Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Monday, 10 April 2023

நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட 'எல். ஜி. எம்' படத்தின் ஃபர்ஸ்ட்

 *நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட 'எல். ஜி. எம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*


இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான 'எல்.ஜி. எம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை எம். எஸ் தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 



இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'எல். ஜி. எம்'. இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 


ஃபில் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வரும் இப்படத்தின் தயாரிப்பாளரான விகாஸ் ஹசிஜா பேசுகையில், '' 'எல். ஜி. எம்' சிறப்பாக உருவாகி வருகிறது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பின்னணி வேலைகளைத் தொடங்கவிருக்கிறோம். தமிழ் திரையுலகில் எங்களின் சிறப்பான பயணம் தொடங்கி இருக்கிறது. மேலும் இது நல்ல அனுபவங்களையும் வழங்கி இருக்கிறது.'' என்றார்.


படத்தின் படைப்புத்திறன் நிர்வாக தலைவரான பிரியன்சு சோப்ரா பேசுகையில், '' எல் ஜி எம் புதுமையான உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் பல ஆச்சரியமளிக்கும் விசயங்கள் இடம்பெற்றிருக்கிறது. திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர்களின் முழுமையான பங்களிப்புடன் இந்த படைப்பு உருவாகி வருகிறது. நேர்த்தியாகவும், தோழமையுடனும் தயாராகி வரும் இதனை நாங்கள் மிகவும் ரசிக்கிறோம்'' என்றார்.

No comments:

Post a Comment