Featured post

Allu Arjun’s Friendship Day Lesson: Real Success Is Taking Your Friends Along

 *Allu Arjun’s Friendship Day Lesson: Real Success Is Taking Your Friends Along* In cinema, success changes many things. Careers evolve. Equ...

Friday, 5 December 2025

அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான ஐமேக்ஸ் முன்பதிவுகள்

 *‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான ஐமேக்ஸ் முன்பதிவுகள் நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது! உங்கள் டிக்கெட்டை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!* 




இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன. 


இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று முதல் இந்தியா முழுவதும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா நிகழ்வாக கொண்டாடப்படும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் இருக்கைகளை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! ரசிகர்களுக்கு டிக்கெட் புக்கிங்கை எளிமையாக்கும் வகையில் ஐமேக்ஸில் முன்னணியில் இருக்கும் PVR INOX நிறுவனம் திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களை திறந்துள்ளது. 


PVR INOX உள்ளிட்ட திரையரங்குகள் செயலிகள், வலைதளங்கள் மற்றும் மார்க்கெட்டிங் சேனல்களில் டிஜிட்டல் ஒருங்கிணைப்புகளுடன் அவதார்-தீம் பிராண்டிங்கை அறிமுகப்படுத்தியுள்ளன. எனவே, ரசிகர்கள் தற்போது சினிமா செயலிகள், வலைதளங்கள் அல்லது நேரடியாக திரையரங்க கவுண்டர்களிலோ தங்களது ஐமேக்ஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.


‘அவதார்’ திரைப்படத்தின் மூன்றாவது அத்தியாயம் பண்டோரா உலகின் கலாச்சார மற்றும் உணர்ச்சி நிலப்பரப்பை விரிவுபடுத்தும் ஃபயர் குலத்தின் தலைவரான வராங்கை அறிமுகப்படுத்துகிறது.


‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment