Featured post

CHALLANI'S DAIMOND FESTIVAL

 *CHALLANI'S DAIMOND FESTIVAL*  Challani Jewellers T.Nagar Celebrates Diamond Festival From 5th June To 15th June. The Inauguration Has ...

Thursday, 20 April 2023

ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் ‘லப்பர் பந்து

 *ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் ‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு துவங்கியது*


*சென்னைக்கு அருகே துவங்கிய  ‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு*


கனா,  எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குநர் மற்றும் நெஞ்சுக்கு நீதி  படத்தின் வசனம் எழுதிய  தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. 






தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கடந்த வருடம் வெளியான சர்தார், காரி, ரன் பேபி ரன்  ஆகிய வெற்றிப் படங்களையடுத்து  லப்பர் பந்து படத்தைத்  தயாரிக்கிறது.


ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.  


கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடிக்கின்றனர். 


மேலும் தேவதர்ஷினி, பால சரவணன்  உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.


கடந்த மார்ச் முதல் வாரத்தில் துவக்க விழா பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கி நடைபெற்று வருகிறது.


கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மேற்கொள்ள, ஜி.மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

No comments:

Post a Comment