Featured post

Vaa Vaathiyar Movie Review

Vaa Vaathiyaar Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vaa vaathiyar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Nalan Kumar...

Thursday, 6 April 2023

ஆதி புருஷ்' படக் குழு வெளியிட்டிருக்கும்

 *'ஆதி புருஷ்' படக் குழு வெளியிட்டிருக்கும் பிரத்யேக போஸ்டர்*


*அனுமன் ஜெயந்தியை பிரத்யேக போஸ்டரை வெளியிட்டுக் கொண்டாடும் 'ஆதி புருஷ்' படக் குழு*


அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ராமபிரானின் தீவிர பக்தரான அனுமானின் பிரத்யேக போஸ்டரை 'ஆதி புருஷ்' பட தயாரிப்பாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.


ஏப்ரல் ஆறாம் தேதியான இன்று அனுமன் ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமபிரான் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருக்கும் ஸ்ரீ அனுமானின் வீரத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் 'ஆதி புருஷ்' படத்தில் நடிகர் தேவதத்தா நாகே தோன்றும் அனுமன் வேடத்திற்கான தெய்வீகம் ததும்பும் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.




வலிமை, விடா முயற்சி, விசுவாசம் ஆகியவற்றை கொண்டிருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் தயாரிப்பாளர்கள், இந்த திரைப்படத்தில் அனுமனாக நடித்திருக்கும் தேவதத்தா நாகே இடம்பெறும் போஸ்டரை வெளியிட்டனர். ராமபிரானுக்கு துணையாகவும், பாதுகாவலராகவும், அனுமனின் பக்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த புனிதமான அனுமன் ஜெயந்தியின் நன்னாளில் அவர்களது பக்தர்களுக்காக பட குழுவினர் இந்த பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். 


உலகம் முழுவதும் புகழ் பெற்ற 'அனுமன் சாலிசா' எனும் பக்தி பாடலில் இடம்பெற்றிருக்கும் '' வித்யாவான் குனி- மிகவும் புத்திசாலி. ராமபிரானுடன் நெருங்கி பழக ஆவலுடன் இருக்கிறான்'' என்ற வரிகளை இந்த தெய்வீகம் ததும்பும் போஸ்டர் நினைவூட்டுகிறது. 


இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங் ,சயீஃப் அலி கான், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை டி-சிரீஸ் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment