Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Saturday, 10 May 2025

டெண்ட்கொட்டாவில் பரபரப்பான டென் ஹவர்ஸ்!!!*

*டெண்ட்கொட்டாவில் பரபரப்பான டென் ஹவர்ஸ்!!!*



*சிபி சத்யராஜின் டென் ஹவர்ஸ் திரைப்படம் டெண்ட்கோட்டா OTT இல் இப்பொழுது ஸ்ட்ரீமிங் ஆகிறது.*


டென் ஹவர்ஸில், ஓடும் பேருந்தில் நடக்கும் ஒரு கொலையை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக சிபி சத்யராஜ் நடித்திருக்கிறார். படத்தின் தலைப்பு குறிப்பிடுவது போல, கொலை மற்றும் விசாரணைக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் ஒரு இரவுக்குள் நடக்கின்றன.


டென்ட்கோட்டா கடந்த சில வாரங்களாக,  பார்வையாளர்களுக்கு ஃபயர், ஜென்டில்வுமன், காதல் என்பது பொதுவுடமை, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், மர்மர், ட்ராமா மற்றும் தருணம் உள்ளிட்ட பல்வேறு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த படைப்புகளை கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு படமும் புதிய கதைசொல்லும்பாணி , துணிச்சலான கதைக்களம் மற்றும் தமிழ் சினிமாவின் தனித்துவமான மாற்றங்களை உள்ளடக்கிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிடுகிறார்கள்.


மேலும் குறைந்த பட்ஜெட்டில் வரும் எளிய தொகையை கட்டணமாக கொண்டிருக்கும் டென்ட்கொட்டாவின் சேவை 4k மற்றும்  Dolby Atmos தரத்தில் தங்களது சேவையை கொண்டுள்ளது சிறப்பு.


டெண்ட்கோட்டாவில் இந்த வாரம் டென் ஹவர்ஸை ஸ்ட்ரீம் செய்யுங்கள்.


--


*

No comments:

Post a Comment