Featured post

Game of Loans Movie Review

Game of Loans Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம game of loan படத்தோட review அ தான் பாக்க போறோம்.  Nivas Adithan, Abinay, Aadhvik, Esther னு ...

Monday, 17 April 2023

பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மெண்ட் கூட்டணியில்

 *பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மெண்ட் கூட்டணியில் தயாராகி வரும் ' ஹனு-மேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.*


படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் 'ஹனு -மேன்' திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளக் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டனர்.




படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காகவும், படத்தின் தரத்திற்காகவும் கடுமையாக உழைத்து வருகிறார்.


இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பையும் பெற்றது. அனுமன் ஜெயந்தி தினத்தன்று வெளியிடப்பட்ட அனுமன் சாலிசாவின் சக்தி வாய்ந்த காணொளி, இந்தியா முழுவதும் எதிர்பாராத அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க படக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 



தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, கன்னடம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகிறது. பான்- வேர்ல்ட் வெளியீடாக வரவிருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். 


'ஹனு-மேன்' அடிப்படையில் அஞ்சனாத்திரி எனும் கற்பனை இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் அனுமனின் சக்திகளை பெற்று, அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான்? என்பதுதான் படத்தின் கதை. இந்த திரைப்படத்தின் உள்ளடக்கம் உலகளாவியதாக இருப்பதால், இந்த திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுப் தேவ் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கலை இயக்கத்தை கவனிக்க, குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார்.

No comments:

Post a Comment