Featured post

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar

 *Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins* Natural Star Nani is on a roll, havin...

Friday 3 February 2023

காதல் கண்டிசன்ஸ் அப்ளை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

*"காதல் கண்டிசன்ஸ் அப்ளை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!*


நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. 



இந்நிகழ்வினில் 


*நடிகர் தயாரிப்பாளர் நிதின் சத்யா பேசியதாவது..,*



"இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான ஒரு பீல் குட் திரைப்படம். இந்த படம் கோவிட் காரணமாக சிறிது தாமதமானது. ஆனால் படத்தில் நடித்த அனைவரும் இந்த படத்திற்காக தங்களது முழு ஆதரவையும் கொடுத்தனர். பலருடைய உத்வேகத்தாலும், உதவியாலும் இந்த படம் நன்றாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். நல்ல நட்புடன் சேர்ந்து நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்த படம்."


*பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியதாவது..,*



"ரவீந்தர் கலைஞர்களை மதிக்க கூடியவர். அவருடைய இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் எனது நண்பர், அவருக்கு இது தான் முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன."


*நடிகர் ராதாரவி பேசியதாவது..,*


"நிதின் சத்யா, ரவிந்தர் இருவரும் எனது நீண்ட கால நண்பர்கள். நிதின் போன்ற உழைப்பாளிகளுக்கு உதவுவது அனைவரது கடமை. திரைக்கலைஞர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர் ரவீந்தர். அவர் அழைத்ததால் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்."


*தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது...*



" காதல் படங்கள் இப்போது தமிழ் சினிமாவின் தேவை. தொடர்ந்து வெற்றிகரமான படங்களை எடுத்து வரும் தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். இந்த படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ், அடுத்து தோனியின் தயாரிப்பில் படம் இயக்குகிறார், அவர் திறமைசாலி, அவருக்கு எனது வாழ்த்துகள். இந்த படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது, வெற்றிபெற வாழ்த்துகள்."



*தயாரிப்பாளர் முரளி பேசியதாவது..,*



"இந்த படம் கோவிட் காலத்தில் மாட்டிகொண்டது. அதை தாண்டி தான் இந்த படம் இப்போது தயாராகி உள்ளது. இது போன்ற படங்கள் தான் இப்போது தேவை. லவ் டுடே போன்ற பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமையும் என்று நம்புகிறேன். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்."



*நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது..,*



"இந்த படம் எல்லோருக்கும் பிடித்தமான, ஜனரஞ்சகமான படமாக வந்து இருக்கிறது. இந்த படம் எல்லோருடைய வாழ்கையிலும் நடந்த ஒரு நிகழ்வாக இருக்கும். அதனால் எல்லோருக்கும் இந்த படம் ஒத்துப்போகும். படம் பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை கூறுங்கள். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி."



*தயாரிப்பாளர் CV குமார் கூறியதாவது..,*



"படத்தின் இசையமைப்பாளர் பல்வேறு திறமைகள் கொண்டவர், அவருக்கு எனது வாழ்த்துகள். நடிகர் மகத்துக்கு இந்த படம் வெற்றிப்படமாக அமைந்து அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் குவிய வாழ்த்துகள். தயாரிப்பாளருக்கு இந்த படம் வெற்றி படமாக அமைய வாழ்த்துகள்."



*நடிகர் அபிஷேக் பேசியதாவது..,*



"காதல் படங்கள் எடுப்பதற்கு ஒரு பொறுப்பு தேவை. படம் வெளியான பிறகு, ஒளிப்பதிவாளர் அனைவராலும் பேசப்படுவார். நிதின் சத்யா அனைவருக்கும் இடம் கொடுக்க ஆசைப்படுபவர். அனைவரையும் மேலே தூக்கி விட கூடியவர். இயக்குநர் உடைய அர்ப்பணிப்பு அனைவரையும், அவருடன் இணைந்து பயணிக்க வைக்கிறது. இந்த படத்திற்கு வெற்றிகள் குவிய வேண்டும். "


*ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து பேசியதாவது..,*



"எனக்கு முழு சுதந்திரமும், எனக்கு தேவையான அனைத்தையும் கொடுத்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் எனது நன்றிகள். இந்த படத்தில் நடித்த அனைவரும் அதிக ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்."


*இசையமைப்பாளர் தமிழ்மணி கூறியதாவது..,*



"எனக்கு வாய்ப்பளித்த தயரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. இந்தப் படம் நண்பர்களுடன் சேர்ந்து பயணித்த ஒரு படம். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்."


*நடிகை சனா கூறியதாவது..,*



"என்னை இந்த படத்தில் நடிக்க வைத்ததற்கு தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. மொழி தெரியாத எனக்கு காட்சிகளை சரியாக புரிய வைத்து, என்னை நடிக்க வைத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தாருங்கள்."



*இயக்குநர் R அரவிந்த் பேசியதாவது..,*



"புது இயக்குநர்களை வைத்து படம் எடுப்பதில் பொருளாதார சிக்கல் இருக்க தான் செய்கிறது. அதை தாண்டி தயாரிப்பாளர் நிதின் சத்யா, ரவீந்தர் தொடர்ந்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள், அதற்கு நன்றிகள். இது தொடர வேண்டும். இந்த படத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள். "


*நடிகர் மகத் கூறியதாவது..,*



"இது எனது 16 ஆவது படம், ஆனால் ஹீரோவாக முதல் படம். எனது நண்பர் நிதின் சத்யா, கோவிட் காலத்தில் என்னை அணுகி படம் பண்ணலாம் என்று கூறினார். இயக்குநர் அரவிந்த் உடன் பல ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன், அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி. இசையமைப்பாளர் ரமேஷ் இந்த படத்தில் அறிமுகமானது எனக்கு மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், நடிகர்கள் அனைவரும் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளனர். இந்த படம் பொருளாதார சிக்கலில் சிக்கி இருந்த போது, ரவீந்தர் தான் உதவினார். அவருக்கு எனது நன்றிகள். நிதின் சத்யா, ரவீந்தர் போன்ற ஆட்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை. அனைவருக்கும் நன்றிகள்."



*தயாரிப்பாளர் ரவீந்தர் கூறியதாவது..,*



 "நிதின் சத்யாவிற்கும், எனக்கும் இடையேயான புரிதல் சிறப்பானதாக இருக்கும். திரைப்படத்தை அதிக ஆர்வத்துடன் எடுக்க கூடியவர் நிதின். மகத் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை, விவேக் பிரசன்னா போன்ற ஆகச்சிறந்த நடிகர்கள் கொண்டாடப் பட வேண்டியவர்கள், இவர்கள் இந்த படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அறிவும், திறமையும் அதிகமாக உடையவர்கள். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் தயாரித்ததில் இந்த படம் தான் எனக்கு ஒரு லாபகரமான படமாக அமைந்துள்ளது. அனைவருக்கும் நன்றிகள்."


***

*Kaadhal Conditions Apply Audio Launch*



"Kaadhal Conditions Apply",  a trendy feel-good youthful romantic entertainer, produced by Shvedh, a Nitin Sathyaa Production House and is presented by Libra Productions Ravindhar Chandrasekaran. The film is directed by Aravind, and features Mahat in the lead role. While the film is all set to hit screens shortly, the audio launch was held this morning in Chennai that was attended by the eminent personalities and the film's crewmembers. 


Here are some excerpts from the occasion. 



Actor-Producer Nitin Sathya said, "This is a feel-good entertainer. The film was delayed due to COVID issues, but the entire team extended complete support towards the progression of project without any hurdles. The film has successfully shaped up with the support and encouragement of many good hearts. I thank everyone for supporting this project. This project has been shaped based on good friendship. I am sure everyone will love this film. Thank you."



Lyricist Madhan Karky said, "Ravindhran respects everyone equally. I wish him great success of this film. The film's music director is my close friend. I am surprised to hear that this film marks his musical debut.as the songs are excellent. 


Actor Radharavi said, "Both Nitin Sathya and Ravindhran are my close friends. Ravindar is such a good-hearted person, who comes to the aid of many actors and technicians in the industry. I came here for this event only for his invite. I wish him great success for this film."


Producer S.R.Prabhu said, 'Love stories have become need of hour in Tamil Cinema. I wish the producers for consistently churning out good quality films.. The film's music director Ramesh is directing a film produced by Dhoni's production. I wish him great success.. He is a great talent. The film has shaped up well as a final output. I wish great success for the film."



Producer Murali said, "The film has its hampering moments during the COVID period. The film has been successfully completed with the efforts of entire team.. Movies like Kadhal Conditions Apply are the need of hour. I strongly believe this movie will be a success like Love Today.. I wish whole team, a great success."



Actor Vivek Prasanna said, "The film has come out very well like a good entertainer.. This film will reflect some incidents in everyone's lives. This will be source of attraction for everyone. I request everyone to watch the movie and share your thoughts. I request everyone to support this movie.'


Producer C.V.Kumar said, "The film's music director is a multi-talented personality. I wish him great success. I wish Mahat, a great success of this film  and his upcoming lineups. I wish the entire team a good success."


Actor Abhishek said, "There needs to be a special responsibility for making love stories. The cinematographer will be appreciated after the film's release for his spellbinding visuals. Nitin Sathya has a great gesture of giving opportunities to everyone, and he elevates everyone.  The hard work and sincerity of director has made both of them journey together. The film should garner good success.'



Cinematographer Karthik Nallamuthu said, "I thank both director and producer for giving me complete creative freedom. Everyone in the team cooperated a lot that made the entire process of shooting smooth. I wish the entire team, a good success."



Music Director Tamizhmani said, 'I thank producer and director for giving this opportunity. This movie gave an experience of journeying together with friends. I wish success for the whole team."



Actress Sana said, "I thank both producers and director for making me a part of this movie. I thank director for giving me a chance in this movie in spite of my language barrier. I thank cinematographer for showing me beautifully in this movie. I thank everyone in the crew for their earnest support. I request you all to support this movie." 


Director R. Aravind said, "There are lots of financial challenges involved in projects made by new filmmakers. However, producers Nitin Sathya and Ravindhran have been consistently giving opportunities to many newcomers. I thank both for such an adorable gesture. This must continue. I thank everyone who journeyed together in this movie."




Actor Mahat said, " This is my 16th movie, by my first movie as hero. I was approached for this movie during the COVID time. I share a great bonding with director Aravind across the years. I am extremely happy for having worked with him in this movie. I am glad to see that Ramesh has debuted as music director with this movie. Both the actors and technicians have embellished the movie with their finest touch. When the movie was into financial issues, it was Ravindar sir who extended his helping hands. I thank him for his great gesture. Tamil cinema needs good hearted people like Nitin Sathya and Ravindhran together. I thank everyone for their earnest support."



Producer Ravindhar Chandrasekaran said, "There has always been a good understanding between me and Nitin Sathya. Nithin shows complete enthusiasm and energy into creation of films. Tamil cinema needs talented actors like Mahat. Actors like Vivek Prasanna have to be celebrated. I am happy to them performing in this movie. All the actors have done a tremendous job in this movie. The technicians in this movie are brilliant and talented. I strongly believe this movie will be a great success. This is only profitable movie that I have produced till now. I thank everyone."

No comments:

Post a Comment