KA MU KA PI review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம KA. MU. KA. PI ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Pushpanathan Arumugham இந்த படத்தோட கதையை எழுதி direct பண்ணிருக்காரு. Vignesh Ravi, Saranya Ravichandran, TSK,Priyadarshini, Niranjan, Abhirami னு நெறய பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.
எப்பவுமே ஒரு சிலர் வாழ்க்கைல ஒரு fairy tale அ expect பண்ணுவாங்க. அது என்னனா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா கடைசி வரையும் வாழனும் னு எதிர்பாப்பாங்க . ஆனா அந்த மாதிரி ஒரு வாழக்கை கிடைக்குமா ன்றது தான் பெரிய கேள்விக்குறியே. கல்யாணம் ஆனவங்க கிட்ட கேட்டுபாத்திங்கன்னா தெரியும், வாழக்கை smooth அ போறதெல்லாம் fairy tale ல தான் நடக்கும் reality ல அதுக்கு வாய்ப்புஇல்லை னு சொல்லுவாங்க. புருஷன் பொண்டாட்டி க்கு நடுவுல ஒரு சண்டை வந்துட்டா ரெண்டே ரெண்டு விஷயம் தான் நடக்கும். ஒன்னு மனக்கசப்பு ஏற்படும் இல்லனா நிரந்தரமா பிரிஞ்சி போய்டுவாங்க. ஆனா ஒரு சிலவங்க, மத்தவங்க நம்மள பத்தி என்ன சொல்லுவாங்க ன்ற பயத்துலயே கல்யாண வாழக்கை பிடிக்கலானாலும் சந்தோசமா இருக்கற மாதிரி ஒண்ணா சேந்து வாழுவாங்க இல்லனா கொழந்தைகளுக்காக வும் எல்லாத்தயும் பொறுத்துகிட்டு இருப்பாங்க.
இப்போ இந்த கதைல vignesh ravi யும் saranya ravichandran யும் கல்யாணம் பண்ணிக்கறாங்க. அதுவும் பெத்தவங்க சம்மதம் இல்லாம இவங்க ரெண்டு பேரும் காதல் கல்யாணம் பண்ணிக்கறாங்க. hero க்கு ஒரு director ஆகணும் னு ஆசை அப்புறம் heroine ஏற்கனவே ஒரு நல்ல வேலை ல தான் இருப்பாங்க. நாட்கள் போக போக இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல விரிசல் வர ஆரம்பிக்குது அதுக்கு காரணம் இவங்களோட work life தான். ஒரு கட்டத்துக்கு மேல இத பொறுத்துக்க முடியாது னு divorce பண்ணிக்கலாம் னு முடிவு எடுக்கறாங்க. ஆனா ஏதோ ஒரு காரணத்துனால இவங்களோட வாழக்கை தடமே மாறிபோய்டுது. கடைசில இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேந்தாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த படத்துல ரெண்டாவுத ஒரு couple அ காமிச்சிருப்பாங்க. இவங்க ரெண்டு பேரோட story ளையும் பசங்க தான் தப்பு பண்ணிருப்பாங்க, கடைசில பெத்தவங்க கிட்ட வந்து sorry யும் கேட்டுடுறாங்க. இது மூலமா பசங்க தான் எப்பவுமே தப்பு பண்ணுவாங்க அது reel அ இருந்தாலும் சரி real அ இருந்தாலும் சரி ன்ற மாதிரி காமிச்சிருக்காங்க.
vignesh ravi, தான் ஒரு director ஆகணும் ன்ற அவரோட journey அ ரொம்ப interesting அ director எடுத்துட்டு போயிருக்காரு னு தான் சொல்லி ஆகணும் . saranya ravichandhran ஓட நடிப்பும் super அ இருந்தது. கல்யாணத்துக்கு முன்னாடி இருக்கற காதல் க்கும் கல்யாணம் ஆனா ஒடனே இருக்கற காதல் ஓட வித்யாசத்தை ரொம்ப அழகா இந்த படத்துல வெளி படுத்தி இருக்காரு.
ஒரு எதார்த்தமான கதை தான் KA. MU. KA. PI . கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணாம பாருங்க.
No comments:
Post a Comment