Gentlewoman Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம gentlewomen படத்தோட review அ தான் பாக்க போறோம். Lijomol Jose, Losliya Mariyanesan, Hari Krishnan , Rajiv Gandhi, Dharani, Vairabalan, Nanditha Sreekumar, Sudesh நடிச்சிருக்க இந்த படத்தை Joshua Sethuraman தான் direct பண்ணிருக்காரு. இந்த படத்துல இருந்து இது வரைக்கும் ரெண்டு பாடல்கள் release ஆயிருக்கு. படத்தோட title க்கு ஏத்த மாதிரியே இது ஒரு feministic approach ல தான் கதையை எடுத்திருக்காங்க. இந்த படத்தோட director பேசும் போது gentle ன்ற வார்தை ஆண்களுக்கு மட்டும் கிடையாது பெண்களுக்கும் தான். பொண்ணுங்கள பத்தி சொல்லற குற்றங்கள் எல்லாமே அவங்களோட உடம்ப சார்ந்து தான் இருக்கும். அதுக்கு காரணம் பொண்ணுங்கள பொருளா பாக்குறதுதான் னு னு சொல்லிருக்காரு. இந்த விஷயத்தை விவாதிக்கற மாதிரி தான் இந்த படம் இருக்கும்னு சொல்லிருக்காரு. ஆனா அதே சமயம் இது feminism படம்னு சொல்ல முடியாது ஏன்னா society ல நடக்கற உண்மையான சம்பவங்களை base பண்ணி தான் படத்துல காமிச்சிருக்கோம் னு சொல்லிருக்காரு.
Gentlewoman Movie Video Review: https://www.youtube.com/watch?v=F7TC0-gBkSU
சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். relationship ல வர complex ஆனா விஷயங்கள் அ தான் main ஆனா விஷயம் அ இருக்கு. ஒரு husband and wife இருக்காங்க. திடுறுனு ஒரு நாள் இந்த பொண்ணு ஓட husband காணாம போயிடுறாங்க இவரை கண்டுபிடிக்கறதுக்காக police அவங்களோட investigaton அ ஆரம்பிக்குறாங்க. அப்போ தான் இந்த பொண்ணோட husband கிட்ட ஒரு client இருப்பாங்க. அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிருக்காது. அந்த பொண்ணு கிட்ட இந்த husband அ பத்தி விசாரிக்கறாங்க. கடைசில இவளுக்கு அந்த wife மேல தான் அதிகமா சந்தேகம் வருது. என்னதான் தன்னோட husband காணாம போனாலும், அவங்களோட expressions எல்லாமே calm அ இருக்கும் ஒரு பதட்டமோ இருக்காது. அதுனால இவங்க எதோ ஒரு விஷயத்தை மறைக்கறாங்க இல்லனா husband எதுக்காக காணாம போனாரு ன்றது இவங்களுக்கு தெரிஞ்சுருக்கணும் ன்ற மாதிரி police ஒரு முடிவுக்கு வராங்க. ஒரு வேலை financial காரணமா அந்த ஆளு ஓடி போயிருப்பானா னு police யோசிச்சாலும் wife ஓட behaviour மேல தான் இவங்களுக்கு சந்தேகம் வருது. இந்த wife க்கும் client க்கும் நடுவுல நடக்கற எல்லா விஷயங்களும் ரொம்ப deep அ எடுத்துட்டு போயிருக்காரு director . நெறய twist லாம் வச்சு கடைசில என்ன தான் நடந்து ன்றது வச்சு தான் படத்தோட மீதி கதை நகருது.
கதை போக போக suspense அ built பண்ணி audience ஓட கவனத்தை ஈர்க்கற மாதிரி அமைச்சிருக்கு. கடைசில நம்பிக்கைக்கும் துரோகத்துக்கும் இருக்கற வித்யாசம் எவ்ளோ சின்னது ன்றதா ரொம்ப அழகா portray பண்ணிருக்காங்க.
படத்துல ஒரு dialogue ஒன்னு வரும் , ஒரு பொண்ண கஷ்டத்துல விட்டுட்டு போற ஆணுக்கு விடை அளிக்க தேவையில்ல னு சொல்லுறாங்க. இந்த மாதிரி dialogues எல்லாமே ரொம்ப powerful அ அதே சமயம் யோசிக்க வைக்கிற மாதிரியும் இருக்கு. எப்பவுமே கஷ்டத்துல இருக்கற மாதிரி ஒரு character அ காமிக்காம, ஒரு மனுஷனால எவ்ளோ தூரம் எல்லாத்தயும் தாங்கிக்க முடியும், பிரச்சனை னு வந்த அதா எப்படி சமாளிக்கற, அதோட வாழக்கை குடுக்கற படத்தை எப்படி எடுத்துக்கறாங்க ன்ற விஷயங்களை காமிக்கிறது தான் இந்த படத்தோட அழகே னு சொல்லலாம்.
கடைசில உண்மை தெரிய வரும் போது ஒரு super ஆனா climax அ குடுத்து முடிச்சிருக்காங்க. கண்டிப்பா இந்த climax படத்தை பாக்குற audience க்கு shocking அ அதே சமயம் satisfied அ இருக்கும் னு தான் சொல்லணும். ஒரு பொண்ணு எடுக்கற choices , அவளோட inner strength னு portray பண்ணிருக்காங்க. இது ஒரு பொண்ண ஏமாத்துறதோ இல்ல அவ personal அ ஒரு விஷயத்தை இழந்துட்டா ன்ற மாதிரி negative shade ல காமிக்காம ஒரு பொண்ணு தன்னோட life ல வர எல்லா பிரச்சனையும் எப்படி கடந்து வர ன்ற beautiful journey தான் இந்த படம்.
ஒரு good feel movie னு தான் சொல்லுவேன். கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க
No comments:
Post a Comment