Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Monday, 17 April 2023

காதலில் சொதப்புவது எப்படி', 'ஜில் ஜங் ஜக்' மற்றும் 'அவள்

'காதலில் சொதப்புவது எப்படி', 'ஜில் ஜங் ஜக்' மற்றும் 'அவள்' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து எங்களின் நான்காவது தயாரிப்பு (Production No.4) குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களுடைய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை வெளியிட ஒத்துக் கொண்ட லெஜெண்ட் டாக்டர். கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி. எங்களுடைய அன்பு எப்போதும் அவருக்கு உண்டு.

Etaki Entertainment பெருமையுடன் 'சித்தா' (சித்தப்பா/ Uncle என்பதன் சுருக்கம்) படத்தை வழங்குகிறது. S.U. அருண் குமார் (பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி) இந்தப் படத்தை எழுதி இயக்க, பான் இந்தியன் ஸ்டார் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த அற்புதமான இணை கமர்ஷியலாகவும் வர்த்தக வட்டாரத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு குறித்தான விவரம் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.


படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல மொழிகளில் படம் வெளியாக இருக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களது அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து உள்ளோம்.


எங்களது ஷைனிங் ஸ்டார் சித்தார்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் Etaki Entertainment Team சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment