு. ஆனா இவரு direct பண்ண படங்களோட reference அ தான் use பண்ணிருக்காரு.  anbe sivam , Coffee with Kadhal, and Kalakalappu இந்த படங்களோட posters அ நீங்க பாக்கலாம். அதே மாதிரி அவங்க theatre ல கூட மத கஜ ராஜா படத்தை தான் பாப்பாங்க. இந்த படத்துல ஒரு cameo role யும் இருக்கு. இதெல்லாம் ரொம்ப natural அ படத்துக்கு ஒத்து போயிருந்தது னு தான் சொல்லணும். ஒரு சில காமெடி scenes லாம் நம்ம எதிர்பாத்தது ன்ற மாதிரி தான் இருந்தது. வடிவேலு ஓட பழைய காமெடி style அதுவும் winner london படங்கள் ல எப்படி இருந்தாரோ அப்படியே தான் இந்த படத்துல இருக்காரு. அழகான பொண்ணு பின்னாடி சுத்துறது, வில்லன் கிட்ட மாட்டிகிறது, எந்த பிரச்சனை வந்தாலும் இவரை பலி ஆட நிறுத்துறது னு ஒரே comedy அ தான் இந்த படத்தை கொண்டு போயிருக்காங்க. 


மொத்தத்துல fun அ ரெண்டு மணி நேரம் time pass ஆணும் ந கண்டிப்பா இந்த படத்தை theatre ல உங்க family and friends ஓட சேந்து miss பண்ணாம பாருங்க.

No comments:

Post a Comment