Featured post

Dhoni Entertainment’s L.G.M. teaser gets a heart-warming response

 *Dhoni Entertainment’s L.G.M. teaser gets a heart-warming response*  Dhoni Entertainment’s maiden Tamil production ‘LGM’ is being highly an...

Saturday, 22 April 2023

அட்சய திரிதியை முன்னிட்டு பிரத்யேக போஸ்டரை வெளியிட்ட 'ஆதி புருஷ்

 *அட்சய திரிதியை முன்னிட்டு பிரத்யேக போஸ்டரை வெளியிட்ட 'ஆதி புருஷ்' படக் குழு*


*'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக போஸ்டர் மற்றும் படத்தில் இடம்பெற்ற 'ஜெய் ஸ்ரீ ராம்' எனும் பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.*




'ஆதி புருஷ்' படத்தின் வெளியீட்டிற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் தற்போது அப்படத்தின் நாயகனான பிரபாஸ், ஸ்ரீ ராம பிரானின் வேடத்தில் தோன்றும் போஸ்டர் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அட்சய திரிதியை புனித நாளான இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டரில் ராமபிரானின் தோற்றத்தில் பிரபாஸ் பொருத்தமாக தோன்றியிருப்பது குறித்து ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். மேலும் அவர்களை உற்சாகப்படுத்த தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் 'ஜெய் ஸ்ரீராம்' 

எனத் தொடங்கும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் அடங்கிய ஒலி துணுக்குகள் வெளியிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த இசை..., ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் அஜய்- அதுல் இசையமைத்திருக்கும் 60 வினாடிகள் கொண்ட பன்மொழி பதிப்பு மற்றும் பிரத்யேக போஸ்டர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.


போஸ்டரில் பிரபாஸின் ராமபிரான் தோற்றம் எதற்காக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக எதிரொலிக்கிறது. மேலும் இந்த போஸ்டருடன் வெளியாகி இருக்கும் ஒலி குறிப்பு- ரசிகர்கள் பெரிய திரையில் காண்பதற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. 


இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகிறது.

No comments:

Post a Comment