4 ஆண்டுகள் கடந்து விட்டன, எனினும் இப்படம் எனக்கு நீங்கா நினைவுகளையும் ஆகச்சிறந்த பாடங்களையும் பெற்று தந்தன.
திரு. விவேக் அவர்களுடன் பணிபுரிந்த தருணங்கள் விலை மதிப்பற்றவை, சின்ன கலைவாணரின் சிரிப்பொலிகளும், உரையாடல்களும் இன்றும் என் மனதில் நிலைத்து கொண்டிருக்கிறது.
எங்களை போன்ற புது முகங்கள் மீது நம்பிக்கை மட்டும் வைக்காமல், அவ்வபோது தட்டியும் கொடுத்து இதை மற்றொரு படமாக இல்லாமல் தனித்துவம் ஆக்கியது அவருடைய விசாலமான மனது தான்.
இப்படத்தின் கதாநாயகனாக தான் இருந்த போதிலும் ஒவ்வொரு திரையிடலிலும், படம் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் என்னை முன்னிறுத்தி என் முகத்தை பார்வையாளர்களுக்கு வெளிச்சம் காட்டினார். இவை அனைத்தும் அவராக முன்வந்து செய்த செயல்கள், இது அவரின் ஒப்பற்ற குணத்திற்கு சான்றாகும் .
இவரின் தன்னலமற்ற செயல்கள், என்னை போன்ற பல இளைஞர்களுக்கு அவர் மரபை பின்பற்ற ஊக்குவிக்கின்றது.
பி.கு: வெள்ளைப்பூக்கள் வெளியாகி நாளையுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இப்படத்தை காணாதவர்கள் "அமேசான் ப்ரைமில்" காணலாம்.
No comments:
Post a Comment