*ரிஷப் ஷெட்டி பிறந்த நாளையொட்டி, ஹொம்பாலே பிலிம்ஸ் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் அதிரடியான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது – இப்படம் வரும் அக்டோபர் 2, 2025 அன்று திரைக்கு வருகிறது!*
2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம், இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வந்தது. 2022 ஆண்டின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனைகளைப் படைத்தது. இந்திய அளவில் பெரிய வெற்றிப்படங்களைத் தந்த ஹொம்பாலே பிலிம்ஸ் (கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மெகா ஹிட் படங்களை வழங்கிய நிறுவனம்) அடுத்ததாக தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1 – தற்போது இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்தப் ப்ரீக்வலில், ரிஷப் ஷெட்டி இதுவரை பார்த்திராத ஒரு அதிரடி தோற்றத்தில் வெளிவந்திருக்கும் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு, படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதென அறிவித்துள்ளனர் – இது ரிஷபின் பிறந்தநாளுக்கான சிறந்த பரிசாக அமைந்துள்ளது!
காந்தாரா: Chapter 1 திரைப்படம், அந்தக் கதையின் தோற்றத்தை சொல்வதோடு, லட்சக்கணக்கான ரசிகர்களை மயக்கிய அந்த மாஸ்டர் பீஸ்க்கு முன்னோட்டமாக அமையவுள்ளது.
இது குறித்துப் படக்குழுவினர் சமூக ஊடகத்தில் கூறியுள்ளதாவது..:
“அழகிய அரண்களில் பிறக்கும் புராணங்கள்… காட்டு கர்ஜனையின் ஒலி எங்கும் ஒலிக்கிறது…
மில்லியன் மக்களின் மனதை நெகிழவைத்த அற்புதத்தின் முன்னோடி…
#Kantara – Chapter 1.”
“மக்களுக்காக ஒரு புராணமாக உருவெடுத்த நாயகன் ரிஷப் ஷெட்டி அவர்களுக்குத் தெய்வீகமான பிறந்தநாள் வாழ்த்துகள்!”
இந்த புதிய போஸ்டர் வெளியாகியவுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸின் பிரம்மாண்ட உருவாக்கம், ரிஷப் ஷெட்டியின் அர்ப்பணிப்பு, முதல் பாகத்தின் மரபு – இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு மாபெரும் சினிமா அனுபவமாக மாற்றுவதை உறுதி செய்கின்றன.
படத்தில் இடம்பெறும் ஒரு பெரிய போர்க் காட்சிக்காக, இந்தியா மற்றும் உலகம் முழுவதிலிருந்து வந்த நிபுணர்களுடன் இணைந்து, சன்டைப் பயிற்சி பெற்ற 500 பேருடன் மேலும் 3000 கலந்துகொள்ள, 25 ஏக்கர் பரப்பளவில் 45–50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இது இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய போர்க்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து ரசிகர்களின் இதயங்களை வென்றுகொண்டிருக்கிறது. இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களான காந்தாரா: சேப்டர் 1 (அக். 2, 2025) மற்றும் சலார் பார்ட் 2– சௌர்யங்க பர்வம் ஆகியவை விரைவில் திரைக்கு வரவுள்ளன.
No comments:
Post a Comment