Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Thursday 13 April 2023

தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராக

 Ref. No. TFAPA/441


*ஏப்ரல் 13, 2023*


*தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராக மூன்றாம் முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட                               திரு. ஆர்.கே. செல்வமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.*



தமிழ்த்திரையுலகில் மிக முக்கிய அங்கமான FEFSI, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட திரு ஆர்.கே. செல்வமணி அவர்களின் தலைமையில் கடந்த சில வருடங்களாக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் FEFSI-யின் ஊழியர்களின் நலனுக்காக அவர் எடுத்த பல முயற்சிகள் நம் பாராட்டுக்குரியவை. 


தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கங்களுடன் இணக்கமாக பல வருடங்களாக அவர் பணியாற்றி வருகிறார். 2022-ல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்களுக்கும் FEFSI-க்கும் ஏற்பட்ட புதிய சம்பளங்களின் ஒப்பந்தத்திற்கு மிக முக்கியமான காரணம் திரு. ஆர்.கே. செல்வமணி அவர்கள். 


அனைவரையும் ஒருங்கிணைத்து பயணிக்கும் ஆற்றல், ஆளுமை மற்றும் பல திறன்கள் கொண்ட திரு. ஆர்.கே. செல்வமணி அவர்கள் FEFSI-யின் தலைவராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை. 


திரு. ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து பயணிப்பதில் தமிழ்த்திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமிதம் கொள்கிறது.


வாழ்த்துக்களுடன்,


தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில்,




பாரதிராஜா ,

தலைவர்

 


T.G. தியாகராஜன்,                                          

துணை தலைவர்



T.சிவா,                                பொது செயலாளர்

No comments:

Post a Comment