Featured post

Hollywood Heat Meets Indian Grit: JJ Perry of John Wick fame taps an all Indian stunt team

 Hollywood Heat Meets Indian Grit: JJ Perry of John Wick fame taps an all Indian stunt team for 45-Day Action Marathon Shoot of Yash’s Toxic...

Tuesday, 5 November 2024

அல்லு அரவிந்த் வழங்கும் - நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து

 *அல்லு அரவிந்த் வழங்கும் - நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து மொண்டேடி, பன்னி வாஸ், கீதா ஆர்ட்ஸ் இணையும் - “தண்டேல்” திரைப்படம்,  பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !!*



நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும்  “தண்டேல்” திரைப்படம்  பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !! 


இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.



காதலர் தினத்திற்கு சற்று முன்னதாக, தண்டேல் திரைப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. காதலர்கள் காதலை இப்படத்துடன் கொண்டாட, சரியான வாய்ப்பை இது  வழங்குகிறது.


படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போஸ்டர், முன்னணி ஜோடியான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவிக்கு இடையேயான அற்புதமான கெமிஸ்ட்ரியை காட்டுகிறது, போஸ்டர் கடல் பின்னணியில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர், காதல் ஜோடியின் அன்பான அரவணைப்பை சித்தரிக்கிறது, அவர்களின் கதாபாத்திரங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பின் ஆழமான கடலைக் குறியீடாக குறிக்கிறது. டீசர் மற்றும் போஸ்டர்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் ஏற்கனவே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி அவர்களின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான லவ் ஸ்டோரிக்குப் பிறகு, திரையில் மீண்டும் அவர்கள் இணைவதைக் காண ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.


ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள டி மச்சிலேசம் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் “தண்டேல்” திரைப்படம், பரபரப்பான  தருணங்களுடன் கூடிய அற்புதமான காதல் கதையைச் சொல்கிறது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவைக் கையாள்கிறார் மற்றும் தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி, கலை இயக்கம் ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா உட்பட, இத்திரைப்படத்தில் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். 


நடிகர்கள் : நாக சைதன்யா, சாய் பல்லவி 


தொழில்நுட்பக் குழு: 

எழுத்து இயக்கம் : சந்து மொண்டேடி வழங்குபவர்: அல்லு அரவிந்த் 

தயாரிப்பாளர்: பன்னி வாஸ் 

பேனர்: கீதா ஆர்ட்ஸ் 

இசை: தேவி ஸ்ரீ பிரசாத் 

ஒளிப்பதிவு : ஷாம்தத் 

எடிட்டர்: நவீன் நூலி 

கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா 

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

No comments:

Post a Comment