Featured post

Hombale Films and Prabhas all set to join forces for three mega films, set to

 *Hombale Films and Prabhas all set to join forces for three mega films, set to redefine entertainment on the big screens!*   In an unpreced...

Thursday 13 April 2023

Sony Pictures Entertainment India வழங்கும்

 Sony Pictures Entertainment India வழங்கும்

THE POPE’S EXORCIST

 

பேயோட்டுபவர்களின் தலைவர் என்று அழைக்கப்படும் வாடிகனைச் சேர்ந்த பேயோட்டியான பாதிரியார் கேப்ரியல் அமோர்த்தின் திறமையும், அனுபவங்களும் முதன்முறையாகத் திரையேறுகிறது. பாதிரியராக ஆஸ்கார் விருது வென்ற ரஸல் க்ரோவ் நடித்துள்ளார். பேய் வேட்டைக்காரன் என்று போற்றப்பட்ட பாதிரியார் கேப்ரியல், தீய சக்திக்கு எதிரான தனது போரில் 36 ஆண்டுகளாகத் தேவாலயத்திற்காக ஆயிரக்கணக்கான பேயோட்டுதல்களை நடத்தியுள்ளார். இரண்டு புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்திற்குத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று, ‘ஆன் எக்ஸார்சிஸ்ட் டெல்ஸ் ஹிஸ் ஸ்டோரி (An Exorcist Tells His Story)’; இரண்டாவது, ‘ஆன் எக்ஸார்சிஸ்ட்: மோர் ஸ்டோரீஸ் ஆஃப் ஃபாதர் கேப்ரியல் அமோர்த் An Exorcist: More Stories by Father. Gabriele Amorth)’. இது, ரஸல் க்ரோ நடிக்கும் முதல் திகில் படமென்பது குறிப்பிடத்தக்கது.




கதைச்சுருக்கம்- ஆவியால் பீடிக்கப்பட்ட ஒரு சிறுவனைக் காப்பாற்றும் பொறுப்பு பாதிரியார் கேப்ரியலிடம் வருகிறது. திகிலூட்டும் அந்த வழக்கு, பல நூற்றாண்டுகளாக வாடிகன் பேராலயத்தால் மறைக்கப்பட்டு வரும் ரகசியத்திற்கு இட்டுச் செல்கிறது. வலுவான மத நம்பிக்கை கொண்டவரும், தொழில்முறை பேயோட்டியுமான கேப்ரியல், வாட்டிகனின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடக்கும் ரகசியத்தின் பின்னால் உள்ள உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார். கதையின் ஓட்டத்தில், பல ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான விஷயங்கள் தோன்றுவதோடு மட்டுமல்லாமல், அதன் வீரியம் பெருகிய வண்ணம் உள்ளது.

 

CREDITS -

நடிகர்கள் - Daniel Zovatto, Alex Essoe & Franco Nero

ஒளிப்பதிவு - Khalid Mohtaseb

இசை - Jed Kursel

இயக்கம் - Julius Avery

வெளியீடு: Sony Pictures in English, Tamil, Telugu & Hindi on April 7th

No comments:

Post a Comment