Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Tuesday, 20 August 2024

நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’

 *நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து கணேஷ் & தஸ்ரதி கதாபாத்திரங்களுக்கான அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது!*




ஒரு திரைப்படத்திற்கான பங்களிப்பு முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்களையும் தாண்டி துணை நடிகர்கள் மற்றும் அவர்களின் வலுவான கதாபாத்திரங்களின் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இதன் மீது நேர்மையான நம்பிக்கை காரணமாக, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களின் நடிப்பையும் சிறப்பிக்கும் வகையில் அவர்களின் கதாபாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. 


படம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் தருவாயில் படத்தில் நடித்துள்ளவர்களின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதில் படக்குழு முனைப்புடன் உள்ளது. இந்த வரிசையில் நடிகர்கள் கணேஷ் மற்றும் தஸ்ரதியும் இணைந்துள்ளனர். 


இயக்குனர் மகிழ் திருமேனி கூறும்போது, “கணேஷ் மற்றும் தஸ்ரதியின் கதாபாத்திரங்கள் சிறியதாக இருந்தாலும் படத்தின் கதைக்கு முக்கியமானவை. அதனால், ஆடிஷன் மூலம் திறமையான நபர்களைத் தேர்ந்தெடுத்தோம். அனைத்து நடிகர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வதில் அஜித் சார் ஆர்வம் காட்டி வருகிறார். அதனால்தான் அவர்களுக்கென தனிப்பட்ட கேரக்டர் போஸ்டர்களை வெளியிடும் யோசனையை அவர் முன்மொழிந்தார். வளர்ந்து வரும் நடிகர்கள்களான கணேஷ் மற்றும் தஸ்ரதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அஜித்திடம் இருந்து பாராட்டுக்களை வாங்கினார்கள். படம் வெளியான பிறகு இவர்களின் நடிப்பு மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது உறுதி” என்றார்.


மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்திருக்கிறார். த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். மற்ற நட்சத்திர நடிகர்கள் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா,  நிகில், ரவி ராகவேந்திரா, சஞ்சய், ரம்யா, காசிம், ஜவன்ஷிர், ரஷாத் சஃபராலியேவ், விதாதி ஹசனோவ், துரல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  


சன் டிவி சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது மற்றும் நெட்ஃபிலிக்ஸ் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் திரையரங்குக்கு பிந்தைய ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது.


*தொழில்நுட்ப குழு:*


இயக்குநர் - மகிழ் திருமேனி,

இசை - அனிருத்,

ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ்,

எடிட்டர் - என்.பி.ஸ்ரீகாந்த்,

கலை இயக்குநர் - மிலன்,

ஸ்டண்ட் மாஸ்டர் - சுப்ரீம் சுந்தர்,

ஆடை வடிவமைப்பாளர் - அனு வர்தன்,

நிர்வாகத் தயாரிப்பாளர் -சுப்ரமணியன் நாராயணன்,

தயாரிப்பு நிர்வாகி - ஜே கிரிநாதன் / ஜே ஜெயசீலன்,

ஸ்டில்ஸ் - ஜி. ஆனந்த் குமார்,

விளம்பர வடிவமைப்பாளர் - கோபி பிரசன்னா,

விஎஃப்எக்ஸ்- ஹரிஹரசுதன்,

மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா,

ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ் - ஜிகேஎம் தமிழ் குமரன்,

தயாரிப்பாளர் - சுபாஸ்கரன்

No comments:

Post a Comment