Featured post

RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park

 RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park Celebrates 12th Anniversary with “12x12x12 Journey” Them...

Saturday, 24 August 2024

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், "2K

 இயக்குநர் சுசீந்திரன் இயக்கும்,  "2K லவ்ஸ்டோரி" படப்பிடிப்பு நிறைவடைந்தது !! 








38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து, அசத்திய "2K லவ்ஸ்டோரி" படக்குழு !! 


இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய தலைமுறை வாழ்வை சொல்லும் காதல் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி" விரைவில் திரையில் !!  



City light pictures தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான,   "2K லவ்ஸ்டோரி '  படத்தின் முழுப்படப்பிடிப்பும், நிறைவடைந்தது. படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். 



தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம், ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில், இப்படத்தை இயக்கியுள்ளார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. 


வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 


புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில்  மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன்  பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 


சமீபத்தில் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு,  கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலகட்டத்திற்கு முன்பாகவே 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து, அசத்தியுள்ளது படக்குழு. 


இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார். 


இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசர்  மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்


தொழில் நுட்ப குழு 


இயக்கம் - சுசீந்திரன்

ஒளிப்பதிவு -V.S.ஆனந்த கிருஷ்ணன் 

இசை - டி.இம்மான்

பாடல் வரிகள்  - கார்த்திக் நேதா 

எடிட்டர் - தியாகு 

கலை - சுரேஷ் பழனிவேலு 

நடனம் - ஷோபி பால்ராஜ்

ஆடை வடிவமைப்பாளர் - மீரா

போஸ்டர் வடிவமைப்பாளர் - கார்த்திக் 

தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன் 

தயாரிப்பாளர் - விக்னேஷ் சுப்ரமணியன்

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

மார்க்கெட்டிங் & புரமோசன் -  DEC

No comments:

Post a Comment