Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Thursday 2 November 2023

இந்த கிறிஸ்துமஸ் நன்நாளில் அன்பையும் நட்பையும் கொண்டாடும் ஒரு

 *இந்த கிறிஸ்துமஸ் நன்நாளில் அன்பையும் நட்பையும் கொண்டாடும் ஒரு அற்புதத்தை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி!!*






‘டங்கி  டிராப் 1’  ஷாருக்கின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டது, இது அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது !!


இந்தியத் திரையுலகின்  தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை  வழங்கியுள்ளார், தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான டங்கி  மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார்.


டங்கி  திரைப்படம், இந்த தலைமுறையில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும்,  இரண்டு மிகப்பெரும் திரைக் கலைஞர்களான SRK மற்றும் ராஜு ஹிரானி  ஆகிய இருவரும் இணையும் திரைப்படமாகும்!.  நமக்குள் அன்பான  நினைவுகளைத் தூண்டி, சினிமாவின் இனிமையையும், அதைக் கண்டுகளிக்கும் ஏக்கத்தையும் நம்முள் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்படம்.


இன்று வெளியிடப்பட்ட ‘டங்கி  டிராப் 1",  ராஜ்குமார் ஹிரானி அமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது, இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான்  டங்கி.  இப்படம்  உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும். 

 

இந்த வீடியோ ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட மிகவும் திறமையான  நடிகர்களின்,  வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், உங்களை ஒரு ரோலர்-கோஸ்டரில் பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

 

மனதை மயக்கும் ஒரு தனித்துவமான கதையுடன், திரையில் சாகசமிக்க ஒரு பயணத்தை, இந்த கிறிஸ்துமஸில் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக வழங்கவுள்ளது!


இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, "டங்கி" திரைப்படம்,  இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது.


https://www.youtube.com/watch?v=LOzucm1jbzs&ab_channel=RedChilliesEntertainment

No comments:

Post a Comment