Featured post

Mission Santa YoYo to the Rescue Movie Review

Mission Santa YoYo to the Rescue Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mission santa yoyo  to the rescue  படத்தோட review அ தான் பாக்க போ...

Wednesday, 5 March 2025

பிரைம் வீடியோவின் சுழல் - வோர்டெக்ஸ் S2: பெண்ணியத்தைக் கொண்டாடும் கதை

 *பிரைம் வீடியோவின் சுழல் - வோர்டெக்ஸ் S2: பெண்ணியத்தைக்  கொண்டாடும் கதை !*




“சுழல் - வோர்டெக்ஸ்” சீரிஸ் தமிழில் திரில்லர் சீரிஸ்களுக்கு இலக்கணமாக அமைந்துள்ளது.  இந்த சீரிஸின் இரண்டு  சீசன்களும் ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டிப்போட்டுள்ளது. ஒரு  திரில்லராக மட்டுமால்லாமல், கலாசார நுட்பங்களுடன் கூடிய தனித்துவமான கதையையும், மிகச்சிறந்த கதாப்பாத்திரங்களையும் உருவாக்கியதில் சிறப்பு மிக்க தொடராக பாராட்டுக்களைக் குவித்துள்ளது. முதல் சீசன் மாயனக் கொள்ளை திருவிழாவின் பின்னணியில் அமைந்திருந்தது. இரண்டாவது சீசன் மேலும் ஒரு படி முன்னேறி, அஷ்டகாளி திருவிழாவைக் களமாகக் கொண்டு கதையைச் சொல்லுகிறது. இந்த திருவிழா தெய்வீகமான பெண்மையின் ஆற்றலைப் போற்றும் ஒரு திருவிழா, இதில் பக்தர்கள் எட்டு தேவியர்களை வழிபடும் தெய்வீக நிகழ்வுகள், வழிபாடுகள் மற்றும் பல்வேறு சடங்குகள் நடக்கின்றன.


சுழல்: வோர்டெக்ஸ் S2 கதையின் பரிமாணங்களை அடுக்குக்கடுக்க வெளிப்படுத்துகிறது, குறிப்பாக திருவிழாவுக்குப் பின்னணியில் உள்ள எட்டு தேவிகளின் விசித்திரமான அம்சங்களைச் சின்னமாகக் காட்டும் எட்டு சிறுமிகள் இவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த சிறுமிகள் ஒவ்வொரு தேவியின் ஆற்றலையும் குணாதிசயங்களையும் ஆழமாகவும் சிறப்பாகவும் பிரதிபலிக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு தேவியின் தெய்வீக சக்திகளை கதையில் உயிர்ப்பிக்கின்றனர்.


தமிழின் முக்கிய படைப்பாளிகளான  புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில் இந்த படைப்பு உருவாகியுள்ளது.  தமிழ் திருவிழாக்களின் பல பரிமாணங்களையும் ஆராய்ந்து, புதிய முறையில் பெண்கள் திறனை வெளிப்படுத்தும் கதைக்களத்தை இக்கதையில் உருவாக்கியுள்ளனர். பாரம்பரிய மகத்தான கலைகளையும், பெண்களின் துணிச்சலும் தன்னலமும் ஒரே நேரத்தில் இணைத்து, ஒரு த்ரில்லர் கதையாக உருவாக்கியுள்ளனர். இந்த எட்டு சிறுமிகளின் அட்டகாசமான  நடிப்பும், கலாசார ரீதியான அம்சங்களும், ஆழமான கதையும் “சுழல்” தொடருக்கு மெருகூட்டுகின்றது.  முதல் சீசனைப் போலவே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில்,  இரண்டாவது சீசனும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.


“சுழல் - வோர்டெக்ஸ்” சீசன் 2, வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயற்றி இப்படைப்பை எழுதி உருவாக்கி எழுதியுள்ளனர். பிரம்மா மற்றும் சர்ஜுன் KM ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில் முதல் சீசனில் பங்குபெற்ற கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், சரவணன், கவுரி கிஷன் (முத்து), சம்யுக்தா விஷ்வநாதன் (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி (முப்பி), ரினி (காந்தாரி), ஷ்ரிஷா (வீரா), அபிராமி போஸ் (சென்பகம்), நிகிலா சங்கர் (சந்தனம்), கலைவாணி பாஸ்கர் (உலகு) மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். “சுழல் - வோர்டெக்ஸ்” சீசன் 2 தற்போது பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.

No comments:

Post a Comment