தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தமிழ் போற்றும் காணொளி வெளியிட்ட "கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படக்குழு !!
தமிழைப் போற்றி புரொமோ வீடியோ வெளியிட்ட "கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படக்குழு !!
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத காவிய படைப்புகளை உருவாக்கிய தங்கர்பச்சான் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமான படைப்பாக உருவாகி வருகிறது "கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம்.
இப்படத்தின் இசை வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் தற்போது தமிழ் புத்தாண்டை ஒட்டி ஒரு அழகான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
30 விநாடிகள் மட்டுமே கொண்ட இந்த காணொளியில் படத்தின் சிறு காட்சியை படக்குழு வெளிப்படுத்தி இருக்கிறது. அந்த காணொளியில் கடை முதலாளியாக அமர்ந்திருக்கும் யோகிபாபுவிடம் ஒருவர் வந்து வேலை கேட்கிறார். உன் பெயரென்ன என யோகி பாபு அவரிடம் கேட்க , அவரோ நமஸ்காரம் என்கிறார், அவரைப் பார்க்கும் யோகிபாபு இனிமே உன் பெயர் வணக்கம் என்கிறார்.
மிக எளிமையான காணொளியில் தற்கால பிரச்சனையையும், இப்போது சமூகத்தில் நடந்து வரும் இந்தி சமஸ்கிருத பிரச்சனையையும் அழகாக சொல்கிறது. தமிழ் நாட்டில் தமிழே முதன்மை என்பதையும் இந்த காணொளி அழகாக சொல்கிறது.
இந்த காணொளி இணையமெங்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் பாரதிராஜா ஓய்வு பெற்ற நீதிபதியாக நடித்துள்ளார். மகனாக இயக்குநர் கௌதம் மேனனும் நடிக்க,
மகளாக அதிதி பாலன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விரைவில் படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகுமென தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.
* நடிகர்கள்* :-
பாரதிராஜா,
அதிதி பாலன்,
கௌதம் வாசுதேவ் மேனன்,
யோகி பாபு,
மஹானா,
சஞ்சீவி,
எஸ்.ஏ.சந்திர சேகர்,
ஆர்.வி.உத்ய குமார்
பிரமிட் நடராஜன்,
டெல்லி கணேஷ் மற்றும் பலர்.
*தொழில்நுட்ப வல்லுநர்கள்:-*
இயக்குநர்: தங்கர் பச்சான்
இசை: GV.பிரகாஷ்
பாடல் வரிகள்: வைரமுத்து
ஒளிப்பதிவாளர்: N.K.ஏகாம்பரம்
எடிட்டிங்: பி.லெனின்
கலை இயக்குனர்: மைக்கேல்
செட் டிசைன்: முத்துராஜ்
நிர்வாக தயாரிப்பாளர்: வராகன்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு: VAU Media
தயாரிப்பாளர்: துரை வீரசக்தி.
No comments:
Post a Comment