Bloody Begger tamil movie review
ஹாய் மக்களே இன்னிக்கு release ஆகிருக்க்ற கவின் நடிப்பு ல வெளி வந்திருக்கிற bloody begger தான் பாக்க போறோம். இந்த படத்தை direct பண்ணிருக்கறது Sivabalan Muthukumar . இந்த படத்து மூலமா director அ அறிமுகம் ஆகுறாரு. இந்த படத்தை produce பண்ணிருக்கறது director nelson தான்.
https://youtu.be/8wa9xm68aho?si=e5skr_D5Vkw5PexB
https://youtu.be/y5t_7Es341M?si=SF3xf7NfqYdVYLoB
இந்த படத்தோட கதையை பாத்தோம்னா கவின் ஒரு சோம்பேறியான பிச்சைக்காரர் அ இருக்காரு. ஏதோ ஒரு வேகத்துல ஒரு பெரிய palace குள்ள இருக்கற விஷயங்களை அனுபவிக்கனும் னு யாருக்கும் தெரியமா உள்ள போய்டுறாரு. இந்த முடிவு னால அங்க ஏற்கனவே இருக்கறவங்களோட வலை ல சிக்கிடுறாரு. இந்த palace ல ஒரு பேய் வேற இருக்கு. இந்த பிரச்சனையா ரொம்ப comedy யா பேராசை, survival அ பத்தி பேசுற படமா பணக்காரன் ஏழை வித்யாசத்தை சொல்றத அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். மொத்தத்துல இது ஒரு dark காமெடி படம் னு தான் சொல்லணும் அதே சமயம் நம்மள யோசிக்கவும் வைக்குது.
திடுருனு பாத்தீங்கன்னா colin spray புனித நீர் அ மாறிடுது, heart attack அ வச்சு twist அ குடுக்கறாங்க, நண்பன் படத்துல வர மாதிரி இறந்தவனை science அ வச்சு உயிரோட கொண்டு வராங்க. இதெல்லாமே பாக்கறவங்களுக்கு logic அ இருக்கும் ஏன்னா இதுக்கு பின்னாடி இருக்கற reason அ சொல்லிடுறாரு டைரக்டர்.
கவின் அ கொஞ்ச innocent அ அதே சமயம் sarcastic அ தான் காமிக்கறாங்க. இவரை பாக்கும் போது Redin kinglsely ஓட mannersisms யும் இருக்கு. இந்த படத்துல Redin kinglsely யும் இருக்கறதுனால காமெடி க்கு பஞ்சமே இல்லனு தான் சொல்லணும். கவின் அ பாக்கும் போது அவரால பிச்சை எடுக்கற வேலை jolly அ இருக்குனு பிச்சை எடுக்கறாரு ன்ற மாதிரி தான் ஆரம்பத்துல காமிக்கறாங்க. அதுக்கு அப்புறமா இவரோட குட்டி குட்டி flashbacks அ காட்டுறாங்க. இதெல்லாம் கொஞ்சம் follow பண்றதுக்கு கஷ்டமா இருந்தாலும் story ஓட flow செமயா இருக்குனு தான் சொல்லணும். sudden அ பாத்தீங்கன்னா ஒரு love song வரும் அப்புறம் ஒரு சோகமான scene வரும் அதுல நம்ம மூழ்க்கிறதுக்குள்ள comedy scene வந்து நம்மள சிரிக்க வச்சுடுது.
டார்க் காமெடி னு பாக்கும் போது நெறய characters strong அ இருந்த தான் workout ஆகும். இந்த விஷயத்தை எடுத்த director sivabalan அழகா இந்த படத்தை கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். Kavin and Kingsley’ ஓட நடிப்பு இந்த படத்தோட வெற்றி க்கு காரணம் னு சொல்லலாம். குறிப்பா Sujith Sarang ஓட அந்த yellow colour palace தான் comedy க்கு பெரிய விஷயத்தை குடுத்திருக்கு. ஒரு சில scenes அ பாத்தீங்கன்னா video game ல வர்ரது மாதிரி இருக்கறதுனால நம்மள புரிஞ்சுக்க முடியுது.
கடைசில இந்த மாதிரி ஏடாகுடமான எல்லா scenes யும் கொண்டு வந்து ஒரு கட்டத்துல நிக்க வச்சு climax அ எடுத்துட்டு வரதும் செமயா இருந்துச்சு. கண்டிப்பா உங்களுக்கு sivabalan ஓட unique ஆனா கதையும் கவின் ஓட நடிப்பும் உங்களுக்கு பிடிக்கும். இந்த படத்தை மிஸ் பண்ணாம போய் பாருங்க. worth watching னு தான் சொல்லுவேன்.
No comments:
Post a Comment