Featured post

*City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights

 *City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights* The Court of the Chief Judge, Cit...

Wednesday, 12 April 2023

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கால்பந்து

 சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் பயிற்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க உள்ளார்.



சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பள்ளியில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி தொடக்க விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.


இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.



கிரேட்கொல்ஸ் என்ற கால்பந்து பயிற்சி நிறுவனத்தால் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ. 8 லட்சம் திட்டமதிப்பீட்டில் முதற்கட்டமாக 60 மாணவ, மாணவிகளுக்கு 11 மாதங்களில் 80 நாட்களில் (வாரம் இரு முறை) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் பங்குபெறும் மாணவ மாணவிகளுக்கு, இலவசமாக கால்பந்து ஆடைகள் மற்றும் காலணிகள் வழங்கபடும்.


இத்திட்டம் முதல்கட்டமாக வடசென்னையில் சென்னை உயர்நிலைப்பள்ளி-நியூமார்க்கெட்பார்ம், மத்தியசென்னையில் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தென் சென்னையில்

சென்னை உயர்நிலைப்பள்ளி கோட்டூர், ஆகிய மூன்று பகுதிகளில் தொடங்க உள்ளது.


அது போல் கிரிக்கெட் பயிற்சி 12 மாதங்களில் 154 பயிற்சி நாட்களில் (வாரம் மூன்று முறை )அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி காலத்தில் மாணவர்கள் 22 நாட்கள்

போட்டிகளில் பங்குபெறுவார்.


இப்பயிற்சியில் பங்குபெறும் மாணவ மாணவிகளுக்கு, மட்டை பந்துகள், காலணிகள் மற்றும் அத்யாவசிய உபகரணங்கள் இலவசமாக வழங்கபடும்


இப்பயிற்சியை அளிக்கும் நிறுவனத்தின் பெயர் ஜெனரேஷன்

நெக்ஸ்ட்ஸ்போர்ட்ஸ் அகாடமி பிரைவேட் லிமிடெட் இந்நிறுவனம் இந்திய மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட்

வீரர் R. அஸ்வின் வழிக்காட்டுதலின்படி நடைபெற உள்ளது. 


ரூ 19 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சென்னை ஆண்கள் மேல்நிலைபள்ளி நுங்கம்பாக்கத்தில் மாணவர்களுக்கு பயிற்சிக்கு மேற்கொள்வதற்கான ஆறு பயிற்சி தளங்கள் நவீன முறையில் உருவாக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.



இந்த பயிற்சி திட்டத்தினை தொடங்கி வைத்து , மாணவர்களின் விளையாட்டு பயிற்சிக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினார். 


முன்னதாக நிகழ்ச்சி மேடையில் பேசிய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ,


பல நாட்களாக கிரிக்கெட் கற்றுத் தருவது என் ஆசையாக இருந்தது.


பொதுவாக விளையாட்டு பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான உபகரணங்கள் வாங்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இப்போது நம் விளையாட்டுத்துறை அமைச்சர் மூலம் நிறைவேறி உள்ளது.


இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.


மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பயிற்சி எடுத்து கிரிக்கெட் விளையாடி சி எஸ் கே அணிக்கு கூட எதிர்காலத்தில் விளையாடலாம் ஏன் பெண்கள் கிரிக்கெட் குழு உள்ளது அதிலும் விளையாடலாம்.


தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்,


90% மேல் பொதுத் தேர்வு விழுக்காடு சென்னை மாநகராட்சி பள்ளிகள் கொடுத்துள்ளன.


ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் தான் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றார்.


பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,


கடந்த 4 மாதங்களாக இந்த விளையாட்டு துறை அமைச்சர் பதவி கொடுத்ததில் இருந்து சென்னையில் நடக்கும் அனைத்து விளையாட்டு துறை நிகழ்ச்சியிலும் நான் தான் சிறப்பு  விருந்தினராக கலந்து கொள்கிறேன்.


இங்கு பெண் குழந்தைகள் அதிகம் உள்ளீர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும்.


கிரிக்கெட் வீரர் அஸ்வின் சி எஸ் கே அணிக்கு விளையாடவில்லை என்றாலும் இவர் விக்கெட் எடுத்தாலும் கை தட்டி ரசிப்போம். 


தமிழ்நாட்டுக்கு உள்ள சிறப்பு யாராக இருந்தாலும் சிறப்பான விளையாட்டு திறமை இருப்பவர்களை கைத்தட்டி ரசிப்போம்.


அஸ்வின் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து பயிற்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 


முன்னாள்  முதலமைச்சர் மு கருணாநிதி நூற்றாண்டு கொண்டாடத்தின் ஒரு பகுதியாக 42 கோடி செலவில் ஊராட்சிகளில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்படும் என்றார்.


தொடர்ந்து, விளையாட்டு மைதானத்திற்கு சென்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் பந்து வீச அமைச்சர் உதயநிதி பேட்டிங் செய்தது தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment