Featured post

Heartfelt greetings and gratitude to my beloved fans, my dear friends, and the general public

 Heartfelt greetings and gratitude to my beloved fans, my dear friends, and the general public  Today sept 10th i complete 21 years of my jo...

Monday, 3 March 2025

கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 



“மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.


“மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது,  தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் புதிய திரைப்படமான “கட்டாளன்”  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.  இந்த திரைப்படத்தில், பிபி (ஆண்டனி வர்கீஸ்) முதன்மைப்பாத்திரத்தில் நடிக்கிறார். 


இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு தீவிரமான திரில்லராக, ஆக்சன் அதிரடிப் படமாக இருக்கும் என்பதைக் குறிக்கின்றது. போஸ்டரில், நடு காட்டுக்குள் பலர் செத்து விழுந்து கிடக்க, நடுவில் கொளுந்து விட்டு எரியும் நெருப்புக்கு மத்தியில், பிபி கையில் கோடாளியுடன் மிரட்டலாக தோற்றமளிக்கிறார்.  இப்படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார்.


“மார்கோ” படம் போலவே இந்த “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும்,  படு மிரட்டலாக, மிக உயர்ந்த தரத்துடன் உள்ளது.  கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், தனது முதல் திரைப்படத்திலேயே, பெரிய கவனத்தைப் பெற்ற நிறுவனம், இதன் இரண்டாவது படத்திற்கும், இப்போது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. போஸ்டரின் டைட்டில்  நாகங்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றின் பின்னணியில் மறைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பல ஆச்சரியங்களை டைட்டிலேயே வைத்திருக்கிறது படக்குழு. ஜெயிலர், லியோ, ஜவான், கூலி போன்ற படங்களின் டைட்டிலை உருவாக்கிய அடென்ட் லேப்ஸ் நிறுவனம், இந்த டைட்டிலை உருவாக்கியுள்ளது. 


தனது முதல் படத்தில் வித்தியாசமான களம், கதை  மற்றும் மார்கெட்டிங் என முழு திறமையை நிரூபித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் தனது முந்தைய படங்களின் மூலம், ரசிகர்களின் அன்பைப் பெற்ற, பிபி இணைந்து உருவாக்கும் இந்த புதிய பான் இந்தியா திரைப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த திரைப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது . 


மக்கள் தொடர்பு - சதீஷ்குமார், S2 Media

No comments:

Post a Comment