Featured post

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும்

 கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம...

Monday, 29 August 2022

Jiivi-2 gave an opportunity to improvise and offer the best” – Cinematographer Praveen Kumar

 *“Jiivi-2 gave an opportunity to improvise and offer the best” – Cinematographer Praveen Kumar* 


V House Entertainment Suresh Kamatchi’s latest outing ‘Jiivi-2’ premiered on August 19 in Aha Tamil and garnered fabulous responses among film critics and general audiences. In particular, the fans of this franchise were excited to see the sequel creating a brilliant impact. 


Written and directed by V.J. Gopinath, the film features actor Vetri and actress Ashwini as the titular characters, who had played the same roles in the first part. Besides, the same star cast of Jiivi-1 including Rohini, Mime Gopi, Rama, and Karunakaran have reprised their roles in Jiivi-2 as well. The movie is gaining positive reception for not just the storytelling, finest directorial, and stellar performances, but for the top-notch camera works. During this juncture, cinematographer Praveen Kumar shares his experience of working on this movie. 




“While shooting the first part, there was obscurity in thoughts, whether this experiment would work out as we attempted something new. To our surprise, the results were beyond our expectations. However, when we decided to step on with the sequel project, there were few challenges as it had lots of scenes and demanded many locations and a big budget when compared to the first part. More than all, the entire project had to be wrapped up in just 23 days. 


The script reading process indeed was an amazing experience as the sequel had lots of surprising elements, and the way, it had a connection with the first part was intriguing. 


The Triangle Theory & connectivity are always inclined toward the concept of Déjà vu. We would have come across many incidents, where we might have felt some incidents had already occurred earlier in our lives. It’s more like a faded dream. Jiivi franchise was created based on this concept with the blend of fantasy elements by director VJ Gopinath. 


When working in Jiivi-1, we never thought of creating a sequel. However, we have placed a lead for the third part in Jiivi-2. 


Whenever I used to watch Jiivi, I used to feel something lacking in my work. I would be brimming up with thoughts, what if I had captured better visuals than what I am seeing now.  I have justified it accordingly in the second part. Working in a couple of movies between Jiivi 1 & 2 instilled in me some experience… 


If director VJ Gopinath kept imparting lots of information, producer Suresh Kamatchi sir gave us everything to make sure that the final output is perfect. 


I have shared a good bonding with Vetri while working together with him in the first part itself. He used to come up with lots of doubts like if we can this way or the other option. He would keep asking if his performance is good, or if there was a necessity for one more take. However, he has improved a lot with his acting in the second part. If for a minute shot like smoking, he would follow the continuity in the following shot. 


 I was initially worried that the movie had a direct OTT premiere instead of a theatrical release. However, looking into the stream of big releases in the following weeks, it was evident that Jiivi-2 would go unnoticed due to the lack of screens, which in turn, would land producer in crisis. So, all of us in the team felt that the OTT release is the best solution, and to my surprise, the response is overwhelming… More than all, it’s elating to see that the complete works of the movie were completed in a span of 6 months and got released as well.”

ஜீவி-2ல் சரி செய்யும் வாய்ப்பு கிடைத்தது ; ஒளிப்பதிவாளர் பிரவீண் குமார்

 *ஜீவி-2ல் சரி செய்யும் வாய்ப்பு கிடைத்தது ; ஒளிப்பதிவாளர் பிரவீண் குமார்*


*செமையா ஒர்க் அவுட் ஆகிருச்சு" ; சிலாகிக்கும் ஜீவி 2 ஒளிப்பதிவாளர்*


வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட்-19ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் ஜீவி-2. கடந்த 2019ல் வெளியாகி புதுமையான முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்ட ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப்படம் உருவாகியுள்ளது. 


V.J.கோபிநாத் இயக்கியுள்ள இந்தப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய வேடங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, ரமா, கருணாகரன் என முதல் பாகத்தில் பங்குபெற்ற நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்தப்படத்திலும் தொடர்ந்துள்ளனர்.




ஓடிடி தளத்தில் வெளியானாலும் கூட, படத்திற்கு முதல் பாகத்தை போலவே ரசிகர்களின் வரவேற்புடன் பாசிடிவான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றது. 


இந்த நிலையில் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள பிரவீண் குமார் தனது அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

 

முதல் படத்தில் பணியாற்றும்போதே இந்த பரிசோதனை முயற்சி ஒர்க் அவுட் ஆகுமான்னு சந்தேகம் இருந்துச்சு. அதுல எதுனா புதுசா ட்ரை பண்ணலாம்னு பண்ணினோம். செமையா ஒர்க் அவுட் ஆகிருச்சு. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிக காட்சிகள் இடம்பெற்றுள்ன. அதையெல்லாம் 23 நாட்களில் எடுத்து முடிக்க வேண்டிய சவால். நிறைய லொக்கேஷன், நிறைய இடம், நிறைய பயணம் இந்தப் படத்துக்கு தேவைப்பட்டது


ஸ்க்ரிப்ட்டை படித்தாலே பயங்கரமாக இருந்தது. முதல் பாகத்தில் இருந்த விஷயங்களை இரண்டாம் பாகத்தில் கனெக்ட் செய்திருந்த விதம் ஆச்சர்யமூட்டியது. 


முக்கோண விதி, தொடர்பியல் இவையெல்லாமே தேஜாவு கான்செப்ட் தானே.. இதுக்கு முன்னடி நமக்கு எப்போதோ நடந்த மாதிரி இருக்கேன்னு நினைப்போம் இல்லையா..? ஒரு மறந்துபோன கனவுன்னு சொல்வாங்க இல்லையா.. அது மாதிரிதான் இதுவும்.. அதில் பேண்டசி கலந்து கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் விஜே கோபிநாத்.


ஜீவி எடுக்கும்போது இரண்டாம் பாகம் எடுப்போமா என நினைக்கவே இல்லை.. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு லீட் வைத்துதான் முடித்துள்ளோம்.


முதல் பாகம் பார்க்கும்போதெல்லாம் ஏதோ குறையிற மாதிரி இருக்குதோ, இந்த காட்சியில் இன்னும் கொஞ்சம் அப்படி பண்ணியிருக்கலாமோ அப்படின்னு ஒரு எண்ணம் ஓடிக்கிட்டே இருக்கும். அதை இந்த இரண்டாம் பாகத்தில் ஜஸ்டிபை பண்ணியிருக்கேன். இந்த இடைவெளியில் இரண்டு படங்களில் பணியாற்றி விட்டு வந்த அனுபவமும் இந்த இரண்டாம் பாகத்தில் கைகொடுத்தது.


இயக்குநர் V.J.கோபிநாத் நிறைய தகவல்கள் கொடுத்து உதவினார் என்றால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நாங்கள் கேட்ட அனைத்தையும் வழங்கினார். 


வெற்றியுடன் முதல் பாகத்திலிருந்தே நல்ல பழக்கம். முதல் பாகத்தில் கூட அவருக்கு நிறைய டவுட் இருந்துச்சு.. இப்படி பண்ணலாமா..? இது சரியா வருமான்னு கேட்டுட்டே இருப்பார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு தேர்ந்த நடிகராகவே மாறிவிட்டார். சிகரெட் பிடித்தால் கூட அதன் கண்டினியுட்டியை சரியாக பாலோ பண்ணுவார்.


இந்தப்படம் திரையரங்குகளுக்கு வராமல் ஒடிடியில் வெளியானதில் கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் தொடர்ந்து வரப்போகும் வாரங்களில் ரிலீஸுக்காக பெரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.. இந்த சமயத்தில் நம் படம் தியேட்டர்களில் வெளியாகும்போது அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காமல் போனால், தயாரிப்பாளருக்கும் கஷ்டம்.. மொத்த உழைப்பும் வெளியே தெரியாமலேயே கூட போய்விடும் சாத்தியம் இருந்தது.. அதனால் இந்த சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியிட்டது சரியான ஒன்று தான். ஓடிடி தளத்திலும் ரசிகர்களிடம் இருந்து குறைவில்லாத வரவேற்பு கிடைக்கவே செய்திருக்கிறது. மேலும் படம் துவங்கி ஆறு மாதத்திற்குள் எல்லா வேலைகளும் முடிந்து ரிலீஸும் ஆகிவிட்டதே மிகப்பெரிய சந்தோசம் தான்" என்கிறார் பிரவீண் குமார்..

ஆந்திராவை அதிர வைத்த 'கோப்ரா' படக்குழு*

 *ஆந்திராவை அதிர வைத்த 'கோப்ரா' படக்குழு*


*சீயான் விக்ரமை வரவேற்ற தெலுங்கு ரசிகர்கள்*


*‘எனக்கும், தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது’ - சீயான் விக்ரம் உருக்கமான பேச்சு*



சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.


இந்திய அளவில் ரசிகர்களிடையேயும், பார்வையாளர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் 'கோப்ரா'. கணித புதிர்களை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை புலனாய்வு பாணியில் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் படம் என்பதால், 'கோப்ரா' படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண்பதற்கான ஆர்வம் உண்டாகி இருக்கிறது. இதனை மேலும் தூண்டும் வகையில் சீயான் விக்ரம் தலைமையிலான பட குழுவினர் திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களைச் சந்திப்பதற்காக ஹைதராபாத் வந்தடைந்தனர்.




சீயான் விக்ரம் தலைமையிலான 'கோப்ரா' குழுவினருக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, தயாரிப்பாளர் என்.வி. திருப்பதி பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் என் வி திருப்பதி பிரசாத் பேசுகையில், '' கோப்ரா திரைப்படம் கொரோனா தொற்று காலகட்டத்தில் ரஷ்ய நாட்டில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிரில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகும் முழுமையான பாதுகாப்புடன் ரஷ்யாவில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இது போன்ற கதாபாத்திரங்களில் தென்னிந்தியாவிலேயே விக்ரம் ஒருவரால் தான் ஏற்று நடிக்க இயலும். இந்தியாவிலேயே கமல்ஹாசனுக்கு அடுத்து உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் விக்ரம் தன்னிகரற்றவராக திகழ்கிறார். கோப்ரா திரைப்படம் வித்தியாசமான கதை. திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணியுடன் உருவாகி இருக்கிறது. இந்தியாவின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். புஷ்பா இயக்குநர் சுகுமார் நிகழ்த்திய மாயாஜாலத்தை போல், இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் கோப்ரா படத்தில் மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார். கொல்கத்தா, அலிப்பி, சென்னை, ரஷ்யா என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் கடுமையாக உழைத்து கோப்ரா படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். விக்ரமின் கலை உலக பயணத்தில் இந்த கோப்ரா மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமையும். கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தெலுங்கிலும் வெளியாகிறது. இதற்கு ரசிகர்கள் பேராதரவு அளிக்க வேண்டும்.'' என்றார்.



சீயான் விக்ரம் பேசுகையில், '' கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவால் இங்கு வர இயலவில்லை. படத்தின் இறுதி கட்டப் பணிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டு இருக்கிறார். எனக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்த கதையை விவரிக்கும் போது உடனே நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.


ரஷ்யாவில் நடைபெற்ற படப்பிடிப்பு கொரோனா காலகட்டத்தில் முழுமையான பாதுகாப்புடன் நடைபெற்றாலும், அங்கு ஐந்து வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்க வேண்டியதிருந்தது. அதற்கான ஒப்பனை, குளிர்.. இதனை கடந்து தான் நடித்தேன். எனக்கு இவை அனைத்தும் எளிதாக இருந்தது. ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஒவ்வொரு உடல் மொழி.. அது எனக்கு சவாலானதாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் பணியாற்ற முடிந்தது.


கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லராகவும், எமோஷனல் டிராமாவாகவும், சயின்ஸ் ஃபிக்சனாகவும், ஆக்சன் என்டர்டெய்னராகவும் கலந்து உருவாகி இருக்கிறது.


இந்தப் படத்தில் எனக்கும் நடிகை ஸ்ரீநிதிக்குமிடையே அற்புதமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகள் இருந்தாலும் அவர் அதிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.


மீனாட்சி இந்த படத்தில் ஒரு கல்லூரி பெண்ணாகவும், கணித புதிர்களை விடுவிப்பதில் உதவி செய்பவராகவும் தோன்றுகிறார். அவருடைய கதாபாத்திரமும் மிகவும் சுவாரசியமானது.


மிருணாளினி ரவி என்னை காதலிக்கும் கதாபாத்திரம். உணர்வு பூர்வமான இந்த வேடத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.


இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்களை பார்த்த பிரமிப்பு ஏற்படும். இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. கதை, காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சி, சென்டிமென்ட்... என அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.


மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முதலாக நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் போது உங்களை ஆச்சரியப்பட வைப்பார். இதன் பின்னணியில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பங்களிப்பு அதிகம்.


நாங்கள் எங்களுடைய சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறோம். தெலுங்கு ரசிகர்களுக்கு கோப்ரா படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் என்றைக்கும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். கோப்ரா திரைப்படம் உலக அளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படைப்பாக உருவாகி இருக்கிறது.


நம் தேசத்தில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற தற்போது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான  திரைப்படங்களின் தேவை ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்தும் கோப்ரா படத்திலும் இருக்கிறது.


என் நடிப்பில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகளாகிவிட்டது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் போது நடிகை மியா ஜார்ஜ் சிங்கிளாக இருந்தார். இரண்டாம் கட்ட படபிடிப்பின் போது அவருக்கு திருமணம் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பின் போது அவருக்கு குழந்தை பிறந்தது. தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்விற்காக கொச்சிக்கு சென்ற போது, அவருக்கு ஐந்து மாத குழந்தை இருந்தது. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. கோப்ரா திரைப்படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயமும் உருவானது. ஆனால் திரையில் மியா ஜார்ஜ் தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.


கோப்ரா போன்ற பிரம்மாண்டமான படைப்பை தெலுங்கு ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்றால், அதற்கு திருப்பதி பிரசாத் தான் பொருத்தமானவர் என ஆவரைத் தேர்ந்தெடுத்தோம். அவரும் மனமுவந்து எங்களது வேண்டுகோளை ஏற்று கோப்ரா படத்தை தெலுங்கில் வழங்குகிறார்.'' என்றார்.


ஊடக சந்திப்பில் நடைபெற்ற சுவாரசியமான விசயங்கள்...


• இந்த 'கோப்ரா' திரைப்படத்தில் கணித ஆசிரியர் வேடத்தில் நடித்தாலும், நான் மாணவனாக இருந்தபோது கணித பாடத்தில் பலவீனமான மாணவனாகவே இருந்தேன். ஆசிரியர் பலமுறை தலையில் குட்டி, 'உனக்கு கணக்கு வராதுடா...' என தெரிவித்தார். இந்த படத்தில் நடித்திருக்கும் கணிதாசிரியர் வெட்க சுபாவம் உள்ளவராக இருந்தாலும், அசாத்தியமான திறமைசாலி. இவருக்கு ஹாலுஸிநேஸன் என்ற பாதிப்பும் இருக்கும். இயக்குனர் அஜய் ஞானமுத்து பயங்கர புத்திசாலி. படத்தின் இரண்டாம் பகுதியில் தான் என்னுடைய கதாபாத்திரத்தின் வீரியத்தை ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். உச்சகட்ட கட்சி வரை கதை சுவாரசியமாக பயணிக்கும்.


• கோப்ரா என்றால் எப்போது தாக்கும் என்று தெரியாது. கோப்ரா ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் தோலை உரித்து கொண்டு புது வடிவத்தை பெறும். அதேபோல் இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


• படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கெட்டப்பிற்கு ஏற்ற வகையில் உடல் மொழியையும், பின்னணி பேசும் பாணியையும் மாற்றியிருக்கிறேன். ஆறு குரல்களில் மாற்றி மாற்றி பேசி இருக்கிறேன்.

இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம்

 இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம் 


மனிதவள மேம்பாட்டு அதிகாரியை மணக்கும் இசையமைப்பாளர் சித்து குமார்



‘பேச்சுலர்’ இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம்


தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான சித்து குமார், சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், சித்தார்த் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 


முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த சித்து குமார் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக உருவெடுத்து பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.


மேலும், “அடி போலி...” என்ற தனியிசை வீடியோ பாடலை இசையமைத்து இயக்கிய சித்து குமார் அப்பாடல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்ததோடு, தமிழ் சினிமாவின் பிஸியான இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.


மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ’கண்ணை நம்பாதே’, சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறுகோடி வானவில்’, விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 13,  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் படம், அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கும் படம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் சித்து குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் விரைவில் இடம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி  ராஜி என்பவரை சித்து குமார் மணக்கிறார். ராஜி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் மனிதவளம் மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றுகிறார்.


பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட சித்து குமார்  - ராஜி திருமணம் வரும் செப்டமர் 9 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

All in Pictures T. விஜயராகவேந்திரா வழங்கும்,

 All in Pictures T. விஜயராகவேந்திரா வழங்கும், 

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், 

11:11 Production Dr. பிரபு திலக் வெளியிடும், 

நடிகர் அருண் விஜய் நடிக்கும், 

“பார்டர்” திரைப்படம் உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 வெளியாகிறது !!! 


நடிகர் அருண் விஜய் தொடர்ச்சியாக வெற்றிப்படைப்புகளை தந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான யானை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக, ஓடிடியில் வெளியான தமிழ்ராக்கர்ஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு படைப்புகளும் ரசிகர்களிடத்திலும், விமர்சகர்களிடத்திலும் ஒருங்கே பாராட்டை குவித்துள்ளது.  தொடர் வெற்றிகளால் வர்த்தக வட்டாரங்களிடையே அருண் விஜய் படங்களுக்கு பெரிய மதிப்பு ஏற்பட்டுள்ளது. All in Pictures T. விஜயராகவேந்திரா வழங்கும், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்துள்ள “பார்டர்” படம் அறிவிக்கப்படதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பாக வெளியான இப்படத்தின்  டிரெய்லர் அனைவரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள்  அக்டோபர் 5, 2022 அன்று உலகம் முழுவதும் இப்படம்  திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


இப்படத்தின் அகில இந்திய திரையரங்க உரிமையைப் பெற்றுள்ள 11:11 Production Dr. பிரபு திலக் கூறுகையில்… 

தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படங்களில் ஒன்றான அருண் விஜய் சாரின்” பார்டர்”  படத்தை 11:11 Productions சார்பில் வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  நாங்கள் 11:11 Productions ல் எப்பொழுதும் உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிடவே விரும்புகிறோம், சிறந்த பொழுதுபோக்குடன் பார்வையாளர்களின் இதயம் கவரும் படங்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். சந்தேகத்திற்கு இடமின்றி, பார்டர் படம்  அனைத்து காரணிகளையும் ஒருங்கே  கொண்டுள்ளது . தனித்துவமான திரைக்கதைகள் மூலம் தமிழ் திரையுலகில் மதிப்பு மிக்கவராக போற்றப்படும்  இயக்குநர்  அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்ப  திறமையாளர்களின் அருமையான உழைப்பு,  அருண் விஜய் சாரின் அற்புதமான நடிப்பு படத்தினை மிகச்சிறந்ததாக மாற்றியுள்ளது.  நாங்கள்  இப்படத்தினை மிகப்பெரிய அளவில் வெளியிட  திட்டமிட்டுள்ளோம்.




இயக்குநர் அறிவழகன் எழுதி இயக்கியுள்ள  “பார்டர்” படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது. T.விஜயராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்தை 11:11 Production Dr. பிரபு திலக் வெளியிடுகிறார். மற்றும் தொழில் நுட்ப குழுவில் சாம் CS (இசை), B ராஜசேகர் (ஒளிப்பதிவு), சாபு ஜோசப் (எடிட்டிங்), ஷக்தி வெங்கட்ராஜ் M (கலை இயக்கம்), ஹீரா அறிவழகன் (ஆடை வடிவமைப்பாளர்), விவின் S.R. (நிர்வாகத் தயாரிப்பாளர்), உமேஷ் பிரணவ் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), &  Sync Cinema (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

 


“பார்டர்”  திரைப்படம் உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 வெளியாகிறது

Sunday, 28 August 2022

இன்று 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புதுச்சேரி, நேருவீதி

 இன்று 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பியகத்தில்  தமிழக அரசு  விருதுபெற்ற திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பன் அவர்களின் "தாய்மண்ணின் ஈரம்" (MOISTURE OF MOTHERLAND) என்ற ஆங்கிலக் கவிதை நூல் வெளியிடப்பட்டது. 

தாகூர் கலைக் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் நூலினை வெளியிட புதுச்சேரிக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வீர.பாலகிருஷ்ணன் முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார். 




விழாவின் வரவேற்புரையினை தமிழாசிரியர் சின்ன.சேகரும் நன்றியுரையினை பாவலர் குமாரவேறு அவர்களும் வழங்கினார்கள். பொறிஞர் இரா.தேவதாசு நூல் அறிமுகவுரை ஆற்றினார். பாவலர் தமிழ்நெஞ்சன், பாவலர் சொற்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  நூலாசிரியர் ராசி.அழகப்பன் ஏற்புரை வழங்கினார்.

நூல் வெளியீட்டில்   ஓய்வு பெற்ற தொழிற்சங்க செயலர் புகழேந்தி , கவிஞர் ஞானமோகன் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்

செல்வராகவனுக்கு என் அன்பளிப்பு ‘பகாசூரன்’ : நெகிழும் இயக்குனர்

 செல்வராகவனுக்கு என் அன்பளிப்பு ‘பகாசூரன்’ : நெகிழும் இயக்குனர் மோகன்.ஜி


கட்டைக்கூத்து கலைஞனாக செல்வராகவன் கலக்கும் ‘பகாசூரன்’


டீசர் வெளியான சற்று நேரத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை பற்ற வைத்துள்ளது ‘பகாசூரன்’.

’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’.




இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் சுரேஷ், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.


’பகாசூரன்’ உருவான விதம் பற்றி இயக்குனர் மோகன்.ஜியிடம் கேட்டபோது..

 “வடமாவட்ட வாழ்வியலை மையமாக கொண்ட கதைகளைதான்  இதுவரை நான் இயக்கி வந்துள்ளேன். இந்தப்படத்தின் கதை களமும் அப்படிதான் அமைந்துள்ளது.  கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களிலேயே ‘பகாசுரன்’ கதை நகர்கிறது.  படத்தில் வரும் கதாபாத்திரங்கள்  மகாபாரத கதாபாத்திரங்களுடன்  தொடர்புள்ளதாக  இருக்கும். 


படத்திற்கு   ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் என்னுடன் கைக்கோர்க்கும் மூன்றாவது படம் இது. ‘விக்ரம் வேதா’, ‘கைதி’ படங்களுக்கு இசையமைத்த சாம் சி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாபநாசம் சிவனின் ஒரு பாடல், படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய,  கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.”


இயக்குனரான செல்வராகவனை பற்றி ...

 

“செல்வராகவன் சார் இயக்கிய ’காதல் கொண்டேன்’ படம் பார்த்த பின்தான் சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட்டது.. யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன்.. என் முதல் படமான  ‘பழைய வண்ணாரப்பேட்டை’ பட டைட்டிலும் அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான பட்டறை குமாரும் இவருடைய தாக்கம்தான். பின் ’திரெளபதி’ படத்திலிருந்து எனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டேன்.. குருவாக ஏற்றுக் கொண்டவரையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. 

அவருடன்  ‘பகாசூரன்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். அவரை ரசித்து ரசித்து இயக்கி உள்ளேன். அவரும் நடிகராக மட்டும் இருந்தாரே தவிர ஒரு நொடிகூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை.. சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என நடிகராக மட்டுமே இருந்து படத்தை வேகமாக முடித்து தந்தார்.

பீஸ்ட்’,  ‘சாணிக்காகிதம்’ படங்களில் கவனம் ஈர்த்த செல்வராகவன் சார் இதில் கட்டைக்கூத்து கலைஞனாக வகிறார்.

அவர் நடிப்பை பற்றி நான் சொல்வதை விட டீசர் பார்த்து நீங்களே  தெரிந்து கொள்வீர்கள். குருவாக, அண்ணனாக என் மீது உள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு  ‘பகாசூரன்’  கதைக்காக இதில் நடித்த செல்வராகவன் சாருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். செல்வராகவன் சாருக்கு இருக்கும் கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய அன்பளிப்பு இந்த ’பகாசூரன்’ திரைப்படம்.”என நெகிழ்கிறார் மோகன்.ஜி.

'கோப்ரா' குழுவினரை கோலாகலமாக வரவேற்ற பெங்களூரூ ரசிகர்கள்.*

 *'கோப்ரா' குழுவினரை கோலாகலமாக வரவேற்ற பெங்களூரூ ரசிகர்கள்.*


*பெங்களூரூவிலும் அசத்திய 'கோப்ரா' படக்குழு*


சீயான் விக்ரம் நடிப்பில் தயாரான 'கோப்ரா' படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையிலான குழுவினர், பெங்களூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.


தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் வெளியீட்டிற்கு முன்னர் அப்படக் குழுவினர், ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்வதுடன், படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிவித்து, படத்தை திரையரங்குகளில் வருகை தந்து காண செய்வதற்கான ' முதல் நாள் முதல் காட்சி உத்தி'யை மேற்கொண்டு வருகிறார்கள். திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி ஆகிய இடங்களுக்கு பயணித்த 'கோப்ரா' பட குழுவினர், இதன் தொடர்ச்சியாக பெங்களூரூக்கும் சென்றனர்.





பெங்களூரூவிலுள்ள நெக்ஸஸ் மால் எனும் வணிக வளாகத்தில் நடைபெற்ற  ரசிகர்களுடனான விழாவில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். கட்டுக்கடங்காத அளவிற்கு திரண்ட ரசிகர்களிடம் சீயான் விக்ரம், 'கோப்ரா' படத்தை பற்றி விவரித்து பேசினார். அதன் பிறகு அவர்கள் எழுப்பிய வினாவிற்கும் பதிலளித்தார். அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.


திட்டமிட்டபடி பெங்களூரூவில் ரசிகர்களை சந்தித்த 'கோப்ரா' பட குழுவினர், அடுத்த கட்டமாக ஹைதராபாத்திற்கு பயணத்திருக்கிறார்கள்.


இதனிடையே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட பல  மொழிகளில் வெளியாகவிருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The moment I realized & experienced Karma” – Jiivi-2 filmmaker

 *“The moment I realized & experienced Karma” – Jiivi-2 filmmaker VJ Gopinath’s astonishment* 


*“Jiivi-3 will happen”- Jiivi-2 filmmaker VJ Gopinath’s confirmation* 


*Next film with actor Vishnu Vishal..? Filmmaker VJ Gopinath’s clarification* 


*What could be the reaction of the actor’s father?; When Jiivi-2 director VJ Gopinath was literally scared.* 

 




The movie ‘Jiivi’ released in the year 2019 not alone won the hearts of audiences but fetched incredible reviews from film critics as well.  What illuminates as a spotlight among all the salient features of this movie is director VJ Gopinath, who embarked on his directorial venture without working as an assistant director. His directorial proficiency was so amazing that many were awe-stricken about his fantabulous caliber as a filmmaker. 

 

Significantly, the film’s sequel ‘Jiivi 2’ premiered on Aha Tamil OTT App on August 19 has yet again garnered colossal reception among the fans and lovers of the Jiivi franchise. The film’s star cast comprises the same actors from the first part includes Vetri, actress Aswini Chandrashekar as the lead characters, and prominent roles performed by Rohini, Mime Gopi, Karunakaran, Ram, and a few others. Besides, the important role played by Y.Gee. Mahendran embellished the premise of this story with more intensity. 


With the second part gaining good reception just as its prequel, director VJ Gopinath shares interesting facts about the making process of Jiivi-2. 


“The next day after the release of Jiivi, I signed a new project to direct Vishnu Vishal. Unfortunately, the COVID-19 issues created havoc upon the industry, and Vishnu Vishal had a backlog of other projects, which he had to complete. Hence, he requested me to work on another project during this interim, and then start our project. It was during this juncture, that Big Print Pictures IB Karthikeyan instilled in me the idea of making ‘Jiivi-2’. 


 With Jiivi-2 released, many have been asking me if I would direct Vishnu Vishal in my next movie. Both of us are in constant touch. 


At the same time, he has already lined up the projects that were supposed to get completed for a long time. Since he is occupied with those projects; I have not decided anything about my next movie. 


Significantly, the script works for other movies are happening in full swing. Once, they find the appropriate actors and producers, I will immediately start working on new projects…  To be honest, I never had a pinch of prediction that Jiivi-2 will get materialized during the release of Jiivi in 2019. 

 

However, while penning the script for Jiivi-2, I created some leads for the third part as well. However, time and situation would alone confirm if there are probabilities for Jiivi-3 to get materialized. 


 When actor Vetri was approached to play the lead role in Jiivi, he had just witnessed good success with his debut movie ‘8 Thottakkal’.  He was so careful in choosing unique content for his next projects. When he listened to the script of Jiivi, he was convinced and decided to play the lead, apart from producing it. 


Nonetheless, what surprised me was his gesture. In spite of delivering a decent hit, he came forward and requested me to select him after proper auditions, and started preparing for the role. 


He had already gained proper training in acting from the school of Mime Gopi, he took part vividly in the rehearsal for each scene to give the best output as an actor. 


However, it was not needed for the second part, for he had already completed working on several projects in the past couple of years, and had become busy committed to many movies. 


In fact, he had completed a project just two days prior to the commencement of the Jiivi-2 shooting. Soon after the completion of this movie, he instantly hopped onto another project without any break. 


 Gaining so much experience, actor Vetri was able to complete each shot in a single take. If by chance, there were any shots getting done with 2-3 takes, it was mainly because of his request as he wanted to deliver performance with more finesse.


It was his amazing performance and contribution that made us complete the entire shoot in a span of just 22 days.  Specifically, the way, he was focused on the continuity elements from one shot to the other was so amazing. 


 Actor Vetri was the producer to pay me an advance amount while getting me signed for the movie ‘Jiivi’. Although Suresh Kamatchi sir was the producer of Jiivi-2, there was a situation, where I had to pass on the advance amount to Vetri from the producer. 


Hence, I could personally experience the concept of the Jiivi franchise that says, ‘If you sow good things, you will reap the same in reality.  

 


Actress Ashwini’s role was limited to minimal prominence in the first part. To be precise, there was a sort of disappointment that she didn’t have a single song sequence as well. However, the story of Jiivi-2 opens with her appearance. She has improved a lot in her performance as a visually impaired character. In fact, she delivered an impeccable performance without any hesitation for the intimate scenes with Vetri, which showcases her proficiency as the finest performer. 


When I narrated the script of Jiivi-2 to Ashwini, I was clear about her character that although she is a visually impaired person, even she has emotions and a desire to communicate and express herself. She inherited those qualities of the respective character and delivered a flawless performance. 

 

On the other hand, I was a little anxious to know about the feedback of actor Vetri’s father-producer Vellaippandi sir for this song. To my surprise, he was very happy with the way, it was filmed and appreciated me for depicting the emotions in a poetic way, which made me feel relaxed. 

 

Working with eminent actors like Mime Gopi, Rohini, and other well-experienced actors made my job easy. In particular, Rohini madam, who becomes a voracious reader between the shot breaks, would instantly shift into the shoes of the respective camera, the minute, she appears before the camera. I would label this as priceless magic. 


 

As soon as Suresh Kamatchi sir decided to produce this movie, he insisted I not be bothered about the budget and compromise with the creative process. It was him, who suggested I rope in some of the top league technicians. When I told him that I will have the same technicians from the first part, he gradually accepted my request. 


Soon after the completion of the final output, Suresh Kamatchi sir screened the movie for his close friends and a few film critics. Usually, during such occasions, we would come across feedback like it would have been better if that particular scene was modified or certain scenes could have been reworked. However, to my surprise, everyone appreciated the movie without making any such suggestions 


Initially, when I was informed by the production house that Jiivi-2 will have an OTT premiere instead of a theatrical release, I was slightly disappointed, which made me relentlessly question producer Suresh Kamatchi sir. However, he was so patient in answering all of them and clearing my doubts about why the theatrical release wasn’t possible. If the movie had a theatrical release, I would succeed as a filmmaker, but at the same time, I had to consider the fact that a bunch of big-budgeted movies constantly releasing could have an adverse impact on producer Suresh Kamatchi sir. Henceforth, I convinced myself on this issue with complete satisfaction. I am elated that Jiivi 2 has won the appreciation of audiences from all walks of life with its OTT release. 


I am glad that the second part has satisfied and impressed both the fans and producer,” says Director VJ Gopinath.