Featured post

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும்

 கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம...

Monday, 28 April 2025

வேம்பு’ திரைப்படம் அகமதாபாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு

 *‘வேம்பு’ திரைப்படம் அகமதாபாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றது* 



மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. 


அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி  படங்களில் நடித்த  ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்க, டூலெட், மண்டேலா படங்களில் நடித்த ஷீலா  கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  


மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


தனுஷ் நடித்த தங்கமகன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த A. குமரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், அதோ முகம், GV.பிரகாஷ் நடித்த ரபேல் படத்திற்கு  இசை அமைத்த  மணிகண்டன் முரளி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார், மிருதன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த KJ . வெங்கட்ரமணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார், துணிவு, வலிமை போன்ற முன்னணி படங்களில் பணிபுரிந்த ராம்ஜி சோமா இப்படத்திற்கு  ஒலிக்கலவை செய்துள்ளார் .


பெண்  தன்னையே பாதுகாத்துக் கொள்தல், கூடவே அரணாக நிற்கும் சரியான ஆண்துணை பற்றிய நிகழ்வுகளுடன் இப்படம் நகரும். 


 சமூகத்தில்  நிகழும் குற்றங்களில் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளாதவர்கள் வன்முறைக்கு இரையாகிறார்கள். வல்லூறுகளுக்கு மத்தியில் வாழ்தல்  சாதாரண காரியமல்ல. அதையும் தாண்டி வாழும் பலம் முக்கிய தேவை. இதை வேறுகோணத்தில் பார்க்கும், பேசும் படமாக உருவாகியுள்ளது 'வேம்பு'.

 

சமூகம் சார்ந்த பலமான கருத்தை முன்வைத்த இப்படம், தற்போது அகமதாபாத்  சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு விருதுக்கான பிரிவில் போட்டியிட்டது. 


அதில்  சிறந்த நடிகைக்கான விருது ஷீலாவுக்கும், சிறந்த நடிகருக்கான விருது ஹரிகிருஷ்ணன்-க்கும் வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.


இச்  செய்தியைப் பகிர்ந்துகொண்ட இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு கூறும்போது,

 

 "சிறந்த கதை அம்சம்கொண்ட யதார்த்தமான திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி விருதுகளை அள்ளுவதுடன், திரையரங்குகளிலும் பெருவாரியான வெற்றியைப் பெற்று வருகின்றன.  


 அதன்படி, அகமதாபாத்தில் திரையிடப்பட்ட வேம்பு எங்களுக்கு இரு இனிப்பு விருதுகளைத் தந்துள்ளது. 


நாயகன் ஹரிக்கும், நாயகி ஷீலாவுக்கும் விருதுகள் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. 


இந்த விருதுகள் எங்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. மக்களும் திரையரங்கில் வேம்பு படத்தைப் பார்த்து வெற்றியாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் மே மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். 


அதற்கு முன்னதாக இந்த படத்தின் முன்னோட்டம்  அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.  அது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறினார்..


*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*


தயாரிப்பு ; கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி


டைரக்சன் ; V.ஜஸ்டின் பிரபு


ஒளிப்பதிவு ; A.குமரன்


படத்தொகுப்பு ; K.J வெங்கட்ரமணன்


இசை ; மணிகண்டன் முரளி


ஒலிக்கலவை: ராம்ஜி சோமா


பாடகர்கள் ; அந்தோணி தாசன், மீனாட்சி இளையராஜா,

சின்னபொண்ணு, சுந்தரய்யர் மற்றும் கபில் கபிலன்.


மக்கள் தொடர்பு ; A.ஜான்

Sunday, 27 April 2025

அகமொழி விழிகள்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா

 “அகமொழி விழிகள்”  திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா  !!  


தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை- அகமொழி விழிகள் பட விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் !! 


கதையை நம்பி படமெடுங்கள். என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - அகமொழி விழிகள் பட விழாவில் இயக்குநர் பேரரசு !! 























எம் ஜி ஆர், ரஜினி, கமல் என அத்தனை பேரை உருவாக்கியது தமிழ் சினிமா தான். தமிழ் சினிமாவை குறை சொல்லாதீர்கள்- அகமொழி விழிகள் பட விழாவில் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் !! 




சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடை பெற்றது. 




இந்நிகழ்வினில் 


தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் பேசியதாவது… 


சச்சு கிரியேஷன்ஸ் சார்பில் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த திரைப்படம் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும், இப்படத்தைத் திரையரங்குகளில் வந்து பாருங்கள், அனைவருக்கும் நன்றி. 


சிறு முதலீட்டு தயாரிப்பாளர் ஆர் கே அன்பழகன் பேசியதாவது… 


உண்மையில் அழகாகத் தெளிவான தமிழில், ஒரு டைட்டில் வைத்ததற்கே இந்த குழுவினரை பாராட்ட வேண்டும். தமிழே தெரியாமல் எழுதி வைத்துப் படிக்கிறார் தயாரிப்பாளர். தமிழை நம்பி வந்த  இந்த தயாரிப்பாளரை நாம் தான் வளர்த்து விட வேண்டும். நம் சூப்பர்ஸ்டார் கூட தமிழ் தெரியாமல் வந்தவர் தான். யாராக இருந்தாலும் நாம் ஆதரிக்க வேண்டும், இந்த படத்திற்குப் பெரிய வெற்றியைத் தர வேண்டும். சில நாட்கள் முன் தேவயானி மேடம் ஒரு விழாவில் சின்ன படங்களுக்கு 4 நாட்களாவது திரையரங்குகள் தர வேண்டும் எனப் பேசினார். இதை அனைத்து சங்கங்களும் ஆதரிக்க வேண்டும். அஜித் படம் ஓடி முடிந்து விட்டது, இனி அவர் எப்போது கால்ஷீட் தருவார் எனத் தெரியவில்லை. வருடத்தில்  நான்கைந்து பெரிய படங்கள் தான் ஓடுகிறது, இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் சின்ன படங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.  நாம் ஒழுங்காகப் படமெடுப்பதில்லை, நல்ல படம் எடுத்தால் ஓடும். இந்தப்படம் ஓட வாழ்த்துக்கள் நன்றி. 


தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்  மங்கை ராஜன் பேசியதாவது.. 


அகமொழி விழிகள் விஷுவல்ஸ் பார்க்க அழகாக உள்ளது. தயாரிப்பாளர் வேறு மொழியிலிருந்து வந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். இங்கு தமிழில் பேச நினைத்த அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள். நாயகன் நாயகி இருவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். இப்போதெல்லாம் படமெடுத்தால் வட இந்தியா ரைட்ஸ் வாங்குபவர்கள் இங்கிலீஷ் டைட்டில் வைக்கக் கோருகிறார்கள். ஆனால் இந்த தயாரிப்பாளர் வேறு மொழியிலிருந்து வந்தாலும் தமிழில் மிக அழகாக அகமொழி விழிகள் என வைத்துள்ளார். அதற்காகவே இப்படத்தை ஆதரிக்க வேண்டும். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 




தமிழ் நாடு திரையரங்கு சங்க செயலாளர் திருச்சி ஶ்ரீதர் பேசியதாவது.. 


அகமொழி விழிகள் படம்,  பாட்டு விஷுவல்ஸ் மிக நன்றாக உள்ளது. படம் மிக நன்றாக வந்துள்ளது.  திரையரங்குகளில் கூட்டம் மிகக் குறைவாக உள்ளது, 84 படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது ஆனால் 4 படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளது, இந்த நிலை நீடித்தால் திரையரங்குகள் அழியும், எல்லோரும் திரையரங்கில் வந்து படம் பாருங்கள். ஓடிடியிலும் யாரும் படம் வாங்குவது இல்லை, பெரிய படங்கள் மட்டுமே வாங்குகிறார்கள். இந்த நிலை மாற சின்னப்படங்கள் ஓட வேண்டும். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 


நாயகி நேஹா ரத்னாகரன் பேசியதாவது…


மிக மகிழ்ச்சியாக உள்ளது. பவுலோஸ் சாருக்கு தான் முதல் நன்றி. இந்த மேடை வரை இந்தப்படம் வர அவர் தான் காரணம். அவருக்கு நன்றி. இயக்குநர் சசீந்திரா சார் ஒவ்வொரு சீனும் எனக்குச் சொல்லித் தந்து, என்னை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார். என் கோ ஸ்டார் ஆடம் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



நாயகன் ஆதம் ஹசன் பேசியதாவது… 


இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள திரை பிரபலங்களுக்கு நன்றி. இந்த படம் 2,3 ஆண்டுகளாக எடுத்தோம். நான் கத்தாரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன், இங்கு வந்து போகும் இடைவேளையில் தான் இந்தப்படம் எடுத்தார் இயக்குநர். இயக்குநர் மிக கண்டிப்பாக இருப்பார், ஒவ்வொரு டயலாக்கும் சரியாக வரும் வரை விட மாட்டார். ஒரு லாங் டயலாக் ஷாட் எடுக்கும் போது பல டேக் போனது, எனக்கே நம்பிக்கை போய்விட்டது. என்னை மாற்றிவிடுவார் என நினைத்தேன் ஆனால் மறுநாள் முதல் ஷாட்டில் ஓகே ஆனது அப்போது தான் நம்பிக்கை வந்தது. படம் நன்றாக வந்துள்ளது.  இந்தப்படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவையும் தாருங்கள் நன்றி. 



தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…


மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. கேரளா நண்பர்கள்  இந்தப்பட விழாவிற்கு அழைத்தார்கள். மலையாள பட டப்பிங் என நினைத்துத் தான் வந்தேன். ஆனால் மிக அழகான தமிழ்ப் படமாகச் செய்துள்ளார்கள். அவ்வளவு அழகாக எடுத்துள்ளார்கள். டிரெய்லர்,  மூணு பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இந்த வருடம் வெறும் 4 படம் வெற்றி. போன வருடம் 220 படங்களில் 8 படம் தான் வெற்றி. சின்ன படங்களில் 15 படம் வெற்றி. பெரிய ஹீரோ பின்னால் போனால் படம் ஓடாது. கதை நன்றாக இருந்தால் மட்டும் தான் ஓடும். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி புது நாயகன் நாயகியைப் போட்டுப் படமெடுத்தால் படம் ஓடும். அகமொழி விழிகள் என்ன அழகான டைட்டில்.  அஜித் எப்போதும் தமிழ் டைட்டில் வைப்பார் ஆனால் இயக்குநர் எவனோ குட் பேட் அக்லி என டைட்டில் வைத்து விட்டான். இப்போது சிவக்குமார் மகன் சூர்யா ரெட்ரோ என டைட்டில் வைத்துள்ளார். தமிழ் தலைப்பில் படம் வருவது குறைந்து விட்டது. கேரள சகோதரர் தமிழில் டைட்டில் வைக்கிறார் தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை. நல்ல மனம் குளிர்ந்து மகிழ்ந்து அகமொழி விழிகள் ஜெயிக்க வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி.  


ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…. 


அகமொழி விழிகள் கண் தெரியாத இருவரைப் பற்றிய படம்.  இப்படி ஒரு படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். நாயகன் நாயகி இருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். பாடல் எல்லாம் மிக அழகாக உள்ளது. நம் தமிழ் சினிமா வந்தாரை வாழ வைக்கும். எந்த மொழியும் அதைச் செய்வதில்லை. இங்கு தமிழில் ஒழுங்காகப் படமெடுப்பதில்லை எனக் குறை சொன்னார்கள். ஆனால் எம் ஜி ஆர், ரஜினி, கமல் என அத்தனை பேரை உருவாக்கியது தமிழ் சினிமா தான். தமிழ் சினிமாவை குறை சொல்லாதீர்கள். தமிழில் தலைப்பு வைத்த இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 


இயக்குநர் பேரரசு பேசியதாவது…,


அகமொழி விழிகள் பெயரே மிக அழகாக உள்ளது. தமிழ்த் தெரியாத தயாரிப்பாளர் தனது மொழியில் தமிழை எழுதி வைத்துப் படிக்கிறார். தமிழ் மீதான அவரது மரியாதை வியக்க வைக்கிறது. நான் சிவகாசி படமெடுத்த போது அப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது அப்போது தெலுங்கில் நடந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேச கஷ்டப்பட்டேன், இப்போது தான்  புரிகிறது, நான் தமிழில் எழுதி வைத்துப் படித்திருக்கலாம். இப்படம் பாடல் விஷுவல்ஸ் எல்லாமே நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமா அழிந்து வருவதாகச் சொல்கிறார்கள். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தியேட்டரில் டிக்கெட் எவ்வளவு விற்க வேண்டும் என  நிர்ணயிக்கும் போது, பாப்கார்னும் இந்த விலைக்குத் தான் விற்க வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். ஏன் இதை அரசாங்கம் செய்யக் கூடாது. மக்களுக்காகத் தானே அரசாங்கம். எப்போதும் கதையை நம்பி படமெடுங்கள். என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள், அப்படிப் படமெடுத்தால் ஓடாது. இந்தப்படம் சின்ன பட்ஜெட்டில் அசத்தியுள்ளார்கள். விஷுவல் பார்க்க பெயிண்டிங் மாதிரி உள்ளது. அத்தனை உழைத்துள்ளார்கள்.  இது மாதிரி படம் வெற்றி பெற வேண்டும் இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி. 



இயக்குநர் சசீந்திரா கே. சங்கர் பேசியதாவது … 


இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. திரைப்படத்தை, மனிதனை அரசியலை தூக்கிப் பிடிக்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. என் தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. என் கனவை புரிந்து நான் சொன்ன கதையை நம்பி இந்தப்படத்தை எடுக்க ஒரு தயாரிப்பாளர் முதலீடு செய்ய வேண்டுமெல்லவா, அது முக்கியம். ஒரு தயாரிப்பாளர் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. சினிமா தான் நம் இணைப்புக்கு ஊண்டுகோலாக இருக்கிறது. நான் மலையாளி ஆனால் என் பாட்டி தமிழ் தான். என் வேர் தமிழ் தான். மலையாளம் கன்னடம் தெலுங்கு எல்லாம் தமிழில் இருந்து வந்த மொழிகள் தான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மொழி. இந்த படத்தை உங்கள் கையில் கொடுத்து விட்டோம் வாழ வையுங்கள். என்னை இயக்குநராக்கியது தமிழ் தான். நான் இங்கு தான் பல ஆண்டுகளாக வேலை பார்த்தேன். இந்த மொழி வாழ வைக்கும் என நம்பிக்கையில் தான் இருக்கிறேன். அகமொழி விழிகள் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.


இசை கச்சேரிகளில் பாடல் பாடும் ஒரு இளைஞன், தன் காதலிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட, அதற்கெதிராக களமிறங்குகிறான். பார்வையில்லாத அவன் எதிரிகளை எப்படி பழி தீர்க்கிறான் என்பதை,   முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், பரபர திருப்பங்களுடன் சொல்லி, ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் அட்டகாசமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. 


இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


சச்சு கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிக்கும் “அகமொழி விழிகள்” படத்தினை சசீந்திரா கே. சங்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் பின்னணி இசையைக் கையாண்டுள்ளார்.


மே மாதம் 9ஆம் தேதி   தமிழகமெங்கும் இப்படத்தினை திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.  


இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


சச்சு கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிக்கும் “அகமொழி விழிகள்” படத்தினை சசீந்திரா கே. சங்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் பின்னணி இசையைக் கையாண்டுள்ளார்.


மே மாதம் 9ஆம் தேதி   தமிழகமெங்கும் இப்படத்தினை திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.  


தொழில்நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு நிறுவனம் - சச்சுஸ் கிரியேஷன்ஸ்


தயாரிப்பு - பவுலோஸ் ஜார்ஜ்


எழுத்து இயக்கம் - சசீந்திரா கே. சங்கர்


இசை - எஸ்பி வெங்கடேஷ்,  ஜுபைர் முஹம்மது


ஒளிப்பதிவு - ஜஸ்பால் சண்முகம், ராஜேஷ், செல்வகுமார்


எடிட்டிங்  - சரவணன் 


ஆடியோகிராபி - ஆர் கிருஷ்ணமூர்த்தி


ஸ்டண்ட் - கிக்காஸ் காளி, புரூஸ் லீ ராஜேஷ் 


கலை இயக்கம் - ருத்ரா திலீப், எம்.பாவா


நடனம் - தம்பி சிவா

புரொடக்ஷன் டிசைனர் 

அலெக்ஸ் மேத்யூ


மக்கள் தொடர்பு - சரண்

கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்

 *கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்!*



சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக சங்க செயலாளர் கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் மறைவை முன்னிட்டு நினைவு அஞ்சலி கூட்டம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் கே. ராஜன், பி. அந்தோணி தாஸ், எஸ். நந்தகோபால், யு. தருண்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் & சங்க உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினர். 


கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது, ”என் உடன் பிறவா சகோதரர் கலைப்புலி ஜி. சேகரன். 1973 காலக்கட்டத்தில் இருந்தே கலைப்புலி சேகரன் எனக்கு பழக்கம். அவருடன் பல நல்ல நினைவுகள் சம்பவங்கள் இருக்கிறது. பல நேரங்களில் என் அலுவலகத்தில் மதிய உணவு சேர்ந்து சாப்பிடுவோம். அவரது கதைகளை கேட்டு மெய்சிலிர்த்து இருக்கிறோம். கலைப்புலி சேகரன் கதை சொன்னால் யாரும் மறுக்க முடியாது. அந்த அளவுக்குத் திறமையானவர். ரஜினி, கமல், பிரபுதேவா, கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு கதை சொல்லி இருக்கிறார். அவர் மருத்துவமனையில் இருக்கும் செய்தி அறிந்து நேரில் சென்று பார்த்தேன். சில கோரிக்கைகள் வைத்தார். அதையும் நிறைவேற்றிக் கொடுத்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாதது” என்றார்.


கேயார் KR, “நமக்கு பலரிடம் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், சேகர் ஒருவரின் நினைவஞ்சலிக்கு இத்தனை பேர் ஒன்று சேர்ந்திருப்பதே அவர் எந்தளவுக்கு நல்லவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர் சம்பாதித்து வைத்த சொத்தே இத்தனை நல்ல உள்ளங்கள்தான். அதுதான் அவரது சாதனை. சினிமா தவிர வேறு எதையும் பேச மாட்டார். அவரது கஷ்டங்களை பெரிதாக யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டார். எல்லோரிடமும் நட்பு பாராட்டுவார். சிரித்த முகத்துடனேயே இருப்பார். இதெல்லாம் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்றார். 


இயக்குநர் வி. சேகர், “யாரிடமும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்த நபர் கலைப்புலி சேகரன். இவரும் கலைப்புலி தாணு அவர்களும் நல்ல நண்பர்கள். சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் தங்கள் உடலை கவனித்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். வெற்றி, தோல்விகள் எல்லாருக்கும் சகஜம்தான். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்றார். 


ஜெய்குமார் மெட்ரோ, “கலைப்புலி ஜி. சேகரன் எங்கள் அனைவருக்கும் நல்ல நண்பர். தீர்க்கமான கொள்கை உடையவர். எப்போதும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு அவர் நல்ல உதாரணம். தனது கருத்தை ஊர்ஜிதமாக தைரியமாக முன்னெடுத்து வைக்கக் கூடியவர். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.


கே. ராஜன், “கலைப்புலி சேகரன் எங்களை விட்டு பிரிந்ததை இன்னும் ஏற்க முடியவில்லை. சினிமாவைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிப்பார். எல்லோருடனும் நட்பு பாராட்டும் நல்ல மனம் கொண்டவர். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகள் எப்போதும் எங்களை விட்டு நீங்காது” என்றார். 


சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தகர்கள் அசோசியேஷன் செக்ரட்ரி. தயாரிப்பாளர் நந்தகோபால், “எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார் கலைப்புலி சேகரன். எங்கள் எல்லோருக்கும் நல்ல நண்பர். கடந்த விநியோகஸ்தர்கள் அசோசியேஷன் தேர்தலில் செக்ரட்ரி பதவிக்கு என்னை போட்டியிட வைத்ததே அவர்தான். அவர் பிரிவு எதிர்பாராதது. நிச்சயம் அவரது ஆசி எங்களை வழிநடத்தும்” என்றார்.

“கன்னி” குறும்பட அறிமுக விழா !!

 “கன்னி”  குறும்பட அறிமுக விழா !! 



















Red Bird Production சார்பில் அனன்யா அம்சவர்தன் தயாரிப்பில், கரீஷ்மா இயக்கத்தில் ராம் நிஷாந்த், மிருதுளா  நடிப்பில், 90 களின் பின்னணியில் ஒரு பெண்ணின் கதையைச் சொல்லும் அழகான படைப்பாக உருவாகியுள்ள குறும்படம் “கன்னி”. 


இக்குறும்படத்தின் அறிமுக விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


தயாரிப்பாளர் அனன்யா அம்சவர்தன் பேசியதாவது… 

எங்கள் கன்னி குறும்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, பெரும் மகிழ்ச்சி. உங்களது பாராட்டுக்கள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். கன்னி குறும்படம், கல்லூரியில் வெகு சாதாரணமாகப் பேச ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக ஆனது. இந்த குறும்படத்திற்காக ராம் நிஷாந்த், மிருதுளா இருவரையும் நடிக்க அழைத்தோம். அவர்களது பங்களிப்புக்கு நன்றி. எடிட்டர் அருண், இசை தேஜஷ், ஒளிப்பதிவாளர் கிச்சா ஆகியோருக்கு நன்றி. அனைவரது உழைப்பினால் தான் இந்த கனவு நிஜமானது. எல்லோருக்கும் நன்றி. இப்படைப்புக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. 


எடிட்டர் அருண் குமார் பேசியதாவது..,

இந்த விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. இது எனக்கு மிகவும் பர்ஸனல் புராஜக்ட். இது ஒன்லைனாக இருந்த போதிலிருந்தே தெரியும். 1995 பீரியடை எப்படி பண்ணப் போகிறோம் எனத் தயக்கமிருந்தது. கரீஷ்மா அதைச் சாதித்துவிட்டார். மிக அட்டகாசமாக இயக்கியுள்ளார். தேஜஷ் நல்ல இசையைத் தந்துள்ளார். ஒளிப்பதிவு மிக அருமையாக இருந்தது. நடிகர்கள் அனைவரும் நல்ல நடிப்பைத் தந்துள்ளனர். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. 


இசையமைப்பாளர் தேஜஷ் கிருஷ்ணா பேசியதாவது… 

அனன்யா அம்சவர்தன் மற்றும் கரீஷ்மாவுக்கு என் முதல் நன்றி. இந்த குறும்படத்தின் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ராம் மிக அட்டகாசமாக நடித்துள்ளார். அருண் மிகச்சிறப்பாக எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டூட்ண்ட்ஸை சப்போர்ட் செய்யும் அனன்யாவுக்கு நன்றி. இன்னும் அவர் ஆதரவில் நிறைய இயக்குநர்கள் வருவார்கள் என நம்புகிறேன் நன்றி. 


நடிகை மிருதுளா பேசியதாவது… 

கன்னி சின்ன படமாகத் தான் ஆரம்பித்தது. காலேஜ் புராஜக்ட்டாக தான் செய்வதாக அனன்யா சொன்னார். ஆனால் எல்லோருடைய உழைப்பில், மிக அட்டகாசமாக வந்துள்ளது. என்னுடைய காலேஜ் நாட்களில் இப்படியெல்லாம் யாரையும் பார்க்கவில்லை. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. 


நடிகர் ராம் நிஷாந்த் பேசியதாவது.., 

இந்தப்படம் ஒரு காலேஜ் பொண்ணு எடுத்தது என யாராலும் நம்ப முடியாது. காலேஜ் படிக்கும் போது , இப்படியெல்லாம் யோசிக்க முடியாது. கரீஷ்மாவிற்கு வாழ்த்துக்கள். அனன்யா நல்ல படம் தயாரித்துள்ளார், நன்றி. கரீஷ்மா எடுக்கும் முதல் படத்தில் நான் நடிப்பேன் என நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. 


நடிகை ரியா பேசியதாவது…

சின்ன வயது கன்னி ரோல் செய்ய வேண்டுமென கரீஷ்மா சொன்ன போது பெரிய தயக்கம் இருந்தது. இந்தளவு மிகப்பெரிதாக வரும் என நான் நினைக்கவில்லை. வாய்ப்பு தந்த அனன்யா அம்சவர்தன் மற்றும் கரீஷ்மாவுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 


ஶ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன்  பேசியதாவது…. 

பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. கரீஷ்மாவின் அப்பா சரவணன் எனது நெருங்கிய நண்பர். கரீஷ்மாவை சின்ன பெண்ணாக இருந்து தெரியும். அவர் இப்படி ஒரு படத்தை இயக்கியிருப்பது பெருமையாக இருக்கிறது. பாலச்சந்தர் படம் மாதிரி இருந்தது. மேக்கிங் மிக அற்புதமாக இருந்தது. இந்த டீமே அற்புதமான டீமாக உள்ளது. இசையமைப்பாளர், எடிட்டர் எல்லோரும் அருமையாகச் செய்துள்ளனர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். கரீஷ்மாவுக்கு வாழ்த்துக்கள். நன்றி. 


விநியோகஸ்தர் கோகுல் பேசியதாவது….  

என்னை அழைத்த சரவணன் சாருக்கு நன்றி. கரீஷ்மாவிற்கு அவர் அப்பா மிகப்பெரிய ஆதரவாக உள்ளார். கரீஷ்மா பெருமை மிகு படைப்பாளியாக உருவாகியுள்ளார். காலேஜ் முடியுமுன்னரே கண்டிப்பாக அவர் திரைப்படம் இயக்குவார் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


நடிகர் கயல் சந்திரன் பேசியதாவது…

சரவணன் அன்ணா என் மகள் படம் இயக்கியுள்ளார் என சொல்லி கன்னி படம் காட்டினார். அத்தனை அற்புதமாக இருந்தது. ஒரு கல்லூரி படிக்கும் பெண் இப்படி மெச்சூர்டான படம் செய்ய முடியுமென கரீஷ்மா நிரூபித்துள்ளார். சரவணன் அண்ணாவுக்கு மிகப்பெரிய பெருமை. தயாரிப்பாளர், எடிட்டர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லோரும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எல்லோரும்  திரையுலகில் வளர வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் வாழ்த்துக்கள்


இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது… 

ஒரு குறும்படம் என்கிற உணர்வையே இந்தப்படம் தரவில்லை, ஒரு ஆத்மா படத்திலிருந்தது. இந்த குறும்படத்தை எடுத்த அனன்யாவிற்கு என் முதல் வாழ்த்துக்கள். கரீஷ்மாவை பிறந்தது முதல் தெரியும். அவரிடமிருந்து இப்படி ஒரு படைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. கல்லூரி காலத்தில் அவர்கள் வாழ்க்கையைத் தான் எடுத்திருப்பார், என நினைத்தேன். மிக கவனமாக மிக அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட படைப்பாகத் தெரிந்தது. தமிழ் சினிமாவில் ஜாதிப்பிரச்சனை கதைகள் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் கதைகளாக ஆகிவிட்டது. பெண்ணுரிமை, வாழ்வியல் பிர்ச்சனை பற்றிய கதைகளே இல்லாமல் போய் விட்டது. அதைப் பேசும் படமாக இப்படம் இருப்பதாக உணர்கிறேன். பெண்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. டயலாக் எல்லாம் மெச்சூர்டாக இருந்தது. ஃபிரேமிங் எல்லாம் மணிரத்னம் சார் மாதிரியும் கதையில் பாலச்சந்தர் சார் மாதிரியும் இருந்தது. கரீஷ்மா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக வருவார். படக்குழு அனைவருமே மிக அற்புதமான உழைப்பைத் தந்துள்ளனர். அனைவரும் மிகப்பெரிதாக வருவார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


நடிகர் வித்தார்த் பேசியதாவது… 

இப்படைப்பைத் தயாரித்த அனன்யாவிற்கு என் முதல் வாழ்த்துக்கள். சரவணன் என் நெருங்கிய நண்பர்.  கரீஷ்மாவை வாழ்த்தும் ஒரு தகப்பனாகத் தான் வந்தேன். ஆனால் இங்கு என்னை சீனியர் நடிகர் என்று சொல்லி விட்டார்கள். இந்தப்படம் பார்த்து பாலச்சந்தர் மூவி பார்த்த ஃபீல் தான் வந்தது. எப்படி இந்த டயலாக எழுதினாய் என கரீஷ்மாவிடம் கேட்டேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கரீஷ்மா எப்படி இவ்வளவு மெச்சூர்டாக எடுத்தார் என ஆச்சரியம் தான். ராம், மிருதுளா இரண்டு பேரும் அருமையாக நடித்துள்ளனர். 90 ல் நடக்கும் கதையை  அருமையான கேமரா கோணங்களில் எடுத்தது ஆச்சரியமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் சிறப்பாகச் செய்துள்ளார். கரீஷ்மா அசத்திவிட்டார். அனைவருக்கும் சினிமாவில் பெரிய இடம் காத்திருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


இயக்குனர் கரீஷ்மாவின் அப்பா சரவணன் பேசியதாவது… 

என் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி. கரீஷ்மாவிடம் நான் எப்போதும் சொல்வேன் சினிமாவில் முக்கியம் புரடியூசர் தான், தயாரிப்பாளர் இல்லாமல் யாரும் இல்லை அதனால் எப்போதும்  தயாரிப்பாளரை மதிக்க வேண்டுமெனச் சொல்வேன். அனன்யாவிற்கு முதல் நன்றி. இந்த விழாவில் கரீஷ்மாவின் அப்பா என சொல்வதில் பெருமையாக இருக்கிறது. இயக்குநர் பிரபாகரனும் நானும் ரூம்மேட் .இந்த 20 வருடமாக சினிமாவை நம்பி இருந்தோம். அந்த சினிமா இந்த வெற்றியைத் தந்துள்ளது. நான் சினிமாவில் இருப்பதால் நிறையக் குறும்படங்கள் பார்ப்பேன், ஆனால் இந்த குறும்படத்தைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. கரீஷ்மா இன்னும் எனக்கு குழந்தைதான் ஆனால் அவள் பிராஸ்டிடியூட் பற்றி படமெடுத்தது ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இருந்தது. உனக்கு சமூக சிந்தனை உள்ளது அதில் தொடர்ந்து படமெடு என வாழ்த்தினேன். அருண், தேஜஷ் எல்லோரும் மிக அருமையாகச் செய்துள்ளனர். எனக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது. முழுமையான சந்தோசமாக உள்ளது. என் நண்பர்களுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 


நடிகர் தயாரிப்பாளர் அம்சவர்தன் ரவிசந்திரன் பேசியதாவது…  

நான் இவ்விழாவில் தந்தையா, விருந்தினரா என்பதே குழப்பமாக உள்ளது. அனன்யா முதலில் ஒரு குறும்படம் எடுக்கிறேன் என்று வந்தார். சரி என்றேன் கதை என்ன எனக் கேட்டேன் சொல்லவே இல்லை. படம் முடிந்த பாருங்கள் என்றார். அவுட் பார்த்து மிரண்டு விட்டேன். முதல் வாழ்த்து ஒளிப்பதிவாளருக்கு, அத்தனை அற்புதமாக விஷுவல்ஸ் கொண்டு வந்துள்ளார். ராம், மிருதுளா அற்புதமாக நடித்துள்ளார்கள். கரீஷ்மா மிக அற்புதமாக இயக்கியுள்ளார். இந்த மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்கள். அடுத்தடுத்து நல்ல படங்கள் எடுப்பார்கள். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. 


இயக்குநர் கரீஷ்மா பேசியதாவது…

என் அப்பா அம்மாவிற்கு முதல் நன்றி. சினிமா ஒரு காம்படிசன் மீடியம், ஆனால் என்னை நம்பிய அவர்களுக்கு நன்றி. என் தயாரிப்பாளர் ஃபிரண்ட் அனன்யாவுக்கு நன்றி. நான் என்ன கேட்டாலும் அவரிடம் நோ எனும் சொல்லே வராது. எங்களை நம்பிய அம்சவர்தன் அங்கிளுக்கு நன்றி. எடிட்டர் அருணுக்கு நன்றி. தேஜஷ் நிறையக் காட்சிக்கு உயிர் தந்தது அவர் தான் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் என்னுடன் நிறையச் சண்டை போடுவார் ஆனால் விஷுவல்ஸ் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடன் உழைத்த மொத்த கலைஞர்களுக்கும் நன்றிகள். ராம் நிஷாந்த் எதுவுமே கேட்காமல் ஒப்புக் கொண்டார். மிருதுளா மிக ஆதரவாக இருந்தார். ஒரு யங் டீமுக்கும் இவ்வளவு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.  


கல்லூரி இளைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள “கன்னி” குறும்படம் Moviebuff தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த 'சச்சின்' திரைப்படக்குழுவின் சக்ஸஸ் மீட்

 *மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த 'சச்சின்' திரைப்படக்குழுவின் சக்ஸஸ் மீட்!*




சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது.  இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது. விஜய்யின் 'கில்லி' மறு வெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றது, இதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ள நிலையில், பழைய 'பிளாக்பஸ்டர்' படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது. 'தளபதி' விஜய்யின் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமான 'சச்சின்' 20-ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி உலகமெங்கும் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றதை

கொண்டாடும் விதமாக படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


*ஷோபி*


படத்தில் இடம்பெற்ற் 'வாடி வாடி' உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனர் ஷோபி பேசியபோது," திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி வெற்றி பெற்ற 'சச்சின்' திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்து கொள்வது ஒரு புது அனுபவமாக உள்ளது. அப்போதைய ரசிகர்களைப் போல 20 வருடங்களுக்குப் பிறகு இன்றைய தலைமுறையினரும் அந்த பாடல்களை கொண்டாடுவது,  மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர் தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குனர் ஜான் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் ஜீவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோருடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றியது மலரும் நினைவுகளாக உள்ளது. படத்தின் பாடல் காட்சிகள் மிக சிறப்பாக அமைய 'தளபதி' விஜய் அவர்களின் ஒத்துழைப்பும் மிக முக்கிய காரணம். தயாரிப்பாளர் தாணு அவர்களிடம் 'தளபதி' விஜயின் பொக்கிஷம் போன்று மூன்று திரைப்படங்கள் சச்சின்,துப்பாக்கி, தெறி உள்ளன. இத்திரைப்படக் குழுவினருக்கும், என்னுடைய நடன குழுவினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்", என்று பேசினார்.


*ஜான் மகேந்திரன்*


அடுத்ததாக இயக்குனர் ஜான் பேசும்போது," சச்சின் திரைப்படம் மீண்டும் வெளியாகியுள்ளதைப் போன்றே எனக்கு தோன்றவில்லை. 20 வருடம் கடந்து விட்டதா என்று ஆச்சரியமாக உள்ளது. புதுப்படம் வெளியானதை போன்றே உள்ளது. படத்தை மறுபடியும் வெளியீடப் போவதாக தயாரிப்பாளர் தாணு அவர்கள் என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார். அடுத்ததாக படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் போன்ற அடுத்தடுத்த அப்டேட்டுகளை புதுப்படத்திற்கு விளம்பரப்படுத்துவது போன்றே கொடுத்துக் கொண்டிருந்தார். ட்ரெய்லர் தான் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கும். அதற்கு முழுக்க முழுக்க தயாரிப்பாளர் தாணு அவர்கள் தான் காரணம். திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார் என்பது மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது. திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் கண்டுகளிக்க முக்கியமான ஈர்ப்பு சக்தியாக இருப்பது 'தளபதி' விஜய் என்றால், படத்திற்கு தேவையான விளம்பரத்தை கொடுத்து ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்ததற்கு இன்னொரு காரணம் தயாரிப்பாளர் தாணு அவர்கள். அதே போல திரையரங்குகளில் தனது இசையின் மூலம் தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்களை கொண்டாட வைக்க, நடன இயக்குனர் ஷோபி அவர்கள் துள்ளலான நடன அசைவுகள் மூலம் ரசிகர்களை ஆடிப்பாட வைக்கிறார். அற்புதமான காட்சிகளை அளித்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவா அவர்கள் நம்மிடையே இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. படப்பிடிப்பு முழுக்க நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்த 'தளபதி' விஜய் மற்றும் ஜெனிலியா இருவருக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்", என முடித்தார்.


*'கலைப்புலி' எஸ்.தாணு*


அடுத்ததாக நன்றி தெரிவிக்க வந்த தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ்.தாணு அவர்கள் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரசிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு பேசியபோது," 'தளபதி' விஜய்யிடம் எப்படி சச்சின் திரைப்படம் சென்றது என்பதை கூறினால் ஒரு நாள் போதாது. 'தளபதி' விஜய் திருப்பாச்சி, மதுர போன்ற அதிரடி திரைப்படங்களில் கவனம் செலுத்தும் பொழுது, ஒரு மாற்றத்திற்காக 'தளபதி' விஜய்யுடன் கலந்துரையாடும் போது இயக்குனர் ஜான் மகேந்திரன் பற்றி கூறினேன். அவர் என்னிடம் குஷி போன்ற கதை ஒன்றை கூறினார்,நீங்கள் கேட்கிறீர்களா?என்று கேட்டேன். அதன் பிறகு இயக்குனர் ஜான் மகேந்திரன் 'தளபதி' விஜய்யிடம் கதை  கூற ஏற்பாடு செய்தேன். ஒன்றறை மணி நேரத்திற்கு பிறகு 'தளபதி' விஜய்யிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது, 'கதை மிகவும் பிடித்திருக்கிறது; கண்டிப்பாக பண்ணலாமென்று' கூறினார். 


உலகமெங்கும் 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட்டேன். திரைப்படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களும் நல்ல வசூல் சாதனை செய்ததாக கூறினார்கள். 200 நாட்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது, இப்பொழுது விளம்பரப்படுத்துதலின் செலவு குறைந்திருப்பதாலும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை எளிதாக சென்றடைவதன் மூலம் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி, மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். 'சச்சின்' மறுவெளியீடு செய்த மறுநாள் என் குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றேன். அப்படி ஒரு மக்கள் கூட்டத்தை நான் பார்த்ததில்லை. தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல், அவர்களை உயர்த்தி ஊக்குவிக்கும் நடிகர்களில் 'தளபதி' விஜய்யும் ஒருவர். 'சச்சின்' திரைப்படம் மீண்டும் வெற்றியடைய திரையரங்கு உரிமையாளர்களும் மிகப்பெரிய காரணம். மேலும் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, மிகப்பெரிய வெற்றியடைய செய்த ஊடக நண்பர்களுக்கு மிக்க நன்றி", என தனது உரையை முடித்துக் கொண்டார்.


*தேவி ஸ்ரீ பிரசாத்*


துள்ளலான இசையை தந்து இரண்டு தலைமுறை ரசிகர்களை ஆட்டம் போடவைத்த, 'சச்சின்' திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் பேசியபோது,"என் வாழ்க்கையை நான் இசையோடு தான் கொண்டாடுவேன். நான் எங்கு சென்றாலும் என்னிடம் எல்லோரும் சொல்வது 'சச்சின்' திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது என்று தான் இன்று வரையிலும் சொல்வார்கள். நான் செல்லும் இசை நிகழ்ச்சி அல்லது விருது விழாக்கள் என எங்கு சென்றாலும், இந்த படத்தின் பாடலை பாடாமல் மேடையை விட்டு இறங்க விட்டதே இல்லை. என் இசைப் பயணத்தில் 'சச்சின்' திரைப்படம் மிகவும் முக்கியமான ஒன்று, அதனால் தாணு சார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருமுறை சாரிடமிருந்து அழைப்பு வந்தது, 'எங்கு பார்த்தாலும் உனது பெயர் தான் பேசுகிறார்கள்' என்று கூறினார். விரைவில் நாம் சந்திக்கலாம் சென்னை வந்ததும் கூறுங்கள் என்று கூறினார், நான் சென்னை வந்ததும் அவரை சந்தித்தேன். அப்பொழுதுதான் " 'சச்சின்' என்ற திரைப்படம் பண்ணுகின்றோம்" என்று கூறினார். என்னை அவர் வீட்டு பிள்ளையாக தான் பார்ப்பார். சில மாதங்களுக்கு முன்பு 'சச்சின்' மறுவெளியீடு செய்யப் போகிறேன் என்று கூறினார். படமும் வெளியாகி தற்போது வரை மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழுவினர் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்", என்று பேசினார்.


அத்துடன் படத்தின் வெற்றி விழா செய்தியாளர் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.

Saturday, 26 April 2025

நடிகர் துல்கர் சல்மானின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான 'காந்தா’வில்

 *நடிகர் துல்கர் சல்மானின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான 'காந்தா’வில் இருந்து நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திர போஸ்டர் ‘அய்யா’ வெளியாகியுள்ளது!*



நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. தற்போது இந்தப் படத்தில் இருந்து நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திர போஸ்டர் ‘அய்யா’, அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. ‘அய்யா’வாக அவரது தோற்றம் கம்பீரமாக இந்த போஸ்டரில் உள்ளது. அதிலும் இந்த புதிய போஸ்டரில் ’துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம், இந்தப் படத்தில் சமுத்திக்கனி கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிகிறது. 



ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' படத்தின் மூலம் பான் இந்தியன் ஸ்டார் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.



பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி, சித்திக், அனிகா சுரேந்திரன் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



*தொழில்நுட்பக் குழு:* 


ஒளிப்பதிவாளர்: டேனி சான்செஸ்-லோபஸ், 

படத்தொகுப்பாளர்: லெவெலின் அந்தோணி கோன்சால்வ்ஸ், 

இசையமைப்பாளர்: ஜானு சாந்தர், 

கலை இயக்குநர்: ராமலிங்கம்,

ஆடை வடிவமைப்பாளர்: பூஜிதா தாடிகொண்டா மற்றும் சஞ்சனா ஸ்ரீனிவாஸ்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர்.

Samuthirakani’s Character Look of ‘Ayya’ from Dulquer Salmaan’s much-awaited ‘

 *Samuthirakani’s Character Look of ‘Ayya’ from Dulquer Salmaan’s much-awaited ‘Kaantha’ has been unveiled* 



Dulquer Salmaan’s Kaantha has been creating the right sensations from its time of announcement. The makers have delightedly unveiled the character look of actor Samuthirakani as ‘Ayya’, marking the special occasion of his birthday. The content-driven actor looks promising with a powerful look as Ayya, which has intensified and heightened the expectations over the film. Samuthirakani’s look encapsulated with rooted, intense and soulful aura, distinctly assures that he has a strong pivotal role in this movie. Besides, the title prefixed Dulquer Salmaan & Samuthirakani starrer “Kaantha” in this New Poster, has justified his huge prominence in this film. 


Dulquer Salmaan, the Pan-Indian star enjoying his glorious fan base all over the country is back with yet another unique and powerful lead role in ‘Kaantha’, which is bankrolled by Spirit Media and Wayfarer Films. The film is directed by Selvamani Selvaraj and is produced by Rana Daggubati, Dulquer Salmaan, Prashanth Potluri &  Jom Varghese.


While Dulquer Salmaan and Samuthirakani are already well-known in the star-cast of Kaantha, the others include Bhagyashri Borse, Rana Daggubati, Siddique, Anikha Surendran, and Soubin Shahir playing pivotal characters. 


The film features Dani Sanchez-Lopez as the Director of Photography, Lewellyn Anthony Gonsalves as the Editor, Jhanu Chanthar as the Music Composer, Ramalingam as the Art Director, and Poojitha Thadikonda along with Sanjana Srinivas handling the Costume Design. Suresh Chandra & Abdul Nassar are handling PR works for this film.

Sumo Movie Review

Suno Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mirchi shiva நடிப்புல வெளி வந்த sumo படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு sports காமெடி படம் தான்.  S. P. Hosimin, தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. Shiva, Priya Anand , Yoshinori Tashiro  , VTV Ganesh, Yogi Babu, Chetan, Besant Ravi, Srinath லாம் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட shooting அ 2019 ல ஆரம்பிச்சு 2021 ல release ஆகும் னு official அ சொல்லி இருந்தாங்க. ஆனா covid னால இந்த படத்தோட release delay ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம் 2024 ல release ஆகும் னு சொல்லிருந்தாங்க. கடைசியா இந்த படம் april 25 அன்னிக்கு release  ஆயிருக்கு. shiva வும் priya anand யும் 2013 ல release ஆனா வணக்கம் சென்னை படத்துக்கு அப்புறம் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. Yoshinori Tashiro ஒரு முன்னாள் sumo வீரர் யும் கூட. 



சோ வாங்க இந்த படத்தோட கதை குள்ள நம்ம போகலாம். shiva ஒரு surfer அ இருக்காரு. அதோட  beach side ல இருக்கற ஒரு கடை ல வேலையும் பாத்துட்டு இருக்காரு. இந்த கடைய jack அ நடிச்சிருக்க vtv ganesh தான் நடத்திட்டு வராரு. shiva தன்னோட girlfriend kanimozhi அ நடிச்சிருக்க priya anand அ australia க்கு கூட்டிட்டு போய் அங்கேயே settle ஆகணும் னு முடிவு எடுக்குறாரு. அப்போ தான் beach ஓரத்துல ஒரு sumo wrestler கரை ல வந்து சேருறாரு. இவரோட iq level வெறும் ஒரு வயசு கொழந்தையோடதா இருக்கு. அதுனால இந்த sumo wrestler அ பத்திரமா பாத்துக்குறாரு.அப்போ தான் இவரு japan ல ரொம்ப famous ஆனா sumo வீரர் னு தெறிய வரவும் உடனே இவரை ஜப்பான் க்கு அழைச்சிட்டு போறாரு. இந்த சுமோ வீரர் யாரு? இவரு எப்படி சென்னை beach ல வந்து சேந்தாரு ? japan க்கு இந்த சுமோ வீரர் அ கூட்டிட்டு போனதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


mirchi shiva படங்கள்னாலே அதுல எப்பவும் comedy இருக்கும். இந்த படமும் அதே மாதிரி தான் இருக்கு. சென்னை ல இருக்கற ஒருத்தரும் japan ல இருக்கற ஒருத்தரும் சேந்து பழகும் போது அவங்களுக்குள்ள நெறய difference இருக்கும். அதாவுது கலாச்சாரம் சாப்பாடு னு வேறுபாடு இருக்கும். அது எல்லாத்தயும் தாண்டி இவங்க எப்படி friends ஆகுறாங்க ன்றது ஒரு பக்கம் இருக்கு. sumo ஓட உண்மையான பேர் தெரியதனால குண்டு பையன், மனுஷன் திமிங்கலம், தடியன் னு  நெறய பட்டை பேர் வச்சு தான் கூப்பிடுறாங்க. அதுக்கு அப்புரும் இவர்களே சுமோ க்கு ஒரு பேர் வைக்கிறாங்க அது தான் ganesh. இதுமட்டுமிலா பிள்ளையார் சதுர்த்தி க்கு இந்த sumo க்கு பிள்ளையார் வேஷமே போட்டு விட்டுடறாங்க. இந்த படத்துல ஒரு சில loopholes யும் இருந்தது. அது என்னனா சுமோ வ japan க்கு கூட்டிட்டு போகலாம் னு முடிவு பண்ணும் போது ஒரு consulting centre க்கு போறாங்க. அங்க இருக்கற adviser japan ஓட dress ஆனா kimino வ போட்டுக்கிட்டு இருக்கிறது ல கொஞ்சம் வேடிக்கையா   இருந்தது. அதே மாதிரி priya anand யும் shiva வும் australia போய் settle ஆகணும் னு முடிவு எடுக்கறாங்க. ஆனா அதுக்கான எந்த ஒரு effort யும் இல்ல அதே பத்தி பேச கூட மாட்டாங்க. இவங்கள பத்தி vtv ganesh சும்மா ஒரு voice over குடுக்கற மாதிரி தான்  இருக்கும் .  இந்த scenes  லாம் கொஞ்சம் மாத்திருந்த இந்த படம் இன்னும் நல்ல  இருந்திருக்கும். 


படத்தோட second  half ல தான் சுமோ வ japan க்கு கூட்டிட்டு போய் சுமோ வீரர் போட்டியில கலந்துக்க வச்சு ஜெய்க்கறதுக்காக ஷிவா வும் அவரோட team யும் encourage பண்ணுவாங்க. இந்த scenes எல்லாம் நல்ல இருந்தது. மொத்தத்துல ஒரு நல்ல காமெடி entertainer படம் தான் இது. இந்த summer leave க்கு தொடர்ந்து comedy படங்களை வருது. இந்த படமும் உங்க family and friends ஓட சேந்து theatre ல ரசிச்சு பாருங்க.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படத் தலைப்பில் 'செந்தமிழன்' சீமான்

 *சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படத் தலைப்பில் 'செந்தமிழன்' சீமான் ..!*








'தப்பாட்டம்', 'ஆண்டி இண்டியன்',

'உயிர் தமிழுக்கு' ஆகிய வெற்றிப் படங்களைத் 

தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ், ஆதம் பாவா மற்றும் 

பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் "தர்மயுத்தம்” 


இத்திரைப்படத்தில் 

செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மலையாளத்  திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக

நடிக்கிறார்.


இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன் , சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


'பரதேசி', 'தாரை தப்பட்டை', 'ஜோக்கர்',

'டூ லெட்' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து செழியன் ஒளிப்பதிவு செய்ய, 


'சீதா ராமம்', 'சித்தா' ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷால் சந்திரசேகர் இசையமைக்க , கவிப் பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். 


படத்தின் தொகுப்பாளாராக புவன் சீனிவாசனும்,  கலை இயக்குநராக மாயப்பாண்டியும்,  தயாரிப்பு நிர்வாகியாக முத்.அம்.சிவக்குமாரும் பணியாற்றியுள்ளனர். 


மக்கள் தொடர்பு ஆ.ஜான்..


ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேசன் கிரைம் திரில்லராக மலையாளத் திரைப்பட பாணியில் வளர்ந்துள்ள இத்திரைப்படத்தை இரா.சுப்ரமணியன்

எழுதி இயக்கியிருக்கிறார்.


தென்காசி,குற்றாலம்,

திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம, நகர்ப் புறங்களிலும் உருவாகியிருக்கும் இத் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது..!