Featured post

Vattakanal Movie Review

Vattakanal Review, Vattakhanal Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vattakhanal படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழ...

Thursday, 14 February 2019

நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படம்  " பெட்டிக்கடை "
இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார்இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார்.
கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதா நாயகியாக நடிக்கிறார்..
மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன்திருமுருகன்செந்தி ஆர்.வி.உதயகுமார்ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்

ஒளிப்பதிவு  -   அருள்சீனிவாஸ்
இசை  -   மரியா மனோகர்
பாடல்கள்  -   நா.முத்துக்குமார்,சினேகன்,  இசக்கிகார்வண்ணன் மடத்தமிழ் வேந்தன்
நடனம்  -   வின்செண்ட் விமல் 
ஸ்டண்ட்  -   மிராக்கிள் மைக்கேல்
எடிட்டிங்  -  சுரேஷ் அர்ஸ்
கலை  -   முருகன் 
தயாரிப்பு மேற்பார்வை    -   செல்வம்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் இசக்கி கார்வண்ணன்.
இந்த படத்தில்  அமரர் நா.முத்துகுமார் எழுதிய 
"சுடல மாட சாமிக்கிட்ட 
என்ன வேண்டிக்கிட்ட 
சொல்லு புள்ள " 
என்ற பாடல் யூ டியூப் ரசிகர்களால் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பாராட்டு மழையால்  கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நிறைய தேசிய விருதுகளை அமரர் நா.முத்துகுமார் பெற்றிருந்தாலும் அவருக்கு  இந்த பாடலுக்காகவும் தேசிய விருது கிடைக்கும் என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.
படம் வரும் 22ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.











No comments:

Post a Comment