Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Friday, 7 March 2025

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள'பைசன்' எனும் துணிச்சலான

 *மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள'பைசன்' எனும் துணிச்சலான விளையாட்டு வீரரை பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்டுள்ளன*




பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பைசனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அனைவரின் பாராட்டையும் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விளையாட்டு வீரர் பற்றிய இந்த கதையின் ஃபர்ஸ்ட் லுக்கை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்-  நீலம் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வெளியிட்டுள்ளது. கபடி வீரராக துருவ் விக்ரம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவருடன் இணைந்து நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு.. ஆர்வம்.. மீள் உருவாக்கம்.. மற்றும் அனைத்து தடைகளையும் எதிர்த்து வெற்றி பெறுவதற்கான ஒரு உறுதியான நிலைப்பாட்டை உயிர்ப்பிக்கிறது. 


கதை சொல்வதில் தனித்துவமான பாணியை கொண்டிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பைசன்'- பார்வையாளர்களை உத்வேகப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் தமிழில் வெளியாகும் ஒரு மைல்கல் படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. மேலும் இந்த பயணத்தின் புதிய தகவல்களுக்காக ஆர்வத்துடன் காத்திருங்கள்.

No comments:

Post a Comment