Featured post

Gajanna Tamil Movie Review

Gajanna Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம gajana ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Vedhika, Inigo Prabhakaran, Chandini, Yogi B...

Saturday, 15 April 2023

தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச்

 தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச் செல்வன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை!


தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச் செல்வன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்! அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது...



தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கையை ஏற்று 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும், ஒன்றரை கோடி ரூபாயில் திரைப்பட நகரம் சீர்ப்படுத்தப்படும் என்று அறிவித்து தயாரிப்பாளர்களின் வாழ்வை ஏற்றம் காண அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த இளைஞர் நலத்துறை & விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும் தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்கிறார் தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச் செல்வன்.


மானியம் வழங்க பரிந்துரைக்கும் கம்பெனி பெயர்கள் மற்றும் திரைப்பட பெயர்கள்:


1. எஸ் கியூப் பிக்சர்ஸ் - கடைசி காதல் கதை


2. ஜி மீடியா - பவுடர்


3. எல்லோ சினிமாஸ் - ஓங்காரம் (வேலனின்)


4. கிரேக்பிரைன் ப்ரோடுசன் - நாட் ரீச்சபிள்


மேலே குறிப்பிட்டுள்ள திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கி உதவிட வேண்டும் மற்றும் சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு மேலும் பல திட்டங்களை வழங்கிட மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.....!


இப்படிக்கு,

தலைவர்,

தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம்.


தலைவர் : ஆர்.கே.அன்பழகன் (என்கிற)

அன்புச் செல்வன் 

துணை தலைவர் : ஜி.மணிரத்தினம்


செயலாளர் : ஏ.தனலட்சுமி

துணை செயலாளர் : டி.சபாபதி


பொருளாளர் : 

டி.மோகன் குமார்

துணை பொருளாளர் : கே.சேகர்


கெளரவ ஆலோசகர் : துரை ராமச்சந்திரன்

சட்ட ஆலோசகர் : சி.நித்திஷ் சேகர்


@GovindarajPro

No comments:

Post a Comment