Featured post

Meiyazhagan has no action-packed sequences,

 *“Meiyazhagan has no action-packed sequences, but is an out-and-out commercial film” - Actor Karthi* *“Director Prem is never smug-bitten b...

Saturday 17 August 2024

நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’

 *நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து திறமையான நடிகர் நிகிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது!* 






நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடித்துள்ள நடிகர் நிகிலின் கதாபாத்திரத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது.


இயக்குநர் மகிழ்திருமேனி நிகில் பற்றி கூறும்போது, “திறமையான புதிய நடிகர்கள் கிடைப்பது ஒரு இயக்குநருக்கு மகிழ்ச்சியான விஷயம். அவர்களின் திறமையை மற்றவர்கள் பாராட்டும்படியான கதாபாத்திரத்தில் பெரிய திரையில் கொண்டு வருவது எங்களுக்கும் பெருமையான தருணம்தான். ’விடாமுயற்சி’ படத்தில் இளம் திறமையான நடிகர்கள் பலர் பணிபுரிந்துள்ளனர். நிகில் தனது வாய்ப்பை இந்தப் படத்தில் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். நிகிலை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தக் கதாபாத்திரத்திற்காக தனது ஆன்மாவைக் கொடுத்து நடித்துள்ள நிகிலுடைய நடிப்பு நிச்சயம் பாராட்டப்படும். நான் முன்பே குறிப்பிட்டது போல், நடிகர்களை தேர்வு செய்யும் விஷயத்தில் அஜித்குமார் தலையிடுவதில்லை. தனது கதாபாத்திரத்திற்காக நிகில் கொடுத்த அர்ப்பணிப்பு மற்றும் அவரது நடிப்பைப் பார்த்த பிறகு அஜித்குமார், நிச்சயம் நிகிலின் நடிப்பு பார்வையாளர்களால் பேசப்படும் என்று பாராட்டினார்” என்றார். 

படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது, விரைவில், அடுத்தடுத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அறிவிப்புகளை படக்குழு வெளியிட உள்ளது. 

த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். மற்ற நட்சத்திர நடிகர்கள் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, ரவி ராகவேந்திரா, சஞ்சய், தஸ்ரதி, ரம்யா, காசிம், ஜவன்ஷிர், ரஷாத் சஃபராலியேவ், விதாதி ஹசனோவ், துரல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  


சன் டிவி சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது மற்றும் நெட்ஃபிலிக்ஸ் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் திரையரங்குக்கு பிந்தைய ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது.


*தொழில்நுட்ப குழு*:


இயக்குநர் - மகிழ் திருமேனி,

இசை - அனிருத்,

ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ்,

எடிட்டர் - என்.பி.ஸ்ரீகாந்த்,

கலை இயக்குநர் - மிலன்,

ஸ்டண்ட் மாஸ்டர் - சுப்ரீம் சுந்தர்,

ஆடை வடிவமைப்பாளர் - அனு வர்தன்,

நிர்வாகத் தயாரிப்பாளர் -சுப்ரமணியன் நாராயணன்,

தயாரிப்பு நிர்வாகி - ஜே கிரிநாதன் / ஜே ஜெயசீலன்,

ஸ்டில்ஸ் - ஜி. ஆனந்த் குமார்,

விளம்பர வடிவமைப்பாளர் - கோபி பிரசன்னா,

விஎஃப்எக்ஸ்- ஹரிஹரசுதன்,

மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா,

ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ் - ஜிகேஎம் தமிழ் குமரன்,

தயாரிப்பாளர் - சுபாஸ்கரன்

No comments:

Post a Comment