Featured post

*The Undisputed Pan-India Rebel Star Prabhas Ignites Global Storytelling Revolution with The Script Craft International Short Film Festival

 *The Undisputed Pan-India Rebel Star Prabhas Ignites Global Storytelling Revolution with The Script Craft International Short Film Festival...

Friday, 1 August 2025

வரலட்சுமி சரத்குமார் – இலங்கையில் எடுத்த புகைப்படங்களில் மென்மையும் மின்னலும்!

 *வரலட்சுமி சரத்குமார் – இலங்கையில் எடுத்த புகைப்படங்களில் மென்மையும் மின்னலும்!

அழகு, ஆற்றல் மற்றும் தனித்துவ திறமையின் சின்னமாக ஜொலிக்கிறார்!*











நடிகை வரலட்சுமி சரத்குமார், இலங்கையின் பிரமாண்டமான Cinnamon Life – City of Dreams இடத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் தனக்கே உரிய சீரான அழகையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். புகைப்படக் கலைஞர் கேசரா எடுத்த இந்த போட்டோக்கள், 'கருப்பு வெள்ளை' மற்றும் 'பேஸ்டல்' நிறங்களில் வரலட்சுமியின் இயல்பான பிம்பத்தையும், தன்னம்பிக்கையையும் அழகாகப் பதிவு செய்கின்றன. (Instagram: @kesara_art)


மெல்லிய நிறங்களில் கட்டமைக்கப்பட்ட ஆடைகளில் தோன்றும் அவர், சினிமாவின் ஆழத்தையும், எக்காலத்திலும் மரையாத ஃபேஷனையும் கலந்து சுமந்திருக்கிறார். “கம்பீரமாக இரு , ஒவ்வொரு புகைப்படமும் ” எனும் அவரது விளக்கம், வெறும் வார்த்தையல்ல – திரைத்துறையிலும், வாழ்க்கையிலும் அவர் கட்டியெடுத்த தனி அடையாளத்தின் பிரதிபலிப்பாகும்.


‘The Verdict’ போன்ற படங்களில் அவரின் அடக்கமும் ஆழமும் கலந்த நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. பல பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு, தன்னிச்சையான தேர்வுகளால் இன்று வரலட்சுமி, தனது தலைமுறையின் மிகவும் தைரியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.


தற்போது பல்வேறு பருவங்களில் உள்ள திரைப்படங்கள் மூலம், இன்னும் பல உயரங்களை அடையத் தயாராக இருக்கிறார். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கதைகளாக இருந்தாலும், உள்ளடக்கம் சார்ந்த படைப்பாக இருந்தாலும் – அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும் வகையில் இருக்கும்.


இந்த போட்டோஷூட் வெறும் ஃபேஷனுக்காக மட்டுமல்ல , இது தனது திறமையையும், தன்மையையும் முழுமையாக புரிந்து கொண்ட ஒரு பெண்ணின் ஆளுமையை பதிவு செய்திருக்கும் அழகிய படம்.

No comments:

Post a Comment