Featured post

Avatar: Fire and Ash Movie Re view

  Avatar: Fire and Ash Movie  Re view ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம avatar fire and ash படத்தோட review அ தான் பாக்க போறோம். james cameron இயக்க...

Monday, 10 April 2023

அமீர் & பாவனி ஜோடியாக நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம் இனிதே துவங்கியது

 அமீர் & பாவனி ஜோடியாக நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம் இனிதே துவங்கியது !! 


Sri Nalla Veerappasamy Production சார்பில், V. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் அமீர், பாவனி ஜோடி, நாயகன் நாயகியாக நடிக்கும் ரொமான்ஸ் காமெடி திரைப்படம், திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தை பிக்பாஸ் புகழ் அமீர் தானே எழுதி இயக்குகிறார். 


இன்று நடந்த இப்படத்தின் பூஜையில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் G.தனஞ்செயன், திண்டுக்கல் லியோனி, விஜய் ஆதிராஜ், நிரூப், பிரியங்கா, ஷாரிக், ரச்சிதா, கிஷோர்,சத்யா, ரியோ முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். 








பிக்பாஸ் மூலம் தமிழ்க மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமீர், பாவனி ஜோடி இப்போது வெள்ளித்திரையில் ஒன்றாக இணையவுள்ளார்கள். பிக்பாஸில் இருவரது ஜோடிப்பொருத்தமும் எல்லோராலும் பாரட்டப்பட நிலையில், சமீபத்தில் இந்த ஜோடி அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். நடன இயக்குநர் அமீரும், நடிகை பாவனியும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக வலம் வந்த நிலையில், தற்போது நாயகன் நாயகியாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்கள். 


முழுக்க முழுக்க ரொமான்ஸ் காமெடியாக உருவாகும் இப்படத்தினை நடன இயக்குநர் அமீர் தானே எழுதி இயக்குகிறார் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் தற்கால இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில்  ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகவுள்ளது. 


அமீர், பாவனி நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் மன்சூர் அலிகான், காயத்திரி ஜெயராம், சுரேஷ் சக்ரவர்த்தி, சாதனா, VTV கணேஷ், அலீனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 


இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு அழகான புரமோ வீடியோவுடன் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment