Featured post

Megastar Mammootty Visits the Location of Dulquer Salmaan’s Film ‘I Am Game

 Megastar Mammootty Visits the Location of Dulquer Salmaan’s Film ‘I Am Game’* Megastar Mammootty paid a visit to the location of "I Am...

Monday, 10 April 2023

ஜெயின் சோஷியல் குரூப் இன்டர்நேஷனல் ஃபெடரேஷனின் சர்வதேச

 *ஜெயின் சோஷியல் குரூப் இன்டர்நேஷனல் ஃபெடரேஷனின் சர்வதேச தலைவராக  தமிழ்நாட்டிலிருந்து அமிஷ் தோஷி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.*


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியான ஹயாத் ரீஜென்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமிஷ் தோஷி பொறுப்பேற்றுக் கொண்டார். 




உலகின் மிகப்பெரிய ஜைன அமைப்புகளில் ஒன்றான  ஜெயின் சோஷியல் குரூப் இன்டர்நேஷனல் ஃபெடரேஷன்

ஒரு லட்சம் உறுப்பினர்களை எட்டியுள்ள நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் உறுப்பினர்கள் ஈர்க்க திட்டமிட்டுள்ளது.


 கடந்த 60 ஆண்டுகளில் 18 நாடுகளில் கிளைகளை உருவாக்கி  வேகமாக வளர்ந்து வரும் இந்த கூட்டமைப்பின் சர்வதேச தலைவராக சென்னையைச் சேர்ந்த அமிஷ் தோஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


 3 தலைமுறை வைர நகை நிறுவனமான வாடிலால் ஜூவல்சின் உரிமையாளரான இவர் தலைமையில் 2 ஆண்டுகள் உலகம் முழுவதும் பயணம் செய்து ஜெயின் சமூகக் குழுவில் மேலும் மேலும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கூட்டமைப்பு ஊக்குவிக்கும்.


தொழில் ஊக்குவிப்பு, மத்திய அரசின் பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ, இந்தியாவை பெருமைப்படுத்திய திறமைகளை வெகுமதி அளிப்பது மற்றும் அங்கீகரிப்பது, டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய புதிய திட்டங்களையும் கூட்டமைப்பு மேற்கொள்ளும். 


சென்னையில் 8 குழுக்கள், மதுரை மற்றும் கோவையில் தலா 1 குழு என தென்னிந்தியாவில் 18 குழுக்கள் இந்த கூட்டமைப்பில் உள்ளன. முன்னாள் கூட்டமைப்பு தலைவர்கள் லலித் ஷா, பங்கஜ் சங்வி, திலீப் ஷா மற்றும் வருங்கால தலைவர் பிரேன் ஷா ஆகியோர் ஆதரவுடன் பொறுப்பேற்றுள்ள அமிஷ் தோஷி இன்னொரு சாதனையையும் படைத்துள்ளார்.


 தமிழ்நாட்டில் இருந்து அறுபது ஆண்டு கால வரலாற்றில் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சர்வதேச தலைவர் இவர்.  தனது தந்தை கிரண் ஜோஷிக்கு பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவர் தேர்ந்தெடுக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

No comments:

Post a Comment