Featured post

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும்

 கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம...

Friday, 2 May 2025

Loyola College Wins Turf Town Presents PORKKALAM Season 3

 *Loyola College Wins Turf Town Presents PORKKALAM Season 3*






Chennai, May’2025 - Loyola College Football Team triumphed over STEDS HCLF SFC with a 3-0 victory in the grand finale of Turf Town presents PORKKALAM Season 3 at Jawaharlal Nehru Stadium. The event was graced by notable dignitaries, including Dr. R. Ananda Kumar, IAS, and renowned filmmaker Pa. Ranjith.


*Tournament Highlights*


18 top teams from Tamil Nadu participated in the three-month-long tournament.

- The top four teams from each group advanced to the knockout rounds.

- Loyola College and STEDS HCLF SFC battled it out in the thrilling final.


*Esteemed Dignitaries at the Prize Distribution Ceremony*


The prize distribution ceremony was honored by the presence of:


1. *Mr. Navaneethan*, Managing Director of Motodoctor App

2. *Mr. Sandy*, Renowned Indian choreographer, dancer, and actor

3. *Ms. Kalyananthy Satchithanantham*, Member, Widows and Destitute Women Welfare Board, Government of Tamil Nadu


Their inspiring words and warm appreciation added to the celebration, acknowledging the teams' exceptional talent and sportsmanship.


*About PORKKALAM*


PORKKALAM is a flagship tournament by Football Makka, a football media and development initiative founded by Bernaud Thomson and Harrison James. The tournament aims to nurture and spotlight young talent from across Tamil Nadu, promoting grassroots football development.


*About Football Makka*


Football Makka is a Tamil Nadu-based initiative dedicated to promoting local footballing talent. Through PORKKALAM and other initiatives, it fosters community spirit, competition, and celebration of football.

கபளிஹரம் கதாநாயகன் தக்‌ஷன் விஜய், முருகா அசோக் உடன் இணைந்து,

 கபளிஹரம் கதாநாயகன் தக்‌ஷன் விஜய், முருகா அசோக் உடன் இணைந்து, கதாநாயகர்களாக நடிக்கும் படம் "I AM WAITING". 









மகிழ் புரொடக்சன்ஸ் C.பியூலா தயாரிப்பில், N.P.இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகிறது "I AM WAITING".


கசாப்பு கடை நடத்தி வரும் ஏழை குடும்பத்தில் பிறந்த அண்ணன், தங்கையை மையமாக வைத்து ஆக்‌ஷனுடன் உருவாகியுள்ள படம் "I AM WAITING".


ஹாலிவுட்டுக்கு இணையான சண்டை காட்சிகளில், மிகவும் ரிஸ்க் எடுத்து தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஆக்‌ஷன் ஹீரோ தக்‌ஷன் விஜய்!


அசோக், தக்‌ஷன் விஜய், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். 


N.P.இஸ்மாயில் இயக்கி உள்ளார். A.R.ரகுமான் சகோதரி A.R.ரெஹனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு K.K.சாதிக், எடிட்டிங் ராமர், கலை கார்த்திக், சீனு, சண்டை பயிற்சி கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரிக்கிறார் C.பியூலா மகிழ்.


படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது!


"I AM WAITING" என ரசிகர்கள் எதிர்பார்க்க, விரைவில் திரைக்கு வருகிறது!


@GovindarajPro

Dhanush- DSP break records with the Electrifying First Single Poyivaa Nanba from

 *Dhanush- DSP break records with the Electrifying First Single Poyivaa Nanba from Sekhar Kammula’s Bilingual Cinematic Spectacle Kuberaa*






Setting the stage for one of the most anticipated films of the year, the first single "Poyivaa Nanba" from the Tamil-Telugu bilingual Kuberaa has officially been released — and it’s already making waves! Sung by the multi-talented Dhanush with lyrics by acclaimed wordsmith Viveka and choreography by the energetic Shekar VJ, the song has struck a chord with fans across the globe, trending on YouTube within hours of its launch.


The music for Kuberaa is composed by the celebrated Devi Sri Prasad, a name synonymous with blockbuster soundtracks across South Indian cinema and Bollywood. With over 100 films under his belt and a career spanning 25 illustrious years, DSP’s powerful composition for "Poyivaa Nanba" reinforces his reputation as a true musical magician. The National Award-winning composer once again proves why he’s one of India’s most beloved artists.


Directed by the nationally acclaimed Sekhar Kammula, known for masterpieces like Dollar Dreams and Fidaa, Kuberaa promises to deliver a cinematic experience rich in emotion, storytelling, and star power. Following his National Film Award-winning debut, Kammula has become a household name for delivering authentic, heartfelt narratives — and Kuberaa is shaping up to be another jewel in his crown.


Boasting a stellar ensemble cast featuring Dhanush, Nagarjuna, Rashmika Mandanna,Jim Sarbh, and Dalip Tahil, Kuberaa is produced by Sunil Narang and Puskur Ram Mohan Rao under the banners of Sri Venkateswara Cinemas LLP and Amigos Creations Pvt. Ltd. The film is complemented by Niketh Bommi's captivating cinematography, Karthika Srinivas' sharp editing, and costumes designed by Kavya Sriram and Poorva Jain.


The electrifying response to "Poyivaa Nanba" is just the beginning. Fans are eagerly counting down the days to witness Kuberaa’s grandeur on the big screen.


*CAST:*

Dhanush

Nagarjuna 

Rashmika Mandanna 

Jim Sarbh

Dalip Tahil


*CREW:*

Producers: Sunil Narang, Puskur Ram Mohan Rao  

Director: Sekhar Kammula  

Music: Devi Sri Prasad  

Cinematography: Niketh Bommi  

Editing: Karthika Srinivas  

Costume Design: Kavya Sriram, Poorva Jain  

Produced by: Sri Venkateswara Cinemas LLP, Amigos Creations Pvt. Ltd.  

Public Relations: Riaz K Ahmed, Paras Riyaz

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்* 





ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன், ஜி.வி. பிரகாஷ் குமார், விநியோகஸ்தர் ஜி.என். அழகர்சாமி, ஃபைனான்சியர் பதம், இயக்குநர் திருமலை, தயாரிப்பாளர் ராஜராஜன், ஒளிப்பதிவாளர் பிரமோத், இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் படத்தை ஜூன் மாதம் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்தவர்களை தயாரிப்பாளர் சரவணன் மற்றும் இயக்குநர் சண்முகம் முத்துசாமி வரவேற்றனர். 


'அடங்காதே' ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இன்றைய அரசியலை விறுவிறுப்பாக இப்படம் பேசுகிறது. சுரபி நாயகியாக நடித்துள்ள 'அடங்காதே' படத்தில் பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பு மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். 


அனைத்திற்கும் முத்தாய்ப்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். 


'அடங்காதே' குறித்து பேசிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி, "இது ஒரு அரசியல் திரில்லர் ஆகும். சமகால அரசியல் குறித்து இப்படம் பரபரப்பாக விவரிக்கிறது. இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் மிரட்டியுள்ளனர். கதையில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு மிக்க நன்றி," என்று கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், "திருச்சியில் ஆரம்பிக்கும் கதை காசி வரை நீள்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள சூழ்நிலையில் வரும் ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி," என்று தெரிவித்தார்.


ஜி.வி. பிரகாஷ் குமாரே 'அடங்காதே' திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை பி.கே. வர்மா கவனிக்க, டி. சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கத்திற்கு ஏ.ஆர். மோகனும், சண்டைப் பயிற்சிக்கு ராஜசேகரும், நடன இயக்கத்திற்கு தினேஷும், வடிவமைப்புக்கு 24 ஏஎம் டியூனி ஜானும் பொறுப்பேற்றுள்ளனர். பாடல் வரிகளை கபிலன், சாஹிதி, அருண்ராஜா காமராஜ், உமாதேவி, பார்வதி மற்றும் சிவகங்கா எழுத, உடைகளை சுஜித் வடிவமைத்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எம். செந்தில்; நிர்வாகத் தயாரிப்பு: எம். சுரேஷ் ராஜா, டி, ரகுநாதன்; ஸ்டில்ஸ்: தேனி முருகன்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.


***

Thursday, 1 May 2025

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale- 

Announcement of Release Date.*


Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky Wanders Entertainment featuring actor Lingesh and London-based heroine Liya with  Kanja Karuppu,  this is a wonderful love story scheduled for release on May 9th.









Jayalakshmi has written and directed this film and it is her first film made with unfailing enthusiasm with  passion. Although this is her first film, she is a veteran in the film industry. The film is a soft, triangular love story set against the backdrop of the lives of fishermen.


Heroine Liya comes to India from London to study the culture of Tamil Nadu. She falls in love with Lingesh, a young fisherman. But Lingesh is already engaged to his maternal uncle's daughter. Did their love come true despite obstacles? Did the lovers unite? The story of the film is about these aspects.


Lingesh, who has acted in the films as Kabali and Pariyerum Perumal, has played the lead role in the film. London-based British actress Leah has played the female lead. This is her first film in Tamil... However, Leah has given a great performance due to her passion... Actress Divya has played the second female lead. Debutante actor Katpadi Rajan has played the villain. Although this is his first film, he has really handled his character as a villain in a realistic on screen. He is certain to get a lot of opportunities in the film industry. Along with them, Madhusudhanan, Maran, Kanja Karuppu, Siddha Darshan, Senthamizh have played important roles.


The shooting of the film is complete..The first look and trailer of the film have been released and have been well received...The film will be released on May 9th across Tamil Nadu...


Technical Team 


Production - Sky Wanders Entertainment


Producer - Jayalakshmi


Executive Producer - Katpadi Rajan


Written, directed by Jayalakshmi


Cinematography - Tony John of Moodarkudam fame


Music - Sandy Sandellow


Editing - Thani Oruvan fame Gopi Krishna


Songs - Kabilan, Chanduru, Jayalakshmi


Sung by - Swetha Mohan, Sainthavi, Sridhar Sena, Dilip Varman (Malaysia), Anitha Sheikh


Public Relations - Velu

Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி

 *Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா மற்றும் கஞ்சா கருப்பு நடிப்பில், அருமையான காதல் கதையாக, என் காதலே திரைப்படம்...மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.*









திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், தனது முதல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில்  ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. 


லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி  அவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை. 


கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்த லிங்கேஷ்,  இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா நாயகியாக நடித்துள்ளார். இது தமிழில் இவருக்கு முதல் திரைப்படம்... இருந்தாலும் தனது ஆர்வத்தினால் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார் லியா....நடிகை திவ்யா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். அறிமுக நடிகர்  காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார்.இவருக்கும் இது முதல் திரைப்படம் இருந்தாலும் திரையில் நிஜ வில்லனாக மிரட்டியுள்ளார்.. திரைத்துறையில் இவருக்கு அதிக வாய்ப்பு காத்துகொண்டிருக்கிறது..  இவர்களுடன் மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக  முடிந்த நிலையில்..இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர் வெளியாகி  ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது...தமிழகம் முழுவதும் மே 9 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது...


தொழில் நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு - Sky wanders Entertainment


தயாரிப்பாளர் - ஜெயலட்சுமி


நிர்வாக தயாரிப்பாளர் - காட்பாடி ராஜன்


எழுத்து, இயக்கம் - ஜெயலட்சுமி 


ஒளிப்பதிவு - மூடர்கூடம் புகழ் டோனி ஜான்


இசை - சாண்டி சாண்டெல்லோ


எடிட்டிங் - தனி ஒருவன் படப்புகழ் கோபி கிருஷ்ணா 


பாடல்கள் - கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி 


பாடியவர்கள் - ஸ்வேதா மோகன், சைந்தவி, ஶ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ), அனிதா ஷேக்


மக்கள் தொடர்பு - வேலு

M/s. வெர்டிகிள் லா சினிமாஸ் & ட்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பில், குழந்தை

 M/s. வெர்டிகிள் லா சினிமாஸ் & ட்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பில், குழந்தை வேலப்பன் இயக்கத்தில் குழந்தை வேலப்பன், நர்மதா பாலு மற்றும் கவிதாபாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஷார்ட் வெர்டிகிள் வெப்சீரிஸ் 'யுகம்'. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 







வசனகர்த்தா ராஜேஷ் கண்ணா, "இந்தக்கதை ஒரு புதிய முயற்சி. உண்மையான குடும்பப்படம் இதுதான். புது உலகத்தை இந்தக்கதை காட்டும். உங்கள் ஆதரவு தேவை". 


எடிட்டர் சாபு, "சினிமாவில் நான் எடிட்டர் ஆவேன் என்று நம்பிய முதல் மனிதர் குழந்தை வேலப்பன் தான். அந்தளவுக்கு எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கு. வெர்டிகிளாக படம் செய்யவதற்கான ஸ்கிரிப்ட் இது. பல சவால்களைக் கடந்துதான் படமாக்கி இருக்கிறோம். குழந்தை வேலப்பன் வெற்றி பெற வாழ்த்துக்கள்!".


இசையமைப்பாளர் ஜோவன், "குழந்தை வேலப்பன் வேலை செய்வதற்கு எளிதான இயக்குநர். வெர்டிகிள் சினிமா எனும்போது திரையில் முழுதும் வராதோ என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால், அந்த எண்ணம் வராத அளவுக்கு கதை உங்களை கட்டிப்போடும்".


இசையமைப்பாளர் மெல்வின், “எங்க எல்லாருடைய சேர்ந்த உழைப்பு தான் இந்த யுகம், சீரிஸ் டீம் வொர்க்தான். குழந்தை வேலப்பன் தெளிவான இயக்குநர். கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்".


இயக்குநர் குழந்தை வேலப்பன் மனைவி, நடிகை நர்மதா, "அவருடன் பல வருடங்களாக பயணித்து வருகிறேன். அவருடைய தோல்விகளைப் பார்த்திருக்கிறேன். இருவரும் சேர்ந்து வெற்றி கொடுக்கலாம் என்று உருவாக்கிய கதைதான் இது. என்னை விட அவரது நண்பர்கள் தான் அவருக்கு நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார்கள். நீங்களும் கதைக்கு சப்போர்ட் செய்யுங்க".


நடிகர் குரு சோமசுந்தரம், "இந்த கதையை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் பார்க்க ஆரம்பித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டு நடிகர்கள் ஒரே லொகேஷன் வைத்து படம் எடுப்பது கடினமான விஷயம். இந்தக் கதையை வெர்டிகிளாக புது முயற்சியாக கொடுத்துள்ளனர். கலையில் வெற்றி, தோல்வி என்பதே கிடையாது. அதில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதை பார்ப்பதற்கான களமும் அதிகமாகியுள்ளது. அதனால் வெற்றியை மட்டுமே நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்பதில்லை" என்றார். 


மில்லினியம் மூவிஸ் டத்தோ சிவம், " இந்த புது முயற்சிக்கு ஊக்குவித்த தயாரிப்பாளருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த கதை நிச்சயம் வெற்றி பெறும்".


ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், " வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான். ஆனால், இந்த கதையை ஒரு வீட்டின் ஜன்னலில் இருந்து பார்ப்பது போல வெர்ட்டிகிளாக இருந்தது. சினிமாவில் நிறைய புது விஷயங்களை செய்யலாம் என்பதற்கான சான்று தான் இந்த கதை. குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்".


நடிகர் ஹரிகிருஷ்ணன், " குழந்தை வேலப்பன் சாருடன் பணிபுரிய வேண்டுமென கேட்டுக் கொண்டே இருப்பேன். ஒருநாள் அவர் இந்த கதையை வெர்டிக்கலாக எடுத்து இருக்கிறேன் என்று என்னை கூப்பிட்டு காண்பித்தார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்".


இயக்குநர் நளன் குமாரசாமி, " வெர்டிகிள் சினிமா என்பதை கேட்கும் பொழுது புதுமையானதாக இருந்தது. இதுவரை நாம் வைத்த கோணங்கள் இல்லாவற்றையும் மாற்றி எடுக்க வேண்டும் என்பதே சவாலான ஒரு விஷயம்தான். இப்போது எல்லோருமே மொபைல் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதனால், சினிமாவில் இது ஒரு புது தொடக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற வெர்டிகிள் கதைகள் அதிகம் எடுக்கப்படலாம். 'யுகம்' குழுவினருக்கு வாழ்த்துக்கள் ".


இயக்குநர், நடிகர் குழந்தை வேலப்பன், " இனிவரும் காலத்தில் தலைமுறையினருக்கு மொபைலை திருப்புவதற்கு கூட சோம்பேறித்தனமாக இருக்கும் அந்த சோம்பேறித்தனத்தை எப்படி காசாக்கலாம் என்பதற்கான கான்செப்ட் தான் இந்த வெட்டிகள் ஐடியா, என்று சமீபத்தில் நான் கலந்து கொண்ட கான்ஸ் திரைபட விழாவில் வெர்டிகள் சினிமா வருங்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என ஒரு கலந்துரையாடல் நடந்தது, அதில் கலந்து கொண்டது தான் இந்த வெப் சீரிஸ் எடுக்க காரணமாக அமைந்தது. எந்த பார்மேட்யாக இருந்தாலும் கதை சொல்லும் விதம் தான் அதை ரசிப்பு தன்மைகுள் கொண்டு செல்லும்,  ஆரம்பத்தில் இந்த கதையை நான் சொல்லும் பொழுது பலருக்கும் புரியவில்லை. ஆனால் அதை எழுதிக் கொண்டு போய் கொடுத்த பொழுது புரிந்து கொண்டு உற்சாகப்படுத்தினார்கள்.படம் எடுக்கும் சில சவால்கள் காத்திருந்தது, அதை புரிந்துகொண்டு அதற்காக கேமராமேன் சரவணன்ராமசாம சில மாற்று முறைகள் கையாண்டு சிலவற்றை கற்றுக்கொண்டே மொத்த குழுவும் சேர்ந்து உழைத்து படம் எடுத்து முடித்தோம். உலகம் முழுவதும் வெர்டிகள் சினிமாவுகாக நடக்கும் திரைப்பட விழாவிற்கும் அனுப்பி வைத்தோம். அதில், டொரொண்டோ மற்றும் இத்தாலியில் சிறந்த வெர்டிகள் படம் மற்றும் இந்தப் படத்தில் நடித்ததற்காக என் மனைவிக்கு சிறந்த நடிகைகான விருதும் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. அதன் தொடர்ச்சியாக வெர்டிகள் லா சினிமாஸ் என்ற youtube சேனல் ஆரம்பித்து ‘யுகம்’ வெப் சீரிஸ்யாக வெளியிட்டுள்ளோம், அதில் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில்  பார்க்கலாம், நிச்சியம் பார்வையாளர்களின் ரசிப்பு தன்மையை அடுத்த கட்டத்துக்கும் மாற்றும் என்ற நம்பிக்கையுள்ளது. உங்கள் அனைவரின் ஆதர்வும் நிச்சயம் தேவை" என்றார்.

Hit 3 Movie Review

Hit 3 Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம hit part 3 படத்தோட review அ தான் பாக்க போறோம்.  telugu ல hit படத்தோட series க்கு fan அ இருக்கறவங்க ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருந்த படம்னே சொல்லலாம். முதல் ரெண்டு part க்கும் மக்கள் கிட்ட இருந்து நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது அதோட ரெண்டு படங்களும் box office hit தான். இந்த ரெண்டு படங்களும் crime investigation story தான். இந்த முதல் ரெண்டு படங்களை பாக்களான கண்டிப்பா போய் பாருங்க ஏன்னா அவ்ளோ interesting அ இருக்கும். என்னதான் இது தெலுகு படமா இருந்தாலும் tamil , மலையாளம் , hindi , kannanda ளையும்  dubbed  version ல release  ஆயிருக்கு. 
Hit Movie Video Review: https://www.youtube.com/watch?v=cCOeeEE01zY


இந்த படத்துல Nani, Srinidhi Shetty, Prateik Babbar, Surya Srinivas, Rao Ramesh, Samuthirakani, Adil Pala, Maganti Srinath னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.Dasara, Hi Nanna, and Saripodhaa Sanivaaram னு தொடர்ந்து hit குடுத்த nani மறுபடியும் sailesh kolanu ஓட சேந்து இந்த படத்தை குடுத்திருக்காரு. HIT க்கு ful form என்னென்ன Homicide Intervention Team 

சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். Homicide Intervention Team ல வேலை பாக்குற arjun அ நடிச்சிருக்காரு nani . இவருக்கு கோவம் செமயா வரும். இவங்க இப்போ jammu and kashmir ல இருக்காரு. அங்க தான் ஒரு murder case நடந்திருக்கு அதா solve பண்ணுறாரு nani யும் அவரோட team மும் . இதை investigate பண்ணும் போது தான் இதே மாதிரியான pattern ல நெறய இடங்கள் ல கொலை நடந்திருக்கு னு தெரிய வருது. இந்த கொலையா யாரு பண்ணுற? இந்த கொலையா ஏன் பண்ணுறாங்க? arjun இந்த case அ எப்படி investigate பண்ணி கொலைகாரனை கண்டுபிடிக்குறாரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

நானி ஓட நடிப்பு செமயா இருந்தது. ஒரு sharp ஆனா police officer அ investigate பண்ணற விதம் ல நல்ல இருந்தது. பாக்குறதுக்கு rough and tough அ இருந்தாலும் intense ஆனா scene ல comedy அடிக்கற விதமும் எதார்த்தமா இருந்தது னு தான் சொல்லணும். srinidhi shetty தான் nani க்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. இவங்களோட romantic portion யும் cute அ இருந்தது. pretik babar தான் இந்த படத்தோட villain . கதைக்கு ஏத்த மாதிரி பயங்கரமான villain அ தான் நடிச்சிருக்காரு. HIT team ஓட chief அ நடிச்சிருக்க rao ramesh ஓட scenes கம்மியா இருந்தாலும் ஒரு strong ஆனா person அ நடிச்சிருக்காரு. அதோட ரெண்டு cameo roles யும் வராங்க. கண்டிப்பா பாக்குற audience க்கு surprising அ இருக்கும். 

mickey ஜே meyers ஓட bgm super அ இருந்தாலும் second half ல வர bgm தான் அட்டகாசமா இருந்தது. sanu varghese ஓட cinematography colourful அ இருந்தது. jammu kashmir ஓட இடங்களை அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. அதுவும் second half ல வர fight scenes லாம் ரொம்ப பக்கவா எடுத்திருக்காரு. 

இந்த படத்துல violence க்கு பஞ்சமே இல்ல. இந்த படத்துக்கு A certificate குடுத்துக்கு இதுவும் ஒரு காரணம். nani ஓட அதிரடியான performance director ஓட interesting ஆனா கதைக்களம் HIT part 3 மக்களுக்கு பிடிச்ச மாதிரி super அ கொண்டு வந்திருக்காங்க. இதுவும் must watch னு தான் சொல்லுவேன். HIT series fans க்கு கண்டிப்பா இந்த படம் ரொம்ப பிடிக்கும். உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Retro Movie Review

Retro Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம retro படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை karthik subburaj தான் இயக்கி இருக்காரு. இந்த படத்துல  pooja hegde , jayaram , joju george , karunakaran , nasar , prakash raj , singampuli னு பலர் நடிச்சிருக்காங்க. 


Retro Movie Video Review: https://www.youtube.com/watch?v=7xa2Imes2X0

இந்த படம் சூர்யா ஓட 44 வது படம். என்னதான் surya ஓட படமான kanguva க்கு mixed review மக்கள் கிட்ட இருந்து கிடைச்சாலும், இந்த படம் எப்படி இருக்கும் னு நெறய பேரு expectation ஓட காத்துகிட்டு இருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்துல இருந்து வந்த kanima song social media ல viral அ போயிடு இருக்கு. சோ வாங்க இன்னிக்கு release ஆனா retro படத்தோட கதை என்னனு பாக்கலாம். 


paarivel kannan  அ நடிச்சிருக்க surya ஒரு gangster அ இருக்காரு. இவரோட wife rukmini அ நடிச்சிருக்க pooja hegde கிட்ட அடிதடி க்கு லாம் போக மாட்டேன் னு promise பண்ணி அமைதியா life அ lead பண்ணிட்டுருக்காரு. கடைசில இவரோட பழைய பகை ஒன்னு தொறத்திட்டு வருது, அதுல இருந்து இவரோட wife அ காப்பாத்தி ஆகணும். அது என்ன பிரச்சனை ? தன்னோட wife அ காப்பாத்துறாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


suriya ஓட நடிப்பு தான் பிரமாதமா இருந்தது. past and present னு ரெண்டு விதமான getup ல வர்ரது பக்கவா இருந்தது. ஒரு பக்கம் இந்த அடிதடிய விட்டு வெளில வந்து நிம்மதியா இருக்கணும் ன்ற ஆசை இன்னொரு பக்கம் பழைய பகையை ஒழிக்கணும்  ன்ற வெறி னு ரொம்ப அழகா balance பண்ணி நடிச்சிருக்காரு. pooja hegde இந்த படத்துல ரொம்ப natural அ இருக்காங்க. இவங்க நடிப்பும் ரொம்ப எதார்த்தமா surya க்கு ஈடு குடுத்து நடிச்சிருக்காங்க. இவங்க நடிச்ச படங்களை இந்த படம் best னு சொல்லலம். மத்த supporting actors அ நடிச்சிருக்க Jayaram, Joju George, Prakash Raj, and Nassar,ஓட portions லாம் அட்டகாசமா இருந்தது. 


karthik subburaj ஓட direction செமயா இருந்தது. ஒரு emotional ஆனா கதைக்களம் அதோட super அ chereograph பண்ண action sequences னு mass ஆன படத்தை audience க்கு குடுத்திருக்காங்க. shreyas krishna ஓட cinematography இந்த படத்தை retro அ look அ இருக்கட்டும் present look அ இருக்கட்டும் ரெண்டுமே super அ camera ல பதிவு பண்ணிருக்காரு. visuals எல்லாமே ரொம்ப colourful அ இருந்தது. sandhosh narayanan ஓட music அ பத்தி சொல்லவே வேண்டாம். அவரோட music and bgm இந்த படத்தை இன்னொரு level க்கு எடுத்துட்டு போயிருக்கு னு தான் சொல்லணும். 


action ஒரு பக்கம் emotions ஒரு பக்கம் னு super ஆனா balance வந்திருக்கு retro . ஒரு energetic ஆனா surya வை இந்த படத்துல பாக்க முடியுது னு சொல்லலாம். surya ஓட career ல இந்த படம் முக்கியமானதா இருக்கும் ன்றத்துல எந்த சந்தேகமும் இல்ல. must watch னு தான் சொல்லவேன். இந்த படத்தோட visuals , action scenes , bgm க்காகவே theatre ல போய் பாக்குறதுக்கு சூப்பரா இருக்கும். கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.