Featured post

Thudarum Movie Review

Thudarum Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மலையாள படமான thodarum படத்தோட review அ தான் பாக்க போறோம். இப்போ லாம்  mohanlal ஓட படங்கள் நாளே fa...

Friday, 7 April 2023

வெட்டிங் வோவ் வி கனெக்ட் 2023 - ஆசியாவின் பிரமாண்டமான சர்வதேச

 *வெட்டிங் வோவ் வி கனெக்ட் 2023 - ஆசியாவின் பிரமாண்டமான சர்வதேச தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் மூன்று நாள் மாநாடு மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்றது.*


இந்தியாவில் திருமணம் செய்ய ஏற்ற சுற்றுலாதலங்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாடு, இம்முறை மாமல்லபுரத்தை பிராதனப்படுத்தும் நோக்கில் தொடங்கியது.



ஆடம்பரங்கள் நிறைந்த ரேடிசன் ப்ளூ ரிசார்ட் டெம்பிள் பே உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட நட்சத்திர  மற்றும் ஓய்வு விடுதிகள் நிறைந்த மாமல்லபுரம் பாரம்பரிய அழகுடன்  கற்பனை மிகுந்த இடமாக விளங்குகிறது.



தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் 2 ஆம் நாளான இன்று, தொழில் வல்லுநர்களின் முக்கிய உரைகள், குழு விவாதங்கள், பட்டறைகள் மற்றும் நெட்வொர்க்கிங் அமர்வுகள் உட்பட பலதரப்பட்ட செயல்பாடுகள் இடம்பெற்றன.


பங்கேற்பாளர்கள் சப்ளையர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களுடன் தொடர்பு கொள்ளவும், சமீபத்திய தொழில் முன்னேற்றங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறவும் வாய்ப்பைப் பெற்றனர்.



சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், ஜி. ஆர்.டி குழும தலைமை செயல் அதிகாரி விக்ரம் கோட்டா, வெட்டிங் வோவ் கனெக்ட் அமைப்பின் தலைவர் ரிதுராஜ் கண்ணா, தலைமை செயல் அதிகாரி தட்சிணா மூர்த்தி, இயக்குனர் நந்தினி மற்றும்

 பிரபல ஒப்பனை  கலைஞர் நர்மதா சோனி, உள்ளிட்டோர் 18 மணிநேர மாஸ்டர் கிளாஸ்களில் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினர்.  


பிரதமர்  நரேந்திர மோடி, திருமணங்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக தென்னிந்தியாவும், திருமண சுற்றுலாவின் வளர்ச்சியும் பற்றி உரையாடியதன் மையக்கருவை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.   இந்தியாவை மையமாகக் கொண்டு உலகெங்கிலும் உள்ள திருமணத் துறையில் வளர்ச்சி மற்றும் புதுமைகளை இயக்க உதவுவதை  இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டது.


இந்த மாநாட்டில் திருமண தொழில்முறை சார்ந்த 50 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment