Featured post

என் காதலே' சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்- இயக்குநர் ஜெயலட்சுமி

 *'என் காதலே' சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்- இயக்குநர் ஜெயலட்சுமி* *Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி ...

Friday, 4 April 2025

EMI Movie Review

 EMI  TAMIL MOVIE REVIEW 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம EMI ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். sadhasivam chinnaraj தான் இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி யும் இருக்காரு. இந்த படத்துல sadhasivam chinnaraj ,  sai dhanya , black pandi , aadhavan , perarasu னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 



EMI ன்றது கண்டிப்பா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம். வாழ்க்கையே அதா சுத்தி தான் ஓடுதுனே  சொல்லலாம். படத்தோட title க்கு ஏத்த மாதிரி அதிகமா செலவு பன்னுறதும், பணத்தை சேமிக்காம இருக்கறதுனால  எவ்ளோ பிரச்சனை வரும் ன்றதா காமிக்கிற விதமா இந்த படம் அமைச்சிருக்கு. பணத்தை smart அ சேமிக்கிறத பத்தி ஒரு social message அ மக்கள் க்கு எடுத்து சொல்லிருக்காங்க. படத்தோட ஹீரோவான சிவா தனக்கு பிடிச்ச பொண்ணு rosy அ impress பண்ணுறதுக்காக ஒரு idea வை யோசிச்சு வைக்கறாரு. rosy க்கு பிடிச்ச மாதிரி வசதியான பொருட்களை வாங்குறதுக்கு, bike , car னு எல்லாம் வாங்குறதுக்கு EMI அ  போடுறாரு. ஒரு கட்டத்துக்கு மேல வட்டி அதிகமா போயிட்டே இருக்கு அப்போ தான் இதெல்லாம் வாங்கும் போது easy அ இருந்தாலும் கடனை அடைக்கிறது கஷ்டம் னு புரிஞ்சுக்கறாரு. தெரியாம EMI ல போய் சிக்கிக்கிட்ட இவரு எப்படி இதுல இருந்து மீண்டு வராரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட மிக பெரிய plus point என்னனா ஒரு message அ  மட்டும் இல்லாம entertaining ஆவும் மக்கள் க்கு குடுத்திருக்காங்க. படத்தை பாக்குற audience கதையோட  easy அ connect ஆகிக்கிற மாதிரி dialouges எல்லாமே ரொம்ப எளிமையா,  superb அ இருந்தது. முக்கியமா siva ஓட character அ பாக்கும் போது,  நெறய பேருக்கு அவரோட situations ஓட relate பண்ணிக்க முடியும். sai dhanya - rosy character அ அற்புதமா  தன்னோட நடிப்பை வெளி படுத்தி இருந்தாங்க. rosy ஓட அப்பாவா நடிச்சிருந்த director perarasu ஓட நடிப்பும் செமயா இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட character அ  புரிஞ்சுகிட்டு நல்ல performance அ குடுத்திருக்காங்க. 


இந்த படத்துக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்குன்னா அதுக்கு காரணம் இதுல சொல்ல படுற விஷயம் இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கிறது. தர்காலிகமான சந்தோஷத்துக்காக வாழக்கையை EMI ன்ற பேருல பணயம் வைச்சுடாதீங்க னு அழகா எடுத்துசொல்லிருக்காங்க.  performance , கதைக்களம், social message காகவே உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்கலாம். கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment