Featured post

Vishal Officially Announces His Directorial Debut with Magudam (Telugu: Makutam)

*Vishal Officially Announces His Directorial Debut with Magudam (Telugu: Makutam) Under Super Good Films — A Diwali Message of Light, Respon...

Friday, 14 April 2023

புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை

 *புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் முதல் முறையாக புதிய ஓடிடி தளம் உதயம்*



*எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) ஓடிடி தளத்தை தொடங்கும் தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் சுதாகர் சோழங்கத்தேவர்*



திறமைமிகுந்த புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் முதல் முன்முயற்சியாக புது ஓடிடி தளம் விரைவில் அறிமுகமாகவுள்ளது. 


எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓடிடி தளத்தை தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா, தொழில்நுட்ப தொழில்முனைவோரும் ஓடிடி தளங்களின் கைதேர்ந்தவருமான சுதாகர் சோழங்கத்தேவர் ஆகியோர் இணைந்து அறிமுகப்படுத்தவுள்ளனர்.


இந்த புதிய முன்முயற்சி குறித்து ராஜேஷ் கண்ணா கூறுகையில், "உலகளவில் இன்று பல்வேறு ஓடிடி தளங்கள் உள்ளன. பெரும்பாலான ஓடிடி தளங்களில் பிரபலமானவர்கள் நடிப்பிலோ, இயக்கத்திலோ அல்லது தயாரிப்பிலோ உருவாகும் படங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகின்றன. புதுமுக இயக்குநர்கள், நடிகர்கள் அல்லது புதிய தயாரிப்பாளர்களின் படங்கள் இது போன்ற முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாவது குறைவாகவுள்ளது. இந்த இடைவெளியை நிரப்பும் நோக்கில் எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) மூலம் புதிய படைப்பாளிகளுக்கு சரியான களம் அமைத்து தரப்படும். இந்த ஓடிடி தளத்தின் பெயருக்கு நியாயம் சேர்க்கும் விதமாக, நல்ல திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கான இடமாகவும் எம்.எஸ்.எஃப் செயல்படும்," என்று தெரிவித்தார். 

 


புதிய தளத்தை குறித்து சுதாகர் சோழங்கத்தேவர் கூறுகையில், "எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில் வெளியாகும் புதிய படைப்பாளிகளின் படங்களும் ரசிகர்களிடம் கொண்டு வந்து சேர்க்கப்படும். இந்த நோக்கத்திற்காக புதிய படைப்பாளிகளுடன் இணைந்து பணிபுரிவோம். ரசிகர்கள் மற்றும் படைப்பாளிகள் கொண்டாடுவதற்கு ஏற்ற தளமாக எல்லைகளை கடந்து இது உருவாகி வருகிறது," என்றார். 



உள்ளடக்கத்திற்காக எம்.எஸ்.எஃப் உடன் கைகோர்த்துள்ள புரொடியூசர்பஜார்.காம் ( ProducerBazaar.com) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜி கே திருநாவுக்கரசு கூறுகையில், "கிரியேட்டர் எக்கனாமி இன்று அழைக்கப்படும் படைப்பாளிகளின் பொருளாதார சூழலியலை நோக்கி சென்று கொண்டு இருக்கும் இந்த தலைமுறையினருக்கு இது போன்ற ஒரு முயற்சி ஊக்கமளிப்பதாக இருக்கும்," என்று கூறினார். 


எம்.எஸ்.எஃப் ஒடிடி தளத்தை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதன் சேவைகள் விரைவில் துவங்க உள்ளன.  


திரைப்பட உரிமைகளை வாங்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, நைட் டிரைவ், ஸ்பேஸ் வாக்கர், ஹீரோயிக் லூசர்ஸ், தி ஹீஸ்ட் ஆஃப் தி செஞ்சுரி, ஷார்டா, ரன் ஹைட் ஃபைட், ஐ ரிமெம்பர் யூ,

பிரேக்கிங் சர்ஃபேஸ், தி டன்னல், ஹவ் டு மேக் அவுட், கேட்க்ராஷ், கேர்ள் வித் எ பிரேஸ்லெட் மற்றும் 32, மலாசனா ஸ்ட்ரீட். உள்ளிட்ட ஆங்கிலத் திரைப்படங்கள் மற்றும் பண்டூகியா (மராத்தி), சதரச்சா சலமான் (மராத்தி), கௌரி (மலையாளம்) மற்றும் ஆயுதம் (தெலுங்கு) ஆகிய படங்களின் பிராந்திய ஸ்ட்ரீமிங் உரிமையை எம்.எஸ்.எஃப் பெற்றுள்ளது. இன்னும் பல திரைப்படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. For More Details Contact: 7200093975/9940150708

No comments:

Post a Comment