*ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் மற்றும் சுகுமாரின் ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் ‘Where is Pushpa’ க்ளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது*
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனின் ’புஷ்பா2’ சீக்வல் திரைப்படம், தெலுங்கு மற்றும் இந்தியா முழுவதும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதற்குக் காரணம் முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் மாபெரும் வெற்றி. அல்லு அர்ஜூனின் கதாபாத்திரம், வசனங்கள் போன்றவை பல பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பல ரசிகர்களையும் கவர்ந்தது. தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இதற்கிடையில், ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் சுகுமார் மற்றும் அணியினர் ‘புஷ்பா2’ படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க விரும்பினர். அதன்படி, இன்று படத்தில் இருந்து சிறிய வீடியோ க்ளிம்ப்ஸை ரசிகர்களுக்காகவும் பார்வையாளர்களுக்காகவும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ, புஷ்பா திருப்பதி ஜெயிலில் இருந்து புல்லட் காயங்களுடன் தப்பிவிட்டதாக தலைப்பு செய்தியுடன் தொடங்குகிறது. மேலும், ’புஷ்பா எங்கே?’ (Where is Pushpa?) என்ற கேள்வியும் ஆர்வத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது.
இந்த க்ளிம்ப்ஸ் கட் ஆர்வமூட்டுவதாகவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கான்செப்ட் டீசர் ஏப்ரல் 7 அன்று மாலை 04:05 மணிக்கு ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. படக்குழுவிடம் இருந்து மிகப்பெரிய ஒன்று வருகிறது என்பதை தற்போது ரசிகர்கள் யூகித்துள்ளனர்.
‘புஷ்பா2’ படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். பகத் ஃபாசில், அனசுயா, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார்.
No comments:
Post a Comment