Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Friday, 3 November 2023

ஆக்‌ஷன் அட்வென்சராக உருவாகியுள்ள 'Kingdom of the planet of the apes

 *ஆக்‌ஷன் அட்வென்சராக உருவாகியுள்ள 'Kingdom of the planet of the apes' படத்தின் முதல் டிரெய்லர் மற்றும் டீசர் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது!*




20th செஞ்சுரி ஸ்டுடியோஸின் புதிய ஆக்‌ஷன் அட்வென்சர் படமான 'கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்'ஸின் புதிய டிரெய்லர் மற்றும் டீசர் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டுடியோஸ் குளோபல், எபிக் ஃப்ரான்ஸிஸின் புதிய வருகையான இது விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


சீசரின் ஆட்சியைத் தொடர்ந்து எதிர்காலத்தில் மனிதர்கள் பல ஏப்ஸ்களை ஆதிக்கம் செய்யத் தொடங்கினர். இதனால், தற்போது அவை மனிதர்கள் நிழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்களது சாம்ராஜியத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு முதிர்ந்த ஏப்ஸ் முன்னெடுக்கிறது. இந்த நிலையில், இவர்கள் கூட்டத்தில் உள்ள ஒரு இளம் ஏப்ஸ் பயங்கரமான ஒரு பயணத்தை மேற்கொள்கிறது. அது தங்களது கடந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் மற்றும் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான எதிர்காலத்தை வரையறுக்கும் தேர்வுகளைச் செய்யவும் இது நினைக்கிறது. 


’கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ படத்தை வெஸ் பால் (’மேஸ் ரன்னர்’ டிரையாலஜி) இயக்கியுள்ளார் மற்றும் ஓவன் டீக் (’ஐடி’), ஃப்ரேயா ஆலன் (’தி விட்சர்’), கெவின் டுராண்ட் (’லாக் & கீ’) , பீட்டர் மேகன் (’ஷேம்லஸ்’) மற்றும் வில்லியம் ஹெச். மேசி (’பார்கோ’) ஆகியோர் படத்தில் உள்ளனர். இதன் திரைக்கதையை ஜோஷ் ப்ரைட்மேன் (’வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்’) மற்றும் ரிக் ஜாஃபா & அமண்டா சில்வர் (’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’) மற்றும் பேட்ரிக் ஐசன் (’ப்ரே’), ரிக் ஜாஃபா & அமண்டா சில்வர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. இதன் தயாரிப்பாளர்கள் வெஸ் பால், ஜோ ஹார்ட்விக், ஜூனியர் (’தி மேஸ் ரன்னர்’), ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜேசன் ரீட் (’முலான்’), பீட்டர் செர்னின் (’தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ டிரயாலஜி) மற்றும் ஜென்னோ டாப்பிங் (’போர்ட் வி. ஃபெராரி’) நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.


20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா திரையரங்குகளில் ‘கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ விரைவில் வெளியிடுகிறது.


*Tamil Trailer: https://youtu.be/bNLDE-bQ95g*

No comments:

Post a Comment